கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் கேரள நாளிதழ் ஒன்று, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ரூ.2,000 கோடி மதிப்பிலான சொத்துகளை கேரளத்தில்வைத்திருப்பதாக செய்தி வெளியிட்டது. இது, தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஓ.பன்னீர்செல்வம்
இந்தநிலையில், தி.மு.க அலுவலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன்,``கேரள பத்திரிகை ஒன்று, ஓ.பி.எஸ் ரூ.2,000 கோடி மதிப்பிலான சொத்துகளை கேரளத்தில் வைத்திருப்பதாக செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். இந்த ஊழல் குற்றச்சாட்டு குறித்து வருமான வரித்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஓ.பன்னீர்செல்வத்தின் ஊழலை எடுத்துரைத்து, வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க பிரசாரம் மேற்கொள்ளும். தி.மு.க தலைவர் ஸ்டாலின், அ.தி.மு.க-வின் ஊழல் குறித்த பட்டியலை கடந்த சில நாள்களுக்கு முன்னர் ஆளுநரிடம் வழங்கியிருக்கிறார். இரண்டாம்கட்டப் பட்டியல் தயாராகிவருகிறது. அதில், ஓ.பி.எஸ் குறித்த ஊழல்கள் இடம் பெறும்” என்றார்.
Also Read: `ஐடியா' பிரஷாந்த் கிஷோர், `ஐ யம் வெயிட்டிங்' தங்க தமிழ்ச்செல்வன் - கழுகாரின் அரசியல் அப்டேட்ஸ்!ஜெய பிரதீப்
இந்தநிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் இளையமகன் ஜெயபிரதீப், `சவாலுக்குத் தயாரா?’ என்ற தலைப்பில் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``நாங்கள், கேரள மாநிலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கருக்கு மேல், கோடிக்கணக்கான ரூபாயில் சொத்துகளைச் சேர்த்துவைத்துள்ளோம் என்று, அங்கு வெளியான பத்திரிகை செய்தியைச் சுட்டிக்காட்டி, பொய்க் குற்றச்சாட்டுகளை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார் தங்க தமிழ்ச்செல்வன்.
இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். கேரள மாநிலத்துக்கு நான் வருவதற்குத் தயாராக இருக்கிறேன். நாங்கள் உண்மையாகவே சொத்து சேர்த்துவைத்திருக்கிறோம் என்று ஆதாரபூர்வமாக ஒரு சதுர அடி நிலம் இருக்கிறது என்று நிரூபித்தால்கூட, நான் எனது சொத்துகள் அனைத்தையும் அவரிடம் கொடுத்துவிடுகிறேன். அப்படி அவர் நிரூபிக்கத் தவறினால், இனி அவர் பத்திரிகையாளர் சந்திப்பைத் தவிர்க்க வேண்டும். அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும். அவர் தயாராக இருக்கிறாரா என்று பத்திரிகை நண்பர்கள், கேட்டுச் சொல்லுங்கள்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.தங்க தமிழ்ச்செல்வன்
Also Read: தேனி: ஓ.பி.எஸ்-ஸுடன் மோதும் தங்க தமிழ்ச்செல்வன்? - தி.மு.க-வில் புதிய பொறுப்பு
இது தொடர்பாக தங்க தமிழ்ச்செல்வனிடம் போனில் பேசினோம். ``கேரளாவில் ஓ.பி.எஸ் அதிக சொத்துகள் வாங்கிக் குவிக்கிறார் என, அப்போதைய கேரள ஆளும் தரப்பு, ஜெயலலிதாவிடம் கூறியதாக ஒரு செய்தியை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். தற்போது கேரள பத்திரிகை ஒன்று, ரூ.2,000 கோடி அளவில் கேரளாவில் சொத்துகள் வைத்திருக்கிறார் ஓ.பி.எஸ் என செய்தி வெளியிட்டிருக்கிறது. அதை மேற்கோள் காட்டித்தான் நான் பேசினேன். எனக்கு சவால்விடுப்பதெல்லாம் இருக்கட்டும்... முதலில் கேரள பத்திரிகை சொன்ன குற்றசாட்டுக்கு பதில் சொல்லுங்கள். அப்புறம் சவால்விடலாம். சொன்ன குற்றச்சாட்டுக்கு இதுவரை எந்த பதிலும் சொல்லாமல், அதைச் சுட்டிக்காட்டி பேசிய எனக்கு சவால்விடுக்கிறாராம்” என்றார் சிரித்துக்கொண்டே.
http://dlvr.it/Rr2YXL
Thursday 21 January 2021
Home »
» `குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லுங்க; அப்புறம் சவால் விடலாம்!’ - ஓ.பி.எஸ் மகனுக்கு தங்கம் பதில்