தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே இல்லை என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார். அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னையில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் ஒபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட கட்சி பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி “சட்டமன்றத்தேர்தலில் அதிமுக - திமுகவிற்கு இடையேதான் போட்டி. தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே இல்லை. அவர்கள் அதிமுக அல்லது திமுக முதுகில் ஏறிதான் பயணம் செய்ய வேண்டும். அதிமுகவில் சிலீப்பர் செல்களுக்கு வாய்ப்பே இல்லை. சிலர் வெளியே வருவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை. அவர் வெளியே வந்தாலும் அவருக்கு ஆயிரம் பிரச்னைகள் உள்ளது” எனத் தெரிவித்தார்.
http://dlvr.it/RqDWWh
Saturday 9 January 2021
Home »
» ''அதிமுக - திமுகவிற்கு இடையேதான் போட்டி: தேசிய கட்சிகள் பொருட்டே இல்லை'' - கே.பி.முனுசாமி