தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணைய அதிகாரி சத்யபிரதா சாகு, இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டு உள்ளார். தமிழகத்தில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6.26 கோடியாக உள்ளது. அதில் 3.08 கோடி ஆண் வாக்காளர்களும், 3.18 கோடி பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 7,246 வாக்காளர்களும் உள்ளனர். 18 முதல் 19 வயதை சேர்ந்தவர்களில் 4.80 லட்சம் நபர்கள் ஆண்களாகவும், 4.16 லட்சம் நபர்கள் பெண்களாகவும் உள்ளனர். முதன் முறையாக வாக்களிக்க தகுதி பெற்றவர்களாக 8,97,694 நபர்கள் புதிதாக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் உள்ளது. அங்கு 6,94,845 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதி துறைமுகம் உள்ளது. அங்கு 1,76,272 வாக்காளர்கள் உள்ளனர் கவுண்டம்பாளையம், மாதவரம், மதுரவாயல், ஆவடி, பல்லாவரம் உள்ளிட்ட தொகுதிகளில் தலா 4 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். 47 வெள்நாட்டு வாழ் தமிழர்களும் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.
http://dlvr.it/Rqyb3J
Wednesday 20 January 2021
Home »
» வெளியானது வாக்காளர் பட்டியல்: ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம்