No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news pape,no 1 tamil news website, tamil news paper, tamil newspaper, tamil daily newspaper, tamil daily,national tamil daily, tamil daily news, tamil news, tamil nadu news, tamilnadu news paper, free tamil news paper, tamil newspaper website, tamil news paper online, breaking news headlines,tamil news paper, current events, latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news, top news, lifestyle news, daily news update, regional newspapers, regional newspapers India, indian newspaper, indian daily newspaper, indian newspapers online, indian tamil newspaper, national newspaper, national daily newspaper,tamil news paper, national newspaper online, morning newspaper, daily newspaper, daily newspapers online,Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News ,llive tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture

Sunday 28 February 2021

மகாராஷ்டிரா: பொது இடங்களில் பெண்களிடம் அத்துமீறல்; யூடியூபில் ஆபாச வீடியோ! - சிக்கிய 3 பேர்

பார்வையாளர்களை கவரும் விதமாக வீடியோக்களை தயாரித்து அதனை யூடியூபில் பதிவேற்றம் செய்து, அதன் மூலம் கிடைக்கும் விளம்பர வருவாயை யூடியூப் நிறுவனம், பதிவேற்றுபவர்களுடன் பகிர்ந்த் கொள்கிறது. வீடியோ ரீச் பொறுத்து பணம் கிடைக்கும். பெண்களும் அதிகளவில் யூடியூப் சேனல் ஆரம்பித்து தங்களின் திறமைகளை வீடியோவாக பதிவு செய்து, அதனை பதிவேற்றி சம்பாதிக்கின்றனர். சிலர் இந்த யூடியூப் சேனலை தவறான வழிகளில் பயன்படுத்துகின்றனர். கொரோனா காலத்தில் வருமானம் இழந்த பலர் என்னென்னவோ தொழில் செய்து சம்பாதித்தனர். இதில் 3 இளைஞர்கள் சேர்ந்து யூடியூப்பை தவறாக பயன்படுத்தி கோடிகளில் சம்பாதித்துள்ளனர். மும்பையை சேர்ந்த 3 பேர், பொது இடங்களில் தனியாக வரும் இளம்பெண்களிடம் ஆபாசமாக அத்துமீறுவதுடன், அதனை தங்களது மொபைல் போனில் வீடியோ எடுத்து, ஆபாசமாக பேசி யூடியூப்பில் பதிவேற்றம் செய்து சம்பாதித்து வந்துள்ளனர். கொரோனா காலத்தில் வேலை இல்லாத காரணத்தால் முகேஷ் குப்தா என்ற வாலிபர் தனது நண்பர்கள் ஜிதேந்திர குப்தா, குமார் ஆகியோரை சேர்த்துக்கொண்டு இக்காரியத்தில் ஈடுபட்டுள்ளார்.சித்தரிப்பு படம் பாந்த்ரா, ஜுகு, அக்‌ஷா பீச், மெரைன் லைன் மற்றும் முக்கிய கார்டன்களில் இந்த வீடியோக்கள் எடுக்கப்பட்டுள்ளது. தனியாக வரும் பெண்களிடம் திடீரென அத்துமீறுவர். அதனை ஒருவர் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்துக்கொண்டிருப்பார். அப்போது எதாவது பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தால், யூடியூப்பில் போடுவதற்காகவும் பொழுதுபோக்கு நோக்கத்தில் இந்த வீடியோ எடுக்கப்படுவதாக சொல்லி சமாளித்து விடுவர். அதோடு தனியாக வரும் பெண்களிடம் நயமாக பேசி யூடியூப் சேனலுக்கு நடித்துக் கொடுத்தால் எதிர்காலத்தில் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகளை தெரிவிப்பர். அவர்களின் வலையில் விழும் பெண்களிடம் அத்துமீறுவதுடன் ஆபாசமாக பேசி அதனை அப்படியே யூடியூப் சேனல் மற்றும் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துவிடுவர். 7 முதல் 8 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோக்களுக்கு பெண்களுக்கு ரூ. 1,000 முதல் ரூ. 1,500 வரை பணமும் கொடுத்துள்ளனர். இதன் மூலம் முகேஷ் குப்தா 2 கோடி வரை சம்பாதித்துள்ளார். மொத்தம் 300 வீடியோக்களை பதிவேற்றம் செய்து இருக்கிறார்கள். இந்த வீடியோக்களை பதிவேற்றம் செய்ய 17 யூடியூப் சேனல்கள் மற்றும் பேஸ்புக் பக்கங்களை உருவாக்கி இருக்கின்றனர். அவர்களின் யூடியூப் சேனல்களை 15 கோடி பேர் பார்த்துள்ளனர். அதோடு வீடியோ எடுப்பதாக ஆசை வார்த்தை கூறி மானபங்கம் செய்ததாக மைனர் பெண் ஒருவர் உட்பட 5 பெண்கள் மூன்று பேருக்கும் எதிராக போலீஸில் புகார் செய்தனர். ஆபாசம் மற்றும் ஆபாசமான வார்த்தைகள் கொண்டு வீடியோக்களை எடுத்து பதிவேற்றம் செய்துள்ளனர். யூடியூப் போலீஸாரின் சைபர் பிரிவு உடனே விசாரணையில் இறங்கினர். இதில் முகேஷ்குப்தாவும் அவரது இரண்டு கூட்டாளிகளும் பிடிபட்டுள்ளனர். குப்தா தானேயில் வசிக்கிறார். அவர்களின் கூட்டாள்கள் இரண்டு பேரும் கல்லூரியில் படித்துவிட்டு குராரில் தங்கி இருக்கின்றனர். குப்தா இது போன்ற காரியத்தில் ஈடுபட்டு இருப்பது அவரது வீட்டில் உள்ளவர்களுக்கே தெரியவில்லை. குப்தா சொந்தமாக டியூசன் சென்டர் ஒன்றை நடத்தி வந்தார். அதில் 300 பேர் படித்து வந்தனர். அவரது டியூசனில் படித்த மாணவிகளையும் வீடியோ எடுக்க பயன்படுத்தினாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். கொரோனா காலத்தில் டியூசன் சென்டரை மூடவேண்டிய நிலை ஏற்பட்டது. யூடியூப் வருமானத்தின் அனைத்து பகுதியும் குப்தாவிற்கு சென்றுள்ளது. போலீஸார் முகேஷ் குப்தா மற்றும் அவரது கூட்டாளிகள் ஜிதேந்திர குப்தா மற்றும் குமார் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 5 லேப்டாப், மொபைல் போன்கள் மற்றும் கேமரா போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்களின் யூடியூப் சேனல்களை முடக்க போலீஸார் தேவையான நடவடிக்கை எடுத்துள்ளனர். முகேஷ் குப்தா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 10வது வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/Rtg9BB
Share:

சூறாவளி போல் கொசுக்கள் கூட்டம்.. அதிர்ந்து போன வாகன ஓட்டிகள்: வைரல் வீடியோ

அர்ஜென்டினாவின் சாலையில் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த வாகன ஓட்டிகள், தொலைவில் சூறாவளி போல் தோன்றிய கொசுக் கூட்டங்களை கண்டு திகைத்துப் போயினர். அர்ஜென்டினா சாலையில் வாகன ஓட்டுநர்கள் வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருக்கையில், சூறாவளி போன்று ஒரு காட்சி தென்பட்டுள்ளது. இதனைக்கண்ட ஓட்டுநர்கள் குழப்பமடைந்துள்ளனர். இதனையடுத்து அதன் அருகில் சென்றபோது அது கொசுக்கள் சேர்ந்து கூட்டமாக சூறாவளி போன்று காட்சியளித்தது தெரியவந்துள்ளது. தரையிலிருந்து எழுந்த கொசுக் கூட்டங்கள் துாரத்திலிருந்து பார்க்க ஒரு சூறாவளியை போலவே இருந்துள்ளது. சாலையில் சென்று கொண்டிருந்த பயணியால் எடுக்கப்பட்ட இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவிவருகிறது. மேலும் இதுகுறித்து அர்ஜென்டினா ஆய்வக அறிவியலாளர் ஒருவர், இது கவலைப்படக்கூடிய விஷயம் இல்லை என்று தெரிவித்துள்ளார். பெருமழையினால் ஏற்பட்ட வெள்ளம் தேங்கியிருப்பதால் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார். மேலும் இதனை பார்ப்பதற்கு பயங்கரமானதாக தெரிந்தாலும் மனிதர்களுக்கு அவற்றால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்துள்ளார். இதனை உடனடியாக அழிப்பதற்கான நடவடிக்கையை தற்போது மேற்கொள்ள தேவையில்லை. அவை 15 தினங்களில் தானாகவே உயிரிழந்து விடும் என்றும் தெரிவித்திருக்கிறார். 'Tornados' de mosquitos en la Ruta 74 que conecta General Madariaga con Pinamar. ???Vía @FMLaMarea. pic.twitter.com/ImPGksJI80 — Christian Garavaglia (@ChGaravaglia) February 24, 2021
http://dlvr.it/RtfNRs
Share:

சேவல் சண்டையில் விபரீதம்: காலில் கத்தி கட்டப்பட்ட சேவல் தாக்கி உரிமையாளர் உயிரிழப்பு!

சேவல் சண்டையின் போது மிரண்டு போன சேவல் ஒன்று பறந்தபோது அதன் காலில் கட்டியிருந்த கத்தி சேவலின் உரிமையாளரின் உடம்பை பதம் பார்த்தது. தெலங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தில் உள்ள லோத்தனுர் என்ற கிராமத்தில் சேவல் சண்டை விடுவதில் 16 பேர் ஈடுபட்டிருந்தனர். அதில் பங்கேற்ற சேவல் ஒன்றின் காலில் கூர்மையான கத்தி கட்டப்பட்டிருந்தது. போட்டிக்கு தயார்படுத்தப்பட்டபோது அந்த சேவல் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றது. அதை உரிமையாளர் பிடிக்கவே, அந்த சேவல் தன் கால்களால் அவரை தாக்கியது. அப்போது காலில் கட்டப்பட்டிருந்த கத்தி அவரின் உடம்பை பதம் பார்த்தது. படுகாயமடைந்த அவர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அதிக ரத்தம் வெளியேறியதால் அவர் உயிரிழந்தார். பலியானவர் அந்த சேவல் சண்டையை ஏற்பாடு செய்தவர்களில் ஒருவர் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து சட்டவிரோதமாக இந்த போட்டியை ஏற்பாடு செய்த மீதமுள்ள 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருப்போரை தேடி வருகின்றனர். மேலும் சேவல்களை பறிமுதல் செய்து கோழிப் பண்ணையில் விட்டனர். சேவல் சண்டைக்காகவே பிரத்யேகமாக சேவல்கள் வளர்க்கப்பட்டு தயார் செய்யப்படுகின்றன. இது போன்ற சேவல்களின் கால்களில் 7.5 செ.மீ நீளம் கொண்ட கத்திகளை கட்டி, எதிராளியின் சேவல் கொல்லப்படும் வரை சண்டையிட செய்கின்றனர். இதற்காக சேவல்களின் மீது பணம் வைத்து சூதாடுகின்றனர். இது போன்ற சண்டைகளில் ஓராண்டில் ஆயிரக்கணக்கான சேவல்கள் உயிரிழப்பதாக விலங்கு நல ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
http://dlvr.it/RtfNNt
Share:

Saturday 27 February 2021

“கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால்...” - சக்கர நாற்காலி விவகாரம் குறித்து கமல் விளக்கம்

சக்கர நாற்காலி கருத்து குறித்து மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். சென்னை தாம்பரத்தில் சில நாட்களுக்கு முன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதில், ஆரோக்கியமாக இருக்கும் போதே மக்கள் பணியாற்ற விரும்புவதாகவும், சக்கர நாற்காலியில் வந்து யாரையும் தொந்தரவு செய்ய மாட்டேன் என்றும் கமல்ஹாசன் பேசியிருந்தார். இந்த பேச்சு மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் முதுமையை கேலி செய்வதாக இருப்பதாகவும், கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் எதிர்ப்பு குரல்கள் எழுந்துள்ளன. இதற்கு விளக்கமளித்துள்ள அவர், தன்னுடைய முதுமையைப் பற்றி மட்டுமே பேசியதாகவும், கருணாநிதி மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “யார் கோபப்பட்டாலும் அவர்கள் வயதில் சிறியவராகவும், அனுபவத்தில் சிறியவராகவும், அறிவில் சிறியவராகவும் இருப்பார்கள் என்று கருதுகிறேன். கருணாநிதி மீது எனக்கு இருக்கும் மரியாதை அதிகம். கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால் நான் சொன்னதின் உள்ளர்த்தம் அவருக்கு புரிந்திருக்கும். சக்கர நாற்காலியில் அவர் அமர்ந்திருந்தபோது அதை பிடித்து தள்ளிக்கொண்டு வந்தவர்களில் நானும் ஒருவன். வயோதிகத்தையும் சக்கர நாற்காலியையும் கேலி செய்யும் விதமாக நான் பேசும் வாய்ப்பே கிடையாது. நான் என்னுடைய முதுமையை பற்றியும், நான் என்ன செய்வேன், செய்ய மாட்டேன் என்று சொல்லிக்கொண்டிருந்தேன்” எனத் தெரிவித்தார்.
http://dlvr.it/RtcLlC
Share:

சட்டப்பேரவை தேர்தல்: அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 22 தொகுதிகள்?

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 22 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையையும் தொகுதி பங்கீடு குறித்தும் பேச தொடங்கிவிட்டனர். திமுக தனது கூட்டணி கட்சியான காங்கிரஸுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தையை முடித்துவிட்டது. இதைத்தொடர்ந்து அதிமுகவில் கூட்டணியில் இருந்த சமத்துவமக்கள் கட்சியும் ஐஜேகேவும் இந்த சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் அதிமுக பாஜக இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று காலை நடைபெற்றது. பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர்கள் கிஷன் ரெட்டி, சி.டி.ரவி, எல்.முருகன் ஆகியோர் முதல்வரை சந்தித்து பேசினர். இதைத்தொடர்ந்து பாஜக குழு துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வத்தையும் சந்தித்து பேசியது. இந்த பேச்சுவார்த்தையில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 22 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
http://dlvr.it/RtbWPq
Share:

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிப்பு! #VisualStory

அசாமில் 126 தொகுதிகளுக்கு மூன்று கட்டமாக தேர்தல் நடைபெறும் வாக்குப்பதிவு: மார்ச் 27, ஏப்ரல் 01, ஏப்ரல் 06 கேரளாவில் 140 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்! வாக்குப்பதிவு நாள்: ஏப்ரல் 06 புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் வாக்குப்பதிவு நாள்: ஏப்ரல் 06 மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கான தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெறும் வாக்குப்பதிவு நாள்கள்: மார்ச் 27, ஏப்ரல் 01, 06, 10, 17, 22, 26, 29 தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் வாக்குப்பதிவு நாள்: ஏப்ரல் 06வாக்கு எண்ணிக்கை தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை மே 2 -ம் தேதி தமிழகத்தில் மொத்தம் 6.26 கோடி வாக்காளர்கள்! தமிழகத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி சோழிங்கநல்லூர் தமிழகத்தில் குறைவான வாக்காளர்களைக் கொண்ட தொகுதி சென்னை துறைமுகம்! தமிழகம் உள்ளிட்ட தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன!
http://dlvr.it/RtbWNf
Share:

Friday 26 February 2021

விவசாயிகள், ஏழைகளின் நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி: முதல்வர் அறிவிப்பு

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய 6 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக பேரவையில் முதல்வர் பழனிசாமி தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய 6 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாகவும், அதேபோல் கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக்குழு வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.
http://dlvr.it/RtXyxl
Share:

மும்பை: நள்ளிரவு 1 மணிக்கு வந்த கார்; 20 ஜெலட்டின் குச்சிகள்! - அம்பானியின் வீட்டை தாக்க முயற்சி?

தொழிலதிபர் முகேஷ் அம்பானி, மும்பையின் தென்பகுதியில் வசித்து வருகிறார். அங்கு அவருக்கு சொந்தமான அடுக்குமாடி சொகுசு பங்களா ஒன்று இருக்கிறது. இப்பங்களாவின் மேல் தளத்தில் ஒரே நேரத்தில் இரண்டு ஹெலிகாப்டர் வந்து இறங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. அண்டிலியா என்று பெயரிடப்பட்டுள்ள அக்கட்டடத்துக்கு வெளியில் நேற்று பிற்பகல் கேட்பாரற்று கார் ஒன்று நின்றது. அம்பானி வீட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தவர்கள் அந்தகார் யாருக்கு சொந்தம் என்று விசாரித்த போது யாரும் உரிமை கோரவில்லை. மர்ம கார் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து உடனே போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஸ்கார்பியோ காரை சோதனை செய்து பார்த்த போது உள்ளே வெடிக்கும் தன்மை கொண்ட ஜெலட்டின் குச்சிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். காரில் 20 ஜெலட்டின் குச்சிகள் இருந்தது. அவை வெடிகுண்டுகளாக இல்லாமல் அப்படியே இருந்தது. நேற்று முன்தினம் இரவு ஒரு மணியில் இருந்து அக்கார் அந்த இடத்தில் நின்று கொண்டிருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸார் சோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர். மர்ம நபர் அம்பானியின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் காரை கொண்டு வந்து நிறுத்தினார்களா அல்லது போலீஸாருக்கு பயந்து காரை கொண்டு வந்து நிறுத்தினார்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது. காரின் நம்பர் அம்பானிக்கு பாதுகாப்பு கொடுக்கும் கார் ஒன்றின் நம்பரோடு ஒத்துப்போனது குறிப்பிடத்தக்கது. காரில் வேறு சில நம்பர் பிளேட்களும், மிரட்டல் கடிதம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடிதத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது என்ற விபரத்தை போலீஸார் தெரிவிக்க மறுத்துவிட்டனர். சமீபத்தில்தான் இஸ்ரேல் தூதரகத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் இந்த ஜெலட்டின் குச்சிகள் அம்பானியின் வீட்டிற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அம்பானியின் வீட்டிற்கு அருகில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். இதில் காரை நிறுத்திய நபர் ஒரு மணி நேரத்திற்கும் மேல் காரிலேயே இருந்துள்ளார். இது குறித்து மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கூறுகையில், ``இச்சம்பவம் குறித்து குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்” என்று தெரிவித்தார். உள்துறை இணையமைச்சர் சம்புராஜ் தேசாய் கூறுகையில், ``அம்பானி வீட்டிற்கு அருகில் வெடிகுண்டுகளுடன் கார் நிறுத்தப்பட்டு இருந்தது குறித்து முழு விசாரணை நடத்தும்படி உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் அம்பானியின் வீட்டிற்கும், குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு கொடுக்கப்படும்” என்று தெரிவித்தார். இச்சம்பவத்தால் அம்பானியின் வீட்டிற்கு அருகில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்ப்ட்டுள்ளனர்முகேஷ் அம்பானி அம்பானியின் வீடு தென்மும்பையில் உள்ள அல்டமண்ட் ரோட்டில் கடலை நோக்கி இருக்கிறது. இந்த வீட்டின் மதிப்பு கட்டும் போது 15 ஆயிரம் கோடியாகும். அதாவது அமெரிக்க டாலர் மதிப்பில் 2014ம் ஆண்டு 2 பில்லியன் டாலர் ஆகும். இக்கட்டடத்தை அமெரிக்க நிறுவனம் வடிவமைத்தது. ஆஸ்திரேலியா நிறுவனம் கட்டி முடித்தது. 27 மாடிகள் கொண்ட இந்த வீடு 168 கார்களை நிறுத்தும் வசதியுடன் கட்டப்பட்டுள்ளது. உலகின் மிகவும் விலை மதிப்பு மிக்க பங்கிங்காம் அரண்மனைக்கு அடுத்ததாக அம்பானியின் அண்டில்லா வீடுதான் மிகவும் விலை மதிப்பு மிக்கது ஆகும். இங்கு 600 வேலைக்காரர்கள் பணியாற்றுகின்றனர். இதில் தியேட்டர், ஸ்பா, யோகா செண்டர், தியான மையம், நடன ஸ்டூடியோ, ஐஸ்கிரீம் பார்லர், வெளியில் இருந்து வருபவர்களை குளிர்விக்க ஐஸ் ரூம் என்று பல்வேறு அம்சங்களுடன் இந்த அண்டிலியா கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அம்பானியின் இந்த வீடு கட்டி முடிக்கப்பட்ட போது மிகவும் பெரிய அளவில் பேசப்பட்டது. ஆரம்பத்தில் பெட்ரோலிய தொழிலில் மட்டும் ஈடுபட்டு வந்த அம்பானி இப்போது தொலைபேசி, ஜவுளி, பிளாஸ்டிக், சில்லறை வியாபாரம் போன்ற அனைத்திலும் கொடி கட்டிப்பறக்கிறார்.
http://dlvr.it/RtWp6V
Share:

உத்தரபிரதேசம்: கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேறியது கட்டாய மதமாற்ற தடைச் சட்ட மசோதா!

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், உத்தரபிரதேச சட்டமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் மதமாற்றத் தடைச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. திருமணம் உள்பட எந்த வகையிலும் கட்டாய மதம் மாற்றம் செய்யப்படுவதை இச்சட்டம் தடை செய்கிறது. உத்தரப்பிரதேச சட்டமன்றத்தில், ’சட்டவிரோத மதம் மாற்றத்தை தடை செய்யும் அவசரச் சட்டம்’ கடந்த நவம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. நவம்பர் மாதமே முதல் வழக்கை உ.பி., போலீஸ் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. அவசரச் சட்டத்திற்கு பதிலாக தற்போது சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இம்மசோதா, சட்ட மேலவைக்கு அனுப்பப்படும். பின், ஆளுநர் ஆனந்தி பென் பட்டேலின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். ஆளுநர் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், சட்டம் நடைமுறைக்கு வரும்.உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் சட்டம் என்ன சொல்கிறது? இந்த புதிய சட்டத்தின் படி,திருமணம் உள்ளிட்ட எந்த வகையிலும் கட்டாய மதம் மாற்றம் செய்தது உறுதியானால், 10 ஆண்டுகள் வரை ஜாமீனில் வெளி வரமுடியாத சிறை தண்டனை வழங்கப்படும். இச்சட்டத்தில் உள்ள விதிகள் மீறப்பட்டால், 15,000 அபராதமும் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் கொடுக்கப்படும். சிறுமிகள், பெண்கள் மற்றும் தலித், பழங்குடியினர் மதம் மாற்றம் செய்யப்பட்டால், 10 ஆண்டுகள் வரை சிறையும், 25,000 ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். மேலும், மொத்தமாக மதம் மாற்றம் நடைபெற்றால், 10 ஆண்டுகள் வரை சிறையும் 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்கிறது இந்த சட்டம். மதம் மாறிய பிறகு ஒருவர் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், அவர்கள் மாவட்ட நீதிபதியிடம் முறையான அனுமதி பெற வேண்டும் என்றும் இந்த சட்டம் கூறுகிறது. ஒருவர் மீது மதம் மாறியதற்கான புகார் எழும் பட்சத்தில், 'மதமாற்றம் செய்யப்படவில்லை' என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு, குற்றம் சாட்டப்பட்ட நபர் மற்றும் மதம் மாறியவர் மீதுதான் உள்ளது. Also Read: உ.பி லவ் ஜிஹாத் வழக்கு: ஆதாரமில்லை என விடுதலை செய்யப்பட்ட கணவர்... உறுதியான மனைவியின் கருச்சிதைவு! மேலும் ஒருவர் கட்டாயத்தின் அடிப்படையில் மதம் மாறினால் , பாதிக்கப்பட்டவரின் பெற்றோர், சகோதரர், சகோதரி, அல்லது ரத்த சொந்தம், மற்றும் தொடர்புடைய வேறு எவரும் புகார் அளிக்கலாம். எஃப்.ஐ.ஆரும் பதிவு செய்யப்பட வேண்டும் என்கிறது சட்டம்.
http://dlvr.it/RtWp5p
Share:

Thursday 25 February 2021

ஐஸ்க்ரீமில் எலிமருந்து; தாயின் தற்கொலை முயற்சியில் மகனும், சகோதரியும் உயிரிழப்பு - நடந்தது என்ன?

கேரள மாநிலம், காசர்கோட் மாவட்டத்திலுள்ள கான்கன்காட் (Kanhangad) பகுதியைச் சேர்ந்தவர் வர்ஷா. இவர் கடந்த பிப்ரவரி 11-ம் தேதி அன்று தற்கொலை செய்துகொள்ளும் முடிவோடு, ஐஸ்க்ரீமில் எலிமருந்தைக் கலந்திருக்கிறார். அதில் சிறிதளவு ஐஸ்க்ரீமையும் சாப்பிட்டிருக்கிறார். மயக்கம் வருவதுபோல் இருந்ததால், மீதமிருந்த ஐஸ்க்ரீமை டேபிள்மீது வைத்துவிட்டு தன் அறைக்குச் சென்று படுத்திருக்கிறார். விஷம் கலந்திருப்பது தெரியாமல், மீதமிருந்த ஐஸ்க்ரீமை வர்ஷாவின் மகனும் தங்கையும் எடுத்துச் சாப்பிட்டிருக்கின்றனர். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து, உணவகம் ஒன்றில் பிரியாணி ஆர்டர் செய்து இருவரும் சாப்பிட்டிருக்கின்றனர்.கைது செய்யப்பட்டிருக்கும் வர்ஷா Also Read: கேரளா: `கடவுள் கேட்டதால், பலிகொடுத்தேன்!’ - மகனைக் கொன்று காவலர்களையும் அழைத்த பெண் அன்றைய நாள் இரவில் வர்ஷாவின் ஐந்து வயது மகனுக்குக் கடுமையான வாந்தியும் உடல் சோர்வும் ஏற்பட்டிருக்கின்றன. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தச் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து வர்ஷாவின் தங்கை த்ரிஷ்யாவுக்கும் (19) உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஒருவாரகால சிகிச்சைக்குப் பிறகு, நேற்று (பிப். 24) த்ரிஷ்யாவும் உயிரிழந்துவிட்டார். பிப்ரவரி 17-ம் தேதி இது குறித்து காவல்துறையிடம் வர்ஷாவின் குடும்பத்தினர் புகார் அளித்திருக்கின்றனர். வர்ஷாவின் மகனும் த்ரிஷ்யாவும் பிரியாணி சாப்பிட்டதால்தான் உடல்நலக் கோளாறு ஏற்பட்டது என்று வர்ஷாவின் குடும்பத்தினர் முதலில் நினைத்திருக்கின்றனர். எலிமருந்து கலந்த ஐஸ்க்ரீமை உட்கொண்ட பிறகும் தனக்கு எதுவும் ஆகவில்லை என்பதால், ஐஸ்க்ரீமில் விஷம் கலந்த விஷயத்தை குடும்பத்தினரிடமிருந்து மறைத்திருக்கிறார் வர்ஷா. ஆனால், போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. ஐஸ்க்ரீமில் கலக்கப்பட்ட எலி மருந்துதான் இருவரின் மரணத்துக்கும் காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து குற்றத்தை ஒப்புக்கொண்டார் வர்ஷா. Also Read: தென்காசி: பேத்தியுடன் மூதாட்டி கொடூரக் கொலை; 40 நாள்களுக்குப் பின் 5 பேர் கைது! என்ன நடந்தது? வர்ஷா மீது ஐ.பி.சி 304, 305 ஆகிய சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, அவரைக் கைதுசெய்திருக்கிறது கேரள காவல்துறை. வர்ஷா ஏன் தற்கொலை செய்ய முயன்றார் என்பதை விசாரித்துவருவதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். தவறுதலாக எலி விஷம் கலந்த ஐஸ்க்ரீமை உண்டதால் ஐந்து வயது சிறுவனும், இளம்பெண்ணும் உயிரிழந்திருக்கும் சம்பவம் கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
http://dlvr.it/RtSvRw
Share:

மும்பை: நிலை தடுமாறி விழுந்ததில் இறந்த மகன்... உயிருடன் இருப்பதாக விடியவிடிய மருந்து தடவிய தாய்!

மும்பை சாந்தாகுரூஸ் கலீனா பகுதியில் வசித்து வந்தவர் சந்தோஷ்(42). கொரோனா தீவிரமாக இருந்த காலத்தில், வேலையிழந்தவர்களில் இவரும் ஒருவர். வேலையிழந்த மன உளைச்சலில் மதுப்பழக்கதுக்கும் ஆளானார். அப்படி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த சந்தோஷ், கழிவறையில் நிலை தடுமாறி விழுந்ததில், தலையில் பலத்த அடிபட்டு ரத்தப் போக்கு ஏற்பட்டது. நீண்ட நேரம் கழித்தே இதனை கவனித்திருக்கிறார் சந்தோஷின் 70 வயது தாயார். Representative Image மயங்கிக் கிடந்த மகனை, அப்படியே இழுத்து வந்து படுக்கையில் படுக்க வைத்திருக்கிறார். பேச்சு மூச்சற்ற நிலையில் இருந்த சந்தோஷின் தலையில் ஏற்பட்ட காயத்திற்கு மஞ்சளை மருந்தாகத் தேய்த்துள்ளார். சந்தோஷ் என்ன நிலையில் இருக்கிறார் என்பதை உணராமல் விடியவிடிய மஞ்சள் தடவி கொடுத்துள்ளார். காலையில் வழக்கம் போல் மகன் எழுந்துவிடுவார் என்று நினைத்த தாய்க்கு ஒரு கட்டத்தில் விவரம் புரிய ஆரம்பித்துள்ளது. பின்னர் தனது உறவினர்களுக்கு தகவல் கொடுத்திருக்கிறார். அவர்கள் வந்து பார்த்துவிட்டு உடனே சந்தோஷை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றிருக்கின்றனர். Also Read: செங்கல்பட்டு: `கழுத்தை அறுத்து, கார் ஏற்றிக் கொலை' - மனைவியைக் கொடூரமாகக் கொன்ற டாக்டர் மருத்துவர்கள் அவரை சோதித்து பார்த்தபோது அவர் இறந்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து உடனே போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் வந்து விசாரித்துவிட்டு விபத்து மரணம், என்று வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கழிவறையில் வழுக்கி விழுந்தவுடன் மருத்துவமனைக்கு கொண்டு வந்திருந்தால் அவரை காப்பாற்றி இருக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். மகன் இறந்தது தெரியாமல் விடிய விடிய மருந்து தடவிய தாயின் பரிதாப நிலை காண்போரைக் கண்கலங்க வைத்தது.
http://dlvr.it/RtRjnL
Share:

`மாஸ்க் கழற்றிய பிறகுதான் யார் என்று தெரிந்தது!’ -கொல்லம் கடலில் ராகுல்... படகில் நடந்தது என்ன?

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி-யுமான ராகுல் காந்தி கேரள மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுவருகிறார். இதையடுத்து கொல்லம் வாடி கடற்கரைக்குச் சென்ற ராகுல் காந்தி, அங்குள்ள மீனவர்களுடன் கடலுக்கு மீன்பிடிக்க மோட்டார் பொருத்திய படகில் புறப்பட்டுச் சென்றார். கடலில் மீனவர்களுடன் வலைவிரித்தார். அந்தச் சமயத்தில் சில மீனவர்கள் கடலில் குதித்து, மீன்கள் தப்பிச் செல்லாமல் இருக்க வலையைச் சரிசெய்தனர். எதற்காக மீனவர்கள் கடலில் குதித்தார்கள் என்பதைக் கேட்டறிந்த ராகுல் காந்தி, உடனடியாக அவரும் கடலில் குதித்தார். பின்னர் ராகுல் காந்தியும் வலையைச் சரிசெய்தார். சிறிது நேரம் கடலில் நீந்திய ராகுல் காந்தி, தொடர்ந்து மீண்டும் வள்ளத்தில் ஏறி, மீன்பிடிக்க கடலில் வீசியிருந்த வலையை மீனவர்களுடன் இணைந்து இழுத்தார். சுமார் இரண்டரை மணி நேரம் கடலில் மீனவர்களுடன் செலவிட்டார் ராகுல் காந்தி. ராகுல் மீன்பிடிக்கும் புகைப்படத்தை காங்கிரஸ்காரர்கள் அதிக அளவில் பகிர்ந்துவருகிறார்கள். ராகுல் காந்தி மீன் பிடிக்கச் சென்றது குறித்து அவருடன் சென்ற மீனவர்கள் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்.மீனவர்களுடன் வலையை இழுக்கிறார் ராகுல் காந்தி மீனவர்கள் கூறுகையில், ``ராகுல் காந்தி கடலுக்குவ் செல்வது குறித்து யாருக்கும் தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாபன் தனது உறவினர் ஒருவர் கடலுக்குப் படகில் வருவதாகக் கூறியிருந்தார். அவருடன் எம்.பி. கே.சி.வேணுகோபாலன் வந்திருந்தார். மாஸ்க் வைத்திருந்ததால் முதலில் ராகுல் காந்தியை அடையாளம் தெரியவில்லை. மாஸ்க் கழற்றிய பிறகுதான் அடையாளம் கண்டுகொண்டோம்" என்றனர். ராகுல் காந்தி வழக்கம்போல பாதுகாப்பு குறித்து கவலைப்படாமல் படகில் ஏறியிருக்கிறார். அவருடன் இரண்டு பாதுகாவலர்கள் மட்டுமே சென்றிருக்கிறார்கள். கடலில் சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் சென்று மீன் பிடித்திருக்கிறார் ராகுல் காந்தி. வலையைச் சரிசெய்வதற்காக ராகுல் காந்தி கடலில் குதிக்க முயன்றபோது சிலர் தடுத்திருக்கிறார்கள். அதற்கு ராகுல் காந்தியின் பிரைவெட் செக்ரட்டரி அலங்காய் சவாய், 'அவர் ஸ்கூபா டைவிங் தெரிந்தவர். ஒரு பிரச்னையும் இல்லை' எனக் கூறியிருக்கிறார்கடலில் ராகுல் காந்தி ராகுல் காந்தியும் மீனவர்களும் கடலில் விரித்த வலையில் சில கணவாய் மீன்கள் மட்டுமே கிடைத்திருக்கின்றன. அதைப் பார்த்த ராகுல் காந்தி, ``நான் நிறைய மீன்கள் கிடைக்கும் என எதிர்பார்த்தேன். நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்னையை அறிந்துகொண்டேன். உங்கள் கடின உழைப்பைப் பாராட்டுகிறேன். நான் என்றும் உங்களுடன் இருப்பேன்" எனக் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், "மீனைச் சமைத்துக் கொண்டுவரும்போது உங்கள் கஷ்டத்தை யாராவது நினைத்துப்பார்க்கிறார்களா?" என மீனவரகளிடம் கேட்டு அவர்களை நெகிழவைத்திருக்கிறார் ராகுல் காந்தி.
http://dlvr.it/RtRjhX
Share:

Wednesday 24 February 2021

சசிகலா அழைப்பு அதிமுகவினருக்கு பொருந்தாது - அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவினரை சசிகலா அழைக்கவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர், அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சசிகலா அழைப்பு அதிமுகவினருக்கு பொருந்தாது. அவர் அமமுகவினரைத்தான் அழைத்துள்ளார். சரத்குமார் - ராதிகா அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார். முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “ஜெயலலிதாவின் உண்மையான உடன் பிறப்புகள் ஒன்றிணைந்து மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும். இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுக ஆட்சி இருக்கும் என்று ஜெயலலிதா சொல்லிவிட்டு சென்றார். அதை மனதில் வைத்து அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன். நானும் அதற்கு உறுதுணையாக நிற்பேன். ஒன்றாக இணைந்து மீண்டும் ஆட்சியமைப்போம். பொது எதிரி திமுகவை வீழ்த்துவோம்” எனத் தெரிவித்திருந்தார். மேலும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா ஆகியோர் சசிகலாவை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், “‘நன்றி மறப்பது நன்றன்று. நன்றல்லது அன்றே மறப்பது நன்று’. நான் 10 ஆண்டுகளாக சசிகலாவோடு பயணித்துள்ளேன். சசிகலாவுடன் அதிமுகவினரும் நல்ல உறவோடு இருந்திருக்கிறார்கள். அதை அவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும்.” என்றார்.
http://dlvr.it/RtNr5T
Share:

“ஒன்றிணைந்து ஆட்சியமைக்க வேண்டும்” - சசிகலா

ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை பெற்றார். அதன்பின்னர் தமிழகம் வந்த சசிகலா எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார். இந்நிலையில் இன்று ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய சசிகலா, “நான் கொரோனாவில் இருந்தபோது கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் எல்லோருடைய வேண்டுதலாலும் நலம் பெற்று தமிழகம் வந்தேன். ஜெயலலிதாவின் உண்மையான உடன் பிறப்புகள் ஒன்றிணைந்து மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும். இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுக ஆட்சி இருக்கும் என்று ஜெயலலிதா சொல்லிவிட்டு சென்றார். அதை மனதில் வைத்து அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன். நானும் அதற்கு உறுதுணையாக நிற்பேன். விரைவில் தொண்டர்கள், பொதுமக்களை சந்திப்பேன்” எனத் தெரிவித்தார்.
http://dlvr.it/RtMdmB
Share:

 "பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு உயரதிகாரி பாலியல் தொந்தரவு"- கனிமொழி கண்டனம்

அதிமுக ஆட்சியில் பாதுகாப்பு தரும் போலீசாருக்கே பாதுகாப்பு தேவைப்படுகிறது என கனிமொழி விமர்சித்துள்ளார்.  தமிழக முதல்வர் பாதுகாப்பு பணியின்போது தன்னிடம் தவறாக நடக்க முயன்ற ஐபிஎஸ் அதிகாரி குறித்து பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் உள்துறைச் செயலாளர், டிஜிபி ஆகியோரிடம் புகார் அளித்தார். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''அதிமுக ஆட்சியில் பாதுகாப்பு தரும் போலீசாருக்கே பாதுகாப்பு தேவைப்படுகிறது. ஒரு பெண் IPS அதிகாரி தனது உயர் அதிகாரியால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதை கண்டுகொள்ளாத முதலமைச்சர் சாதாரண பெண்களுக்கான பாதுகாப்பை எப்படி உறுதி செய்வார்?'' எனக் குறிப்பிட்டுள்ளார்.  The protector also needs protection during ADMK rule. When a woman IPS officer is sexually harassed by a higher ranked officer and the CM takes no notice of it, what hope do 'ordinary' women have in this regime? — Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) February 24, 2021
http://dlvr.it/RtMdgg
Share:

Tuesday 23 February 2021

’12,000 புதிய பேருந்துகள் டு கோவை மெட்ரோ ரயில்’ : பட்ஜெட்டில் உரையில் புதிய அறிவிப்புகள்

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை தமிழக துணைமுதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். அதில் சாமானியர்களுக்கான புதிய அறிவிப்புகள் என்னென்ன உள்ளது என்று பார்க்கலாம். 1. ஆறாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் கணிப்பொறி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2. கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்படுகிறது. அதற்கான அய்வும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 3. சில ஆண்டுகளில் புதிதாக 12 ஆயிரம் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். இதில் 2,500 பேருந்துகள் மின்சார பேருந்துகளாக இருக்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. 4. மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக RIGHTS என்ற சிறப்பு திட்டம் வகுக்கப்படுகிறது. இதற்கு மத்திய அரசு ஏற்கெனவே ஒப்புதல் தெரிவித்திருப்பதாகவும் உலக வங்கிகளிடம் இந்த திட்டம் பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5. அம்மா விபத்து காப்பீடு திட்டத்தின் மூலம் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப தலைவரின் விபத்து மரணத்திற்கு 4 லட்சம் காப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இயற்கை மரணம் என்றால் 2 லட்சம் வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நிரந்தர இயலாமைக்கும் 2 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 6. கனடாவில் டொரண்டோ பல்கலை கழகத்திலும் தமிழ் இருக்கை அமைத்திட உதவித்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
http://dlvr.it/RtJlC4
Share:

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு..

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை 17 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒன்றரை லட்சம் என்ற எண்ணிக்கையை கடந்துள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் கொரோனா தொற்றுகள் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 385 தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. பிப்ரவரி 5ஆம் தேதி ஒன்றரை லட்சமாக இருந்த கொரோனா தொற்றுகள் பின்னர் படிப்படியாக குறைந்து கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து தற்போது ஒன்றரை லட்சம் என்ற எண்ணிக்கையை மீண்டும் கடந்துள்ளது. அண்டை மாநிலங்களான கேரளாவிலும் மகாராஷ்டிராவிலும் தொற்றுகள் உயர்வதை அடுத்து உஷாராகியுள்ள கர்நாடக மாநிலம் அம்மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு தொற்று பரிசோதனையை கட்டாயமாக்கியுள்ளது. இதனால் மகாராஷ்ட்ரா, கேரளாவிலிருந்து கர்நாடகாவிற்குள் நுழைய நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்துள்ளன. மகாராஷ்ட்ர மாநிலத்திலும் கொரோனா தடுப்பு விதிமுறைகள் கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது. முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை முடுக்கிவிடப்பட்டுள்ளது. டெல்லி மாநில அரசும் கொரோனா தடுப்பு பணிகளை மீண்டும் தீவிரப்படுத்த தொடங்கியுள்ளது. கொரோனா தொற்றுகள் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி பணிகள் நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு நடத்தினார். இக்கூட்டத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தடுப்பூசி போடும் பணி தொடங்கி 38 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை ஒரு கோடியே 14 லட்சம் பேர் ஊசி போட்டுக்கொண்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://dlvr.it/RtHXg3
Share:

மும்பை: ஃபேஸ்புக் நட்பு; ஆபாச வீடியோ! - எம்.பி, எம்.எல்.ஏ-க்களை மிரட்டி பணம் பறித்த கும்பல்

மும்பையில் அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களை ஒரு கும்பல் மிரட்டி பணம் பறித்து வருவதாக போலீஸாருக்கு அடிக்கடி புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. அப்புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். விசாரணியில் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் எம்.எல்.ஏ மற்றும் எம்.பி.க்கள் போன்ற முக்கிய பிரமுகர்களை சிக்கவைத்து ஆபாச படம் எடுத்து, அதன் மூலம் பிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர். இம்மோசடி தொடர்பாக ஹரியானா, உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த 3 பேர் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் இக்கும்பலிடம் விசாரித்த போது அதிர்ச்சித் தகவல் கிடைத்தது. இக்கும்பல் முதலில் பெண்கள் பெயரில் சமூக வலைத்தளத்தில் போலி ஐடியை உருவாக்குவது வழக்கம். அதன் பிறகு பார்க்க மிகவும் அழகாக இருக்கும் பெண்களின் படத்தை அதில் பதிவேற்றம் செய்வர். அதனை தொடர்ந்து யாரை மிரட்டி பணம் பறிக்கவேண்டும் என்பது குறித்து முடிவு செய்து கொண்டு, அந்த நபருக்கு சமூக வலைத்தளத்தில் பிரெண்ட் ரெக்வெஸ்ட் அனுப்புவர். அந்த நபர் ஏற்றுக்கொண்டால், அவரிடம் பெண் போன்றே சாட்டிங் செய்வது வழக்கம். சில நாள்கள் கழித்து ஆபாசமாக சாட்டிங் செய்யத் தொடங்குவர். இதிலும், குறிப்பிட்ட நபர் சிக்கிக்கொண்டால் உடனே இந்த கும்பல் அடுத்த அஸ்திரத்தை எடுப்பது வழக்கம். அதாவது வீடியோ காலில் வந்து ஆபாச வீடியோவை காட்டுவர். அதனை பார்க்கும் நபர் ஆபாச படத்தை பார்த்துவிட்டு ஏதாவது ஆபாச செயலில் ஈடுபட்டால், உடனே அதனை வீடியோவாக பதிவு செய்துகொள்வது வழக்கம். வீடியோவாக பதிவு செய்தவற்றை எடிட்டிங் செய்து மீண்டும் சம்பந்தப்பட்ட நபருக்கு அனுப்பி, சிறிய தொகையைக் கூறி அதனை கொடுக்கவேண்டும் என்றும் அப்படி கொடுக்கவில்லையெனில் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்றும் மிரட்டுவர். அப்படி மிரட்டியதும் வீடியோவில் இருக்கும் நபர் கேட்ட பணத்தை கொடுத்துவிட்டால், உடனே அந்த நபரிடம் அடுத்தடுத்து பணம் கேட்டு மிரட்டுவது இந்த கும்பலின் வழக்கம். இதில் பாதிக்கப்பட்ட பலர் தொடர்ந்து போலீஸில் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் நடத்திய விசாரணயில் மேற்கண்ட தகவல்கள் கிடைத்தது. இது குறித்து போலீஸ் இணை கமிஷனர் மிலிந்த் கூறுகையில், ``முக்கிய பிரமுகர்களை மிரட்டி பணம் பறிக்க பயன்படுத்தப்பட்ட 175 ஃபேஸ்புக் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளது. இது தவிர பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பணம் வாங்க பயன்படுத்தப்பட்ட 58 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன’’ என்று தெரிவித்தார். இந்த மோசடியில் மேலும் எத்தனை பேருக்கு தொடர்பு இருக்கிறது என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். Also Read: மும்பை விடுதி அறையில் சடலமாகக் கிடந்த எம்.பி! - கடிதத்தைக் கைப்பற்றிய போலீஸ் இதற்கிடையே இதே போன்ற முறையை பயன்படுத்தி மும்பை தொழிலதிபரிடம் ரூ.50,000 மிரட்டி பணம் பறிக்க முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் போன்றே ஃபேஸ்புக்கில் தெற்கு மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு ஆக்ராவை சேர்ந்த அனுப்சிங் (23) என்ற நபர் ஃபிரண்ட் ரெக்வெஸ்ட் அனுப்பியிருக்கிறார். தொழிலதிபர் அதை ஏற்றவுடன் சில நாள்களுக்கு மேற்கண்ட அதே முறையில் தொழிலதிபரிடம் ரூ.50,000 மிரட்டி பணம் பறிக்க முயன்றார் அனுப். ஆரம்பத்தில் தொழிலதிபர் 5,000 ரூபாயை மட்டும் ஆன்லைனில் அனுப்பிவிட்டு தன்னிடம் பணம் இல்லை என்றும் பாக்கியை தவணை முறையில் அனுப்புவதாக தொழிலதிபர் தெரிவித்தார். அனுப் அதனை ஏற்றுக்கொண்டார். ஆனால், தொழிலதிபர் இது குறித்து பின்னர் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் விசாரணை நடத்தி அனுப்பை ஆக்ராவில் கைது செய்தனர்.
http://dlvr.it/RtHXZT
Share:

Monday 22 February 2021

ஒரு ரன்னில் அவுட் ஆன மேக்ஸ்வெல்! - நியூசிலாந்தில் மண்ணைக் கவ்விய ஆஸ்திரேலியா

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா 53 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதில் முதலாவது டி20 போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பீல்டிங் செய்தது. இதனையடுத்து நியூசிலாந்து பேட்டிங் செய்தது. ஆனால் தொடக்கமே சோதனையாக அமைந்தது. அந்த அணியின் மார்டின் கப்தில் ரன் ஏதும் எடுக்காமலும், டிம் சைப்ரட் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து காப்பாற்றுவார் என நினைத்த கேப்டன் வில்லியம்சன் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் நியூசிலாந்து அணிக்கு சறுக்கல் ஏற்பட்டது. ஆனால் அடுத்து வந்த டேவான் கான்வே மிகச்சிறப்பாக விளையாடினார். அவருக்கு உறுதுணையாக கிளென் பிலிப்ஸ் சிறப்பான பார்ட்னர்ஷிப் கொடுத்தார். இதனால் நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேவான் கான்வே 59 ரன்களில் 99 ரன்களை விளாசினார். இதனையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு சோதனையே மிஞ்சியது தொடக்க வீரர்களான மேத்யூ வேட், ஆரோன் பின்ச், ஜோஷ் பிலிப் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதில் மிட்சல் மார்ஷ் மட்டுமே 45 ரன்கள் சேர்த்தார். பின்பு அவரும் ஆட்டமிழந்தார். சிக்ஸர் புஸ்பானங்களை விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல் 1 ரன் மட்டுமே சேர்த்து அவுட்டானார். இதனையடுத்து 17.3 ஓவரில் 131 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட் ஆகி தோல்வியடைந்தது. நியூசிலாந்து தரப்பில் இஷ் சோதி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்தியாவிடம் டி20 மற்றும் டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலியாவுக்கு, நியூசிலாந்திலும் தோல்வி தொடர்கிறது.
http://dlvr.it/RtDhlR
Share:

‘அம்மா எழுந்திரி’ - ஆப்கன் குண்டு வெடிப்பில் உயிரிழந்த தாயை எழுப்பிய குழந்தை

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஞாயிறு அன்று பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் இருவர் கொல்லப்பட்டதாகவும், ஐந்து பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியானது. இந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்த இருவரில் ஒருவர் பெண் என தெரியவந்துள்ளது. இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவர் சாலையின் ஓரம் தூக்கி வீசப்பட்டிருக்கிறார். சம்பவத்தின் போது அவரது குழந்தைகளும் அவருடன் இருந்துள்ளனர். இருப்பினும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏதும் இல்லை என தெரிவித்துள்ளனர் போலீசார்.  அம்மா உயிரிழந்ததை கூட உணர முடியாத அந்த மழலைகள் ரத்த வெள்ளத்தில் கிடக்கும் தாயை  ‘அம்மா எழுந்திரி’ என சொல்வதை உள்ளூர்வாசி ஒருவர் கேமிராவில் பதிவு செய்து, அந்த உருக்கமான காட்சிகளை  இணையத்தில் பதிவேற்றியுள்ளார். அது பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அதில் ஒரு குழந்தையின் முகம், கை மற்றும் கால்களிலும் ரத்தம் படிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டு குழந்தைக்களுக்கும் லேசான காயம் இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.  அந்த வீடியோவை பார்த்த பலரும் குழந்தைகளுக்கு இணையம் மூலமாக ஆறுதல் சொல்லி வருகின்றனர். #مادر_بلند_شو? pic.twitter.com/XhC2xsJ57B — Ejaz Malikzada - اعجاز ملک‌زاده (@EjazMalikzada) February 21, 2021 இதுவரை இந்த குண்டு வெடிப்புக்கு காரணம் நாங்கள் தான் என எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆப்கானிஸ்தானின் தலிபான் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/RtCXCL
Share:

கேரளாவில் கண்டெடுக்கப்பட்ட அமெரிக்காவின் சிவப்பு ஆமை... இந்திய சுற்றுச்சூழலுக்கு ஆபத்தா?

கேரளாவில் அமெரிக்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட சிவப்பு காது ஆமை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அதனை மீண்டும் நீர் நிலைகளில் விட வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார் கேரள வன ஆராய்ச்சி நிறுவன அதிகாரி ஒருவர். சில நாட்களுக்கு முன் கேரளாவின் களத்தோடைச் சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர் அங்குள்ள நீர் நிலையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அவருக்கு நடுத்தர அளவிலான சிவப்பு காது ஆமை (Red-eared slider turtle) ஒன்று கிடைத்துள்ளது. அதனை அவர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்ததைப் பார்த்த கேரள வன ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் சந்தீப் தாஸ், அந்த ஆமையை மீண்டும் நீர் நிலைகளில் விட வேண்டாம் என எச்சரித்துள்ளார்.சிவப்புக் காது ஆமை அமெரிக்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்த சிவப்புக் காது ஆமைகளின் அறிவியல் பெயர் Trachemys Scripta Elegans. இந்த ஆமைகள், செல்லப்பிராணி பிரியர்களிடையே மிகவும் பிரபலம், குறிப்பாகச் சிறுவர்களிடத்தில். அதற்குக் காரணம், இதன் வண்ணமும், இதன் சிறிய தோற்றமும். ஆனால், இந்த ஆமைகள் நம் நாட்டின் சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக இருக்காது. இவற்றால் இந்தியைவைப் வாழ்விடமாகக் கொண்ட உயிர்களுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும். குறிப்பாக இந்தியாவை வாழ்விடமாகக் கொண்ட ஆமைகளுக்கு. Also Read: Solarwinds attack... அமெரிக்காவை அதிர வைத்த சைபர் தாக்குதல், பின்னணியில் ரஷ்யாவா? இந்த ஆமைகள், விரைவில் முதிர்வடையும் தன்மையுடையவை. அளவில் சிறியதாக இருந்தாலும், வேகமாக வளரும். இனப்பெருக்கமும் அதிகம். முரட்டுத்தனமானவையும் கூட. இவை அதிக அளவில் பெருக்கம் அடைந்தால், இந்தியாவைச் சேர்ந்த ஆமைகளின் வாழ்விடம், இனப்பெருக்க சூழ்நிலை மற்றும் உணவு ஆகியவற்றை இந்த ஆமைகள் அபகரித்துக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். அது இந்திய உயிர்களின் சுற்றுச்சூழலை பாதிக்கும்.Red-eared slider turtle இந்த ஆமைகள் இந்தியாவிற்குள் கொண்டு வரத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமல்லாது ஆஸ்திரேலியா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட சில நாடுகளிலும் இந்த ஆமைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், செல்லப்பிராணி பிரியர்கள் இதனை அதிக அளவில் வாங்குவதால் இவை சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் கொண்டு வரப்படுகின்றன. இதனை வாங்குவோர், குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் இவற்றை இயற்கை நீர் நிலைகளில் விட்டுச் செல்கின்றனர். இவற்றைக் கண்டறிபவர்கள் அங்கிருக்கும் வன உயிரின சரணாலயத்தில் அவற்றை ஒப்படைக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். வெளிநாட்டில் இருந்து தமிழ்நாட்டிற்குள் கொண்டுவரும் போது கைப்பற்றப்பட்ட ஆமைகள் வண்டலூர் பூங்காவில் வைத்துப் பராமரிக்கப்படுகின்றன. தற்போது வண்டலூர் பூங்காவில் இருபதுக்கும் மேற்பட்ட சிவப்பு காது ஆமைகள் உள்ளன.
http://dlvr.it/RtCXBr
Share:

Sunday 21 February 2021

இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் : வாழ்த்தும் முன்னாள் வீரர்கள்!

மும்பையை சேர்ந்த முப்பது வயதான சூர்யகுமார் யாதவ் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட இந்திய அணிக்கு முதல்முறையாக தேர்வாகியுள்ளார். இவர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்.. கிரீஸுக்கு வந்தாலே ரன் மழை பொழிவார்.. கடந்த 2020 ஐபிஎல் சீசனில் 15 இன்னிங்சில் 480 ரன்களை அவர் குவித்திருந்தார். இருப்பினும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் அவர் தேர்வாகவில்லை. அது அப்போது பெரிதும் விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில்தான் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட தேர்வாகியுள்ளார்.  “இந்திய அணி ஆஸ்திரேலிய தொடருக்கு சென்றிருந்தபோதே நான் தேர்வு செய்யப்படுவேன் என எண்ணியிருந்தேன். ஆனால் எனக்கு ஏமாற்றம் மட்டுமே எஞ்சியது. ஐபிஎல் மட்டுமல்லாது உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் ரன் ஸ்கோர் செய்திருந்ததால் எனக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எண்ணினேன். ஆனால் ஏமாற்றம் மட்டுமே எஞ்சியது. அணியில் தேர்வாகாதது எனக்கு விரக்தி தான்” என ஆஸ்திரேலிய தொடருக்கு தேர்வாகதபோது சூர்யகுமார் யாதவ் சொல்லியிருந்தார்.   அதையடுத்து ரசிகர்கள் சிலரும் சூர்யகுமார் யாதவுக்கு ஆதரவாக அப்போது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தனர்.  இந்த சூழலில் தற்போது அவர் இந்திய அணியில் விளையாட தேர்வாகியுள்ளார்.  The feeling is surreal???❤️ pic.twitter.com/RccRbyYpx4 — Surya Kumar Yadav (@surya_14kumar) February 21, 2021 “The Feeling is Surreal” என அண்மையில்  ட்வீட் செய்துள்ளார் சூர்யகுமார் யாதவ். இது இந்திய அணிக்கு தேர்வான உணர்ச்சி வெளிப்பாடு என்பது இன்னும் உறுதியாகவில்லை.  தற்போது முதல்முறையாக இந்திய அணிக்கு விளையாட உள்ள சூர்யகுமார் யாதவை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் இர்பான் பதான், ஹர்பஜன் சிங், சச்சின் டெண்டுல்கர் என பலரும் வாழ்த்தி வருகின்றனர்.  Finally the wait is over for @surya_14kumar congratulations buddy. Goodluck @ishankishan51 @rahultewatia02 for your debut guys — Irfan Pathan (@IrfanPathan) February 20, 2021 So good to finally @surya_14kumar in Team India ?? Good luck — Harbhajan Turbanator (@harbhajan_singh) February 20, 2021 Heartiest congratulations @ishankishan51, @rahultewatia02 & @surya_14kumar for your maiden call up to the Indian Team, and also to @chakaravarthy29, who missed out in Australia.Playing for ?? is the highest honour for any cricketer. Wishing you all a lot of success. — Sachin Tendulkar (@sachin_rt) February 21, 2021 மும்பை இந்தியன்ஸ் அணியும் சூர்யகுமார் யாதவின் விடாமுயற்சியை பாராட்டி ட்வீட் செய்துள்ளது. 
http://dlvr.it/Rt9Lbl
Share:

மின்னல் வேகத்தில் செயல்படுகிறார் முதல்வர் பழனிசாமி - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

படத்தில் வா மின்னல் என்று வருவதுபோல் முதலமைச்சர் மின்னல் வேகத்தில் வேலை செய்து வருகிறார் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசும்போது... “அரசியல் வரலாற்றில் முதன் முறையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ. 30 கோடியே 52 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. கடைகோடி மக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் சென்றடைய வேண்டும் என்ற அம்மாவின் கனவை நிறைவேற்றி உள்ளோம். தமிழக முதல்வர் எடப்பாடி அவர்கள் 110 விதியின் கீழ் மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி காட்டினார். ஆனால் திமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மக்கள் மன்றத்தை புறக்கணித்து சென்றனர். விவசாயிகளின் நலன் காக்க 16 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 12 ஆயிரத்து 110 கோடி மதிப்பில் பயிர்க் காப்பீடு கடனை ரத்து செய்தார். மின்னல் வேகத்தில் அரசு நிர்வாகம் செயல்பட்டு வருகிறது என்றால் அது எடப்பாடியால் தான் முடியும் என்றார். நீர் மேலாண்மையில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு சிறந்து விளங்குவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டி உள்ளார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட குடிமராமத்து திட்டத்தை தற்போது மக்கள் மத்தியில் கொண்டு வந்து செயல்படுத்தியவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. கொரோனா காலத்தில் 38 வருவாய் மாவட்டங்களிலும் எனது உயிரை விட மக்கள் நலனே முக்கியம் என அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் கோட்டையில் உட்கார்ந்து கொண்டு அறிக்கைகளை விட்டுக் கொண்டிருந்தார். மக்கள் குறை தீர்க்கும் முகாம் என்ற போர்வையில் பெட்டிக்குள், பெட்டி வைத்து பூட்டு போட்டு அதனை அறிவாலயத்தில் கொண்டுபோய் வைப்பார்களாம். அப்படி என்றால் அறிவாலயத்தில் இருக்கக்கூடியவர்கள் மீது நம்பிக்கை இல்லையா எதற்காகப் பூட்டு போடுகிறார்கள்" எனக் கேள்வி எழுப்பியவர் தொடர்ந்து... ராமநாதபுரம் மாவட்டத்தில் 5098 பயனாளிகளுக்கு தமிழக அரசின் சார்பில் அனைத்து துறைகளின் வாயிலாக 30 கோடியே 52 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது என்று பேசினார்.
http://dlvr.it/Rt8Z1W
Share:

தமிழகத்தில் நேற்றிரவு பரவலாக மழை... இன்றும் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நேற்றிரவு சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. சென்னையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் குளிர்வாட்டி வந்த நிலையில், நேற்று மாலை பல இடங்களில் பரலாக மழை பெய்தது. எழும்பூர், கோடம்பாக்கம், வடபழனி, கே.கே.நகர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், தண்டையார்பேட்டை, திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்தது. திண்டுக்கல்லில் மாலை ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திண்டுக்கல்லை சுற்றியுள்ள செட்டிநாயக்கன்பட்டி, சென்னமநாயக்கன்பட்டி, பூதிபுரம், சின்னாளப்பட்டி ஆகிய பகுதிகளிலும் மிதமான பெய்தது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டையில் மாலை 5 மணி முதல் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த மழையால், நகரின் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. விழுப்புரம் மாவட்டத்தில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. விக்கிரவாண்டி செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலையில் மழை பெய்தது. இதனிடையே இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
http://dlvr.it/Rt8YyD
Share:

Saturday 20 February 2021

பிப்ரவரி 22 முதல் சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

பிப்ரவரி 22 முதல் சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரயிலில் கட்டணத்தைக் குறைத்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதிகபட்ச கட்டணம் 50 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் கட்டணத்திலிருந்து 50% தள்ளுபடி அளிக்கப்படுவதாகவும் முதல்வர் அறிவித்துள்ளார். அதன்படி, 2 கிமீ வரையிலான கட்டணம் ரூ.10, 2லிருந்து 5 கி.மீ வரையிலான கட்டணம் ரூ.20, 5லிருந்து 12 கி.மீ வரையிலான கட்டணம் ரூ.30, 12லிருந்து 21 கி.மீ வரையிலான கட்டணம் ரூ.40, 21-32 கி.மீ வரையிலான கட்டணம் ரூ. 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணக்குறைப்பு பிப்ரவரி 22ம் தேதிமுதல் நடைமுறைக்கு வரும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
http://dlvr.it/Rt6XGf
Share:

நீலகிரி: 11 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை

மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் தன் 11 வயது மகளை 3 ஆண்டுகளாக பலமுறை பாலியல் தொந்தரவு செய்த நபருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.10 லட்சம் அபராதமும் விதித்து மகிளா நீதிமன்ற இன்று தீர்ப்பளித்துள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் கோத்தர்வயல் பகுதியை சேர்ந்த அப்துல் நாசர் (44). துணி வியாபாரியான இவருக்கு திருமணமாகி 1 ஆண் மற்றும் 11 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் மனைவி இல்லாத நேரத்தில் தன் 11 வயது மகளை 3 ஆண்டுகளாக பலமுறை அப்துல் நாசர் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதைத் தொடர்ந்து தாயிடமோ, உறவினர்களிடமோ கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதற்கு பயந்து அச்சிறுமி யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் தாய் வழி தாத்தா வீடு கேரளாவில் உள்ளதால் அங்கு சென்றுள்ளார். மீண்டும் அங்கிருந்து கூடலூருக்கு செல்லுமாறு தாத்தா சிறுமியிடம் கூறியபோது தனது தாத்தாவிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறியுள்ளார். இதனைக் கேட்ட அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கேரளாவில் உள்ள மருத்துவமனைக்கு சிறுமியை கூட்டி சென்று பரிசோதனை செய்தனர். சிறுமியின் உடலில் பல காயங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பலமுறை பாலியல் தொல்லை செய்திருப்பதும் தெரியவந்தது. கடந்த 21.9.2017 அன்று கூடலூர் அனைத்து காவல் நிலையத்தில் சிறுமி புகார் அளித்ததன் பேரில் இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி ,சப்-இன்ஸ்பெக்டர் சோனா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் சிறுமியின் தந்தை குற்றத்தை ஒப்புக் கொண்டதின் பேரில் இந்த வழக்கு உதகை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கு இன்று மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றவாளி அப்துல் நாசருக்கு ஆயுள் தண்டனையும் 10 லட்சம் அபராதம் விதித்து தீர்பளித்தார்.
http://dlvr.it/Rt5jFR
Share:

ஸ்ரீநகர்: பயங்கரவாத தாக்குதலில் 2 காவலர்கள் சுட்டுக்கொலை - சி.சி.டி.வி-யில் பதிவான பரபரப்பு காட்சி

ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள பாகட் பர்சுல்லாவில் (Baghat Barzulla) பயங்கரவாத தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சோஹைல் (Sohail) , முகமது யூசுப் (Mohammad Yousuf) ஆகிய இரண்டு காவலர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #WATCH Terrorist opens fire in Baghat Barzulla of Srinagar district in Kashmir today ( CCTV footage from police sources) pic.twitter.com/FXYCvQkyAb— ANI (@ANI) February 19, 2021 இந்த தாக்குதலில் காயமடைந்த காவலர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு இரண்டு காவலர்களும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. தாக்குதலில் ஈடுபட்ட நபரை பிடிப்பதற்காக அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சி.சி.டி.வி காட்சிகள் மூலம் அந்நபரை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களில் ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் மூன்றாவது தாக்குதல் இது. இதுவரை மூன்று காவலர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இன்று நடைபெற்ற தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் முன்னணி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (The Resistance Front) பொறுப்பேற்றுள்ளது. இரண்டு தினங்களுக்கு முன்னர், நகரின் உயர்மட்ட பாதுகாப்பு உள்ள பகுதியில் அமைந்திருக்கும் ஒரு உணவகத்தின் உரிமையாளர் மகன் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். J&K: Wreath laying ceremony of Police personnel Sg Ct Mohammad Yousuf and Ct Suhail Ahmad who lost their lives in an attack by terrorists in Barzulla, Srinagar today. pic.twitter.com/BVxj9FgF54— ANI (@ANI) February 19, 2021 ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பின்னர் அதன் நிலையை மதிப்பீடு செய்வதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 24 நிபுணர்கள் கொண்ட குழு ஜம்மு காஷ்மீருக்கு வந்துள்ள சமயத்தில், இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/Rt5jDg
Share:

Friday 19 February 2021

கேரளா: பா.ஜ.க-வில் இணையும் இந்தியாவின் ’மெட்ரோ மேன்’ - யார் இந்த ஸ்ரீதரன்?

இந்தியாவின் ’மெட்ரோ மேன்’ என்று அழைக்கப்படும் பிரபல பொறியாளர், கேரள பா.ஜ.க-வில் இணைய இருப்பதாக அறிவித்திருக்கிறார். 89 வயதான ஸ்ரீதரன், இந்தியாவின் பொது போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தியதில் முக்கிய பங்காற்றியவர். கர்நாடகா, கோவா, மும்பை ஆகிய மாநிலங்களை இணைக்கும் கொங்கன் ரயில் பாதையை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றியவர். நாட்டின் முதல் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்ட டெல்லி மெட்ரோவின் உருவாக்கத்தை தலைமை தாங்கி நடத்தியவர். இன்னும் பல முக்கிய போக்குவரத்து உள்கட்டமைப்புகள் உருவாவதில் இவரது பங்கு மிக முக்கியமானது.metro rail இந்திய பொதுப் போக்குவரத்தின் வடிவத்தையே மாற்றி அமைத்தவர் என்ற பெருமைக்குரியவர். அவரது பணியை புகழும் வகையிலேயே இந்தியாவின் மெட்ரோ மேன் என்று அவர் அழைக்கப்படுகிறார். பத்மவிபூஷன் விருது வென்ற அவர், 2019-ம் ஆண்டு, பணியில் இருந்து ஓய்வு பெற்றார். கடந்த 10 ஆண்டுகளாக கேரளாவில் வசித்து வருகிறார். தற்போது ப.ஜ.க-வில் இணையப் போவதாக அறிவித்துள்ள நிலையில் மீண்டும் அவர் பெயர் செய்திகளில் இடம்பிடித்துள்ளது. பா.ஜ.க-வில் இணைய முடிவெடுத்தது ஏன் என்ற கேள்விக்கு, “நான் கடந்த 10 ஆண்டுகளாக, கேரள மாநிலத்துக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய முயற்சி செய்தேன். ஆனால், இங்கு ஆட்சி செய்த அரசுகளைத் மீறி என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. பா.ஜ.க மட்டுமே மாநிலத்துக்கு நல்லது செய்ய முடியும் என நான் நம்புகிறேன். வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவும் நான் தயாராக இருக்கிறேன்” என்கிறார் அவர்.பா.ஜ.க கடந்த 5 ஆண்டுகளில் தென் மாநிலங்கள் தங்கள் வருகையை வலுவாக பதிந்து விட வேண்டும் என்ற நோக்கில் பா.ஜ.க தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், 50 ஆண்டுகளுக்கும் மேலாக, பெரும்பான்மை மக்களின் வாக்குகளை பெறும் கட்சிகள், களப்பணிகளில் வலுவான அரண் அமைத்து வைத்துள்ளனர். மத்தியில் ஆட்சி அமைத்திருந்தாலும், பா.ஜ.கவால் இந்த அரணை உடைத்தெறிய முடியவில்லை. மாறாக பா.ஜ.க மாநிலங்களில் தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள எடுக்கும் முயற்சி தான் பிரபலங்களை தங்களோடு இணைத்தல். திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசு அதிகாரிகள், சமூக சேவகர்கள் என்று பெயரெடுத்தவர்கள் என சமீபத்தில் பா.ஜ.க-வில் இணைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏராளம். தமிழகத்தில் குற்றப் பின்னணி கொண்ட சிலரும் பா.ஜ.க-வில் இணைக்கப்பட்டது சர்ச்சையானது. சபரிமலை விவகாரம், தங்கக் கடத்தல் விவகாரம் என கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக பா.ஜ.க எடுத்த முயற்சிகளில் பெரிய அரசியல் மாற்றங்களை பா.ஜ.கவால் ஏற்படுத்த முடியவிலை. அதனால், மக்கள் மத்தியில் மதிப்பு கொண்ட ’மெட்ரோமேன்’ ஸ்ரீதரனின் இணைப்பு கட்சிக்கு கேரளாவில் நன்மதிப்பை ஏற்படுத்தும் என்று பா.ஜ.க நம்புகிறது.
http://dlvr.it/Rt37J3
Share:

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 21 ஆக உயர்வு

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.  சாத்தூர் அருகே உள்ள அச்சன்குளத்தில் மாரியம்மாள் பட்டாசு ஆலையில் கடந்த 12 ஆம் தேதி வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்தனர். இதுதொடர்பாக பட்டாசு ஆலை குத்தகைக்காரர்கள் 2 பேர் உள்ளிட்ட 3 பேரை ஏற்கெனவே போலீசார் கைது செய்த நிலையில், பட்டாசு ஆலை உரிமையாளர் சந்தனமாரியும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் 80 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த சாத்தூர் படந்தால் பகுதியைச் சேர்ந்த வைஜெயந்தி மாலா (30) என்ற பெண் தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த பெண்ணிற்கு 12 வயதில் குரு தர்ஷினி என்ற பெண் பிள்ளையும், 10 வயதில் ஜோதி லட்சுமி என்ற பெண் குழந்தையும் உள்ளது
http://dlvr.it/Rt20Ww
Share:

கோவை: தடுப்பூசி போட்டதால் 2 குழந்தைகள் உயிரிழந்ததாக புகார்

கோவையில், தடுப்பூசி போட்டதால் இரு குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்படும் புகார் தொடர்பாக, கமிட்டி அமைத்து விசாரணை நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவை மசக்காளிபாளையம் அருகே வசிக்கும் பிரசாத்- விஜயலட்சுமி தம்பதியின் 2 ஆவது குழந்தையான, மூன்று மாத ஆண்குழந்தைக்கு அதே பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சுகாதாரத்துறையால் நடத்தப்பட்ட முகாமில் தடுப்பூசி போடப்பட்டது. பென்டாவேலன்ட், ரோடோவைரஸ் தடுப்பூசி மற்றும் போலியோ சொட்டு மருந்து குழந்தைக்கு போடப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து வீட்டிற்கு சென்ற குழந்தை மயங்கியுள்ளது. அதனைத்தொடர்ந்து குழந்தை கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குழந்தை இறந்துவிட்டது. அதனைத்தொடர்ந்து தடுப்பூசி போட்டதால் குழந்தை இறந்ததாக சர்ச்சை எழுந்த நிலையில், உடற்கூராய்வில், நிமோனியா காய்ச்சல் காரணமாக குழந்தை உயிரிழந்தது தெரியவந்தது.அதேபோல சவுரிபாளையம் பகுதியைச் சேர்ந்த வெற்றிமாறன் என்ற இரண்டரை வயது குழந்தைக்கு மசக்காளிபாளையம் துணை சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்பட்ட நிலையில், அந்தக் குழந்தையும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தது. இது குறித்து பேசிய சுகாதாரத்துறை செயலர், “ இந்த விவகாரம் குறித்து, தனி மருத்துவர்கள் குழு விசாரித்து வருகிறது. அவர்களது ஆய்வுக்குப் பின்னரே காரணம் தெரிய வரும்” என்றார்.
http://dlvr.it/Rt20Qk
Share:

Thursday 18 February 2021

உத்தரப்பிரதேசம்: கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் 2 தலித் சிறுமிகள் படுகொலை! - உன்னாவ் கொடூரம்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள உன்னாவ் மாவட்டதில், மீண்டும் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. பாபுரா என்ற கிராமத்தில் வசிக்கும் தலித் சமூகத்தை சேர்ந்த மூன்று சிறுமிகள், தங்களின் கால்நடைகளுக்குத் தீவனம் எடுப்பதற்காக அருகில் உள்ள வயலுக்குச் சென்றுள்ளனர். நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததனால் குடும்பத்தினரும், கிராம மக்களும் சிறுமிகளைத் தேடத் தொடங்கியுள்ளனர். குற்றம் நீண்ட நேரத் தேடலுக்குப் பிறகு, அந்த மூன்று சிறுமிகளும் அருகிலிருந்த வயல் வெளியில், அவர்களின் ஆடைகளினால் கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர். அதில் 2 சிறுமிகள் ஏற்கனவே இறந்தது தெரியவந்துள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்க்கப்பட்ட மற்றொரு சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாகப் பேசிய காவல்துறை அதிகாரி ஆனந்த் குல்கர்னி, ``இரண்டு சிறுமிகள் இறந்துவிட்டனர், மற்றொரு சிறுமி ஆபத்தான நிலையில் உன்னாவ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். குற்றவாளிகளைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. சிறுமிகளின் வாயில் வெள்ளை நுரை இருந்ததால், விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று முதல் கட்ட மருத்துவ ஆய்வில் தெரிகிறது" என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.ஆனந்த் குல்கர்னி சிறுமிகள் மூவரும் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மயங்கிக் கிடந்தனர் என்கின்றனர் குடும்பத்தினர் . ஆனால் போலிஸ் தரப்பு அதை மறுத்துள்ளது. “நாங்கள் சம்பவ இடத்துக்கு செல்லும் முன்னரே உடல்கள் அங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதால், கை கட்டப்பட்டிருந்ததா என்று உறுதிபடுத்த முடியவில்ல” என்றனர். மற்றொருபுறம், தற்கொலையா என்ற கோணத்திலும் விசாரணை நடப்பதாகக் கூறப்படுகிறாது. ஆனால், கைகள் கட்டப்பட்ட நிலையில், எப்படி அவர்களால் விஷம் குடித்திருக்க முடியும் என்று சிறுமிகளின் பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், “எங்களுக்கு யாருடனும் முன்பகை கிடையாது. இதை யார் செய்திருக்கக் கூடும் என்று எங்களால் யூகிக்கவும் முடியவில்லை" என்று சிறுமிகளின் குடும்பத்தினர் தெரிவித்தனர். 3 girls were found lying unconscious in their own farm in Asoha, Unnao Dist, today. 2 girls died at the hospital, one referred to District Hospital. As per initial info, the girls had gone to cut grass. The doctor states that there are symptoms of poisoning; probe on: SP Unnao pic.twitter.com/IJO4L7GtUk— ANI UP (@ANINewsUP) February 17, 2021 சிகிச்சை பெற்றுவரும் சிறுமியின் நரம்பு மண்டலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. காவல்துறையினர் இறந்த சிறுமிகளின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். பெண்கள் பாதுகாப்பில் அவப்பெயர் பெற்ற உன்னாவில், மீண்டுமொரு சம்பவம் நடந்திருப்பது, உத்திரப் பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
http://dlvr.it/RszBdH
Share:

''இந்த முறை தப்பாது'' - மலாலா மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதி மீண்டும் மிரட்டல்!

மலாலாவைக் கொல்லப்போவதாக, ஏற்கெனவே துப்பாக்கியால் சுட்ட தலிபான் பயங்கரவாதி ட்விட்டரில் மிரட்டல் விடுத்துள்ளார். 12 வயது இருந்த போது மலாலா ஒரு பள்ளிச்சிறுமி. அப்போதே பிபிசி உருது இணைய தளத்தில் தலிபான்களின் அராஜகம் பற்றி எழுதி உலகின் கவனத்தை பெற்றார். அதற்கு பரிசாக அவருக்கு தலிபான் கொடுத்ததுதான் துப்பாக்கிச் சூடு. அக்டோபர் 09, 2012 அன்று வழக்கம்போல பள்ளி முடிந்து, மலாலாவும் சக மாணவிகள் சிலரும் வீட்டிற்குச் செல்லும் பேருந்தில் பயணித்தனர். அந்தப் பேருந்து வழியில் ஒரு இடத்தில் துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்டது. பேருந்தின் உள்ளே ஏறிய தலிபான் தீவிரவாதி ஒருவன் மலாலாவை சரமாரியாக சுட்டார். கழுத்திலும் தலையிலும் குண்டடி பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த மலாலா 'ராவல்பிண்டி' ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின் பாகிஸ்தான் அரசு இங்கிலாந்திலுள்ள 'பர்மிங்ஹாமின் எலிசபத்' மருத்துவமனைக்கு மலாலாவை அனுப்பியது. இங்கிலாந்தில் கொடுக்கப்பட்ட தீவிர சிகிச்சைக்குப் பிறகு பீனிக்ஸ் பறவையாக எழுந்து பறந்தார் மலாலா. தொடர்ந்து ஆறு ஆண்டுகள் அவரால் பாகிஸ்தான் திரும்ப முடியவில்லை. எனினும் சொந்த மண்ணின் நினைவுகளைச் சுமந்த படியே இங்கிலாந்தில் தனது படிப்பை தொடர்ந்தார். அவருக்கு நோபல் பரிசு கொடுத்து கவுரவம் செய்யப்பட்டது. அதன்பின்னர் மலாலா மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதி எசான் 2017ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். ஆனால் கடந்த ஆண்டு ஜனவரியில் சிறையில் இருந்து தப்பினார் எசான். அவர் சிறையில் இருந்து தப்ப பாகிஸ்தான் அரசுதான் உதவி செய்திருக்க வேண்டுமென பொதுவான குற்றச்சாட்டும் உள்ளது. இந்நிலையில் தற்போது மீண்டும் எசானின் ட்விட்டர் பதிவு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தனது ட்விட்டர் மூலம் மலாலாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதில்., உன்னுடைய சொந்த வீட்டுக்கு வா. உன்னுடனும், உன் தந்தையுடனும் முடிக்கப்படாத ஒரு வேலை உள்ளது. நாங்கள் தொடங்கியதை இந்த முறை முடிப்போம். இந்த முறை தவறாது என மிரட்டல் கொடுத்தார். பயங்கரவாதியின் மிரட்டலுக்கு பிறகு அவரது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. பயங்கராவதியின் மிரட்டலுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனிடையே அரசின் பிடியில் இருந்த தலிபான் பயங்கரவாதி எவ்வாறு தப்பித்தார் என பாகிஸ்தான் ராணுவத்திற்கும், அந்நாட்டு பிரதமர் இம்ரான்கானுக்கும் தனது ட்விட்டர் பக்கம் மூலம் மலாலா கேள்வி எழுப்பியுள்ளார். This is the ex-spokesperson of Tehrik-i-Taliban Pakistan who claims responsibility for the attack on me and many innocent people. He is now threatening people on social media. How did he escape @OfficialDGISPR @ImranKhanPTI? https://t.co/1RDdZaxprs — Malala (@Malala) February 16, 2021
http://dlvr.it/Rsy1JC
Share:

மூதாட்டியின் குற்றச்சாட்டை மாற்றி மொழிபெயர்த்து ராகுலிடம் கூறிய நாராயணசாமி!

ராகுல்காந்திக்கு தமிழ் தெரியாது என்பதை பயன்படுத்தி மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த மூதாட்டியின் குற்றச்சாட்டை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மேடையில் மறைத்தது, மாற்றி மொழிபெயர்த்தது விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. புதுச்சேரியில் சோலையூர் பகுதி மீனவ குடும்பங்களிடையே காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி உரையாடியபோதுதான் இந்த நிகழ்வு அரங்கேறியது. அப்போது பேசிய மூதாட்டி ஒருவர், புயல் பாதிப்புகளின் போது முதலமைச்சர் நாராயணசாமி தங்களை வந்து பார்க்கவில்லை, கண்டுகொள்ளவில்லை என பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். திகைத்துப் போன நாராயணசாமி தன் மீதான குற்றச்சாட்டை முழுவதும் மறைத்து ராகுலிடம் மொழி பெயர்த்தார். நாராயணசாமியின் பதில் தற்போது அரசியல் வட்டாரத்தில் மட்டும் அல்லாமல் சமூக வலைதளங்களிலும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.
http://dlvr.it/Rsy19x
Share:

Wednesday 17 February 2021

வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் சோதனையை இந்தியாவில் தொடங்கிய ட்விட்டர்!

சமூக வலைத்தளமான ட்விட்டரில் டேரெக்ட் மெசேஜ் மூலம் வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் சோதனையை இந்தியாவில் தொடங்கியுள்ளது அந்நிறுவனம். அது தொடர்பான ட்வீட்டை ட்விட்டர் இந்தியா போஸ்ட் செய்துள்ளது. இந்தியாவுடன் பிரேசில், ஜப்பான் மாதிரியான நாடுகளிலும் இந்த வாய்ஸ் மெசேஜ் வசதியை சோதனையிட்டு வருவதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது.  “இந்தியா ட்விட்டரின் முன்னணி சந்தைகளில் ஒன்றாகும். அதனால் தான் நாங்கள் தொடர்ந்து புதுப்புது அம்சங்களை சோதித்து வருகிறோம்” என தெரிவித்துள்ளார் ட்விட்டர் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மணீஷ் மகேஸ்வரி.  ?test,?test: Starting today, you'll be able to record and send voice messages in DMs ? Here’s how?PS. The experiment will be rolled out in phases. pic.twitter.com/aqQM6h9sof — Twitter India (@TwitterIndia) February 17, 2021 இந்த வசதி எப்படி செயல்படுகிறது என்பது தொடர்பான வீடியோவையும் ட்விட்டர் வெளியிட்டுள்ளது.
http://dlvr.it/Rsv9tP
Share:

விநாயகர் டாலர் அணிந்து மேலாடையின்றி போஸ் கொடுத்த ரியான்னா: மும்பை போலீசாரிடம் புகார்!

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரியான்னா மேலாடை அணியாமல், கழுத்தில் விநாயகர் டாலர் அணிந்துள்ள படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ட்வீட் செய்திருந்தார் ரியான்னா. அது உலகளவில் கவனத்தை ஈர்த்தது. அந்த ஒரு ட்வீட்டால் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் எழுந்திருந்தன. இந்த சூழலில் தான் மேலாடையின்றி விநாயகர் டாலர் அணிந்துள்ள படத்தை தனது ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அவர்.  “ஜமைக்காவை சேர்ந்த பாப் பாடகர் Popcaan கேட்டுக்கொண்டதற்காக இன்றிரவு மேலாடை இன்றி” என அந்த ட்வீட்டுக்கு கேப்ஷன் போட்டுள்ளார் ரியான்னா.  when @PopcaanMusic said “me nuh wan ya wear no lingerie tonight fa me girl” @SavageXFenty pic.twitter.com/bnrtCZT7FB — Rihanna (@rihanna) February 15, 2021 இது இந்தியாவில் உள்ள பாரதிய ஜனதா கட்சி மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் உறுப்பினர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது. “இது இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் செயல்” என சொல்லி டெல்லி மற்றும் மும்பை போலீசாரிடம் அந்த இரண்டு சமூக வலைத்தள கணக்குகள் மீதும் புகார் கொடுத்துள்ளனர்.
http://dlvr.it/Rst0W7
Share:

‘ரீபொக்’ நிறுவனத்தை விற்க அடிடாஸ் முடிவு..!

15 ஆண்டுகளுக்கு முன்பு 3.8 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கப்பட்ட ‘ரீபோக்’ பிராண்டை விற்க திட்டமிட்டுள்ளதாக அடிடாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த அடிடாஸ் நிறுவனம், விளையாட்டு ஆடை, காலணிகள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் உலகளவில் முன்னணி வகிக்கும் நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் ‘ரீபோக்’ நிறுவனத்தின் வர்த்தகத்தையும் வைத்துள்ளது. இந்நிலையில் 15 ஆண்டுகளுக்கு முன் சுமார் 3.8 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கப்பட்ட ரீபோக் பிராண்டை விற்க முடிவு செய்துள்ளதாக அடிடாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனையொட்டி நடப்பாண்டின் முதல் காலாண்டில் இருந்து ‘ரீபோக்’ நிறுவனத்தின் வணிகம் நிறுத்தப்பட்டுள்ளதாக முதலீட்டாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதற்கான காரணத்தை அடிடாஸ் நிறுவனம் தெரிவிக்கவில்லை.
http://dlvr.it/Rst0TF
Share:

Tuesday 16 February 2021

ம.பி: கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்த்த பேருந்து; 39 பேர் பலி! - தொடரும் மீட்புப் பணிகள்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள சித்தி (Sidhi) மாவட்டத்திலிருந்து சட்னாவுக்கு (Satna) ஒரு பேருந்து இன்று காலை 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. இந்த பேருந்து பாட்னா அருகிலுள்ள பன்சாகர் (Bansagar) பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த கால்வாயில் கவிழ்ந்தது.பேருந்து விபத்து கால்வாய் மிக ஆழமாக இருந்ததால் பேருந்து உள்ளே மூழ்கியது. விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்த மீட்புப்படையினர் மீட்புப்பணியைத் தொடங்கினர். இந்த விபத்தில், பேருந்தினுள் பயணித்த 39 நபர்களின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரி உமேஷ் ஜோகா (Umesh Joga), ``காலை 7.30 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த பேருந்தில் பயணித்த ஏழு நபர்கள் தப்பித்துக் கரை சேர்ந்துள்ளனர். இந்த பேருந்தில் 50-க்கும் அதிகமானவர்கள் பயணித்ததாகத் தெரியவந்துள்ளது. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்று கூறினார். #UPDATE Madhya Pradesh: A total of 35 bodies recovered till now from the site in Sidhi where a bus, carrying around 54 passengers, fell into a canal today. 7 people were rescued. A search operation is underway. pic.twitter.com/Q47fSHhgUw— ANI (@ANI) February 16, 2021 இந்த துயர சம்பவத்தை அடுத்து, மத்தியப் பிரதேசத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொள்ளவிருந்த ஒரு முக்கிய நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எஸ்.டி.ஆர்.எஃப் (SDRF) மற்றும் நீச்சல் வீரர்கள் மீட்புப்பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறீர்கள். கால்வாயின் நீரோட்டத்தைக் குறைப்பதற்கு, நீரைப் பன்சாகர் கால்வாயிலிருந்து சிஹாவால் (Sihawal) கால்வாய்க்கு மாற்றி விடப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் பேசுகையில், "இது மிகவும் துரதிர்ஷ்டவசமான விபத்து. மீட்புப்பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு தொடர்ந்து பேசி வருகிறேன். மனதுக்கு பெரும் வேதனையளிக்கிறது. சம்பவ இடத்திற்கு அமைச்சர்கள் விரைந்துள்ளனர். இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் உதவி உடனடியாக வழங்கப்படும். அனைவரும் பொறுமையாக இருக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். सीधी की दुर्भाग्यपूर्ण घटना को लेकर मैं लगातार प्रशासन से और राहतकार्य में लगे हुए लोगों से चर्चा कर रहा हूँ। बहुत दुःखद है कि दुर्घटना में 18 लोगों की जान चली गई है। मन बहुत व्यथित है। बचावकार्य लगातार जारी है; कलेक्टर, कमिश्नर, आईजी, एसपी, एसडीआरएफ की टीम लगी हुई है। pic.twitter.com/TYPKV786Hf— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) February 16, 2021 "சித்தியில் நடந்திருப்பது ஒரு சோகமான சம்பவம். இந்த விபத்தின் மீட்புப் பணிகள் குறித்து முதல்வர், நிமிடத்திற்கு நிமிடம் கேட்டறிந்து கொண்டிருக்கிறார். முதல்வரின் அறிவுறுத்துதலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து கொண்டிருக்கிறேன். அங்குள்ள அதிகாரிகள் அளித்துள்ள தகவல்கள் படி, சுமார் 30 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது" என்று மூத்த அமைச்சர் துளசி ராம் சிலாவத் தெரிவித்துள்ளார். விபத்தில் உயிர் இழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் ரூபாய் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
http://dlvr.it/RsqDqt
Share:

நீலகிரி : தாயைப் பிரிந்த குட்டியானை உயிரிழப்பு - நடந்தது என்ன?

நீலகிரி மாவட்டம் கார்குடி வனப்பகுதியில், தாயை விட்டுப் பிரிந்த குட்டி யானை நெற்றியில் காயத்துடன் சுற்றித் திரிந்த நிலையில் மீட்டு சிகிச்சை அளித்த வனத்துறையினருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. மீட்கப்பட்ட சில மணி நேரத்தில் குட்டியானை பரிதாபமாக உயிரிழந்தது. கார்குடி வனப்பகுதி, நீலகிரி கார்குடி வனப்பகுதியில் உள்ள, பிதர்லா பாலம் அருகே குட்டி யானை ஒன்று தனியாக நடமாடுவதை கண்டு அவ்வழியாக சென்றவர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், குட்டியானை, தாயை பிரிந்து சுற்றித்திரிவதை அறிந்தனர். அந்த குட்டியானையின் நெற்றியில் பெரிய காயம் இருந்தது. இதையடுத்து முதுமலையில் இருந்து வனத்துறையைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின் குட்டி யானையை அதன் தாயிடம் சேர்க்க வனத்துறையினர் திட்டமிட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி குட்டி யானை உயிரிழந்தது. யானையின் இறப்புக்கு அதன் நெற்றியில் ஏற்பட்ட காயத்தை ஒரு முக்கியமான காரணமாக கூறும் வனத்துறையினர், தாயை பிரிந்த நிலையில் உணவு கிடைக்காமலும் இறந்திருக்கலாம் என்று கூறியுள்ளனர்.
http://dlvr.it/Rsp4nT
Share:

`தோனி’ படத்தில் சுஷாந்துடன் இணைந்து நடித்த நடிகர் தற்கொலை! - காரணம் என்ன?

`எம்.எஸ்.தோனி’ படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் சேர்ந்து நடித்தவர் சந்தீப் நஹர் (32). நடிகர் அக்‌ஷய் குமாருடன் `கேசரி’ உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் திடீரென தனது வீட்டில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். வீட்டில் தூக்கில் தொங்கிய அவரை, அவரின் மனைவி மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரைச் சோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர் தற்கொலைக்கு முன்பு நீண்ட ஒரு ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டிருக்கிறார் அவர். சந்தீப் நஹர் அதோடு மிகவும் மனவேதனையோடு ஒரு வீடியோவையும் ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருக்கிறார். ஃபேஸ்புக்கில் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், `நான் தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன். எனது தற்கொலைக்கு எனது குடும்பத்தில் யாரும் பொறுப்பு கிடையாது’ என்று தெரிவித்திருக்கிறார். ஆனால், அவரது ஃபேஸ்புக் பதிவில், `எனது மனைவியுடனான சண்டையால் வாழ்க்கையை வெறுத்துவிட்டேன். எனவே உயிருடன் இருக்க வேண்டும் என நான் விரும்பவில்லை. நான் நல்ல நாள்கள் மற்றும் மோசமான நாள்களைச் சந்தித்திருக்கிறேன். ஆனால், இந்தப் பிரச்னைகளால் ஏற்படும் மன அழுத்தத்தை என்னால் சமாளிக்க முடியவில்லை. தற்கொலை செய்துகொள்வது கோழைத்தனம் என்று எனக்கு தெரியும். நான் வாழ விரும்புகிறேன். ஆனால், மகிழ்ச்சி, சுயமரியாதை இல்லாமல் வாழ்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது? என் மனைவியும் மாமியாரும் என்னைப் புரிந்துகொள்ள முயலவில்லை. ஒவ்வொரு நாளும் நடக்கும் வாக்குவாதத்தை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எனது தற்கொலைக்கு எனது மனைவி காரணம் இல்லை. அவர் நடந்துகொள்ளும் விதம் அவருக்குச் சாதாரணமாகத் தெரிகிறது. ஏனென்றால், அது அவரது இயற்கையான குணம். ஆனால், அது எனக்குச் சாதாரணமானதாக இல்லை. நான் மும்பையில் பல ஆண்டுகளாக இருக்கிறேன். மோசமானவற்றைச் சந்தித்திருக்கிறேன். ஆனால், ஒருபோதும் நொடிந்துபோனது இல்லை’’ என்று தெரிவித்திருக்கிறார். Also Read: `எனை நோக்கிப் பாயும் தோட்டா', வெப்சீரிஸ் நடிகர் தற்கொலை... காரணம் என்ன? போலீஸார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். இறுதிச் சடங்குகள் முடிந்த பிறகு அவரின் மனைவியை அழைத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். சந்தீப், மும்பையின் மேற்கு பகுதியிலுள்ள கோரேகாவ் மேற்குப் பகுதியில் தனது மனைவி கஞ்சன், மாமியாருடன் வசித்துவந்தார். தற்கொலைக்கு முன்பு தனி அறையில் அமர்ந்து சந்தீப் மது அருந்திக்கொண்டிருந்ததாகத் தெரிகிறது. பின்னர் தூக்குப் போட்டுக்கொண்டார். அவரின் மனைவி அவரைத் தூக்கிக்கொண்டு முதலில் ஒரு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு சிகிச்சையளிக்க மறுத்ததால் வேறு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. எற்கெனவே சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். அவர் என்ன காரணத்துக்காகத் தற்கொலை செய்தார் என்று இன்னும் போலீஸாரும், சி.பி.ஐ-யும் கண்டுபிடிக்காமல் இருக்கின்றனர். தற்போது அவருடன் சேர்ந்து நடித்த சந்தீப் நஹரும் தற்கொலை செய்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
http://dlvr.it/Rsp4k4
Share:

Monday 15 February 2021

மக்களின் பிரைவசியை பாதுகாப்பது நமது கடமை: வாட்ஸ்அப் வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து

புதிய கொள்கை தொடர்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக புதிய கொள்கைகளை அறிவித்திருந்தார்கள். அதன்படி தனிநபரின் தகவல்கள் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகும் எனத் தகவல்கள் வெளியாகியிருந்தன. இதையடுத்து மத்திய அரசு வாட்ஸ்அப் நிறுவனத்திடம் இதுகுறித்த தகவல்களை கேட்டுப்பெறலாம் என சொல்லப்பட்டு வந்தது. இதனிடையே பொதுநல மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு வந்தன. அதன்படி வாட்ஸ் அப்பின் புதிய பிரைவேஸி கொள்கைகளை செயல்படுத்த தடை விதிக்கக்கோரி டெல்லி கர்மான்யா சிங் செரீன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, “தனிப்பட்ட தகவல்களை மக்கள் பெரிதாக கருதுகின்றனர். அவர்களின் தகவல்களை காப்பது நமது கடமை. 4 ட்ரில்லியன் டாலர் மதிப்புள்ளதாக வாட்ஸ் அப் இருக்கலாம். தங்களுக்கு மக்களின் தகவல் பாதுகாப்பே முக்கியம்” என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், இதுகுறித்து வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
http://dlvr.it/RslQdN
Share:

மேடையில் பேசும்போது மயங்கிய குஜராத் முதல்வர்...! தாங்கிப்பிடித்த பாதுகாவலர்!

குஜராத்தில் பொதுக்கூட்ட மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போதே முதலமைச்சர் விஜய் ரூபானி மயங்கி விழுந்தார். குஜராத் மாநிலம் வதோதரா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற விஜய் ரூபானி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் பேசிக் கொண்டிருந்த அவர் மேடையிலேயே மயங்கி விழுந்தார். இதை கவனித்த பாதுகாவலர் உடனடியாக வந்து அவரை தாங்கிபிடித்தார். மேடையிலேயே முதல் உதவி அளிக்கப்பட்டு, அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதுகுறித்து பாரத் டேஞ்சர் கூறுகையில் “முதலமைச்சருக்கு கடந்த 2 நாட்களாகவே உடல்நிலை சரியில்லை. ஆனால் சனிக்கிழமை ஜாம்நகரிலும், ஞாயிற்றுக்கிழமை வதோதராவிலும் நடைபெற்ற தனது பொதுக் கூட்டங்களை ரத்து செய்வதற்குப் பதிலாக கலந்து கொண்டார். இப்போது அவர் நலமாக இருக்கிறார்” எனத் தெரிவித்தார். வதோதரா உள்ளிட்ட ஆறு மாநகராட்சிகளுக்கான தேர்தல் பிப்ரவரி 21 ம் தேதியும், நகராட்சிகள், மாவட்டங்கள் மற்றும் தாலுகா பஞ்சாயத்துகளுக்கான தேர்தல்கள் பிப்ரவரி 28 ம் தேதியும் நடைபெற உள்ளது.
http://dlvr.it/RskJhf
Share:

நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்

நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் கட்டாயம் என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஃபாஸ்டேக் முறைக்கு மாறுவதற்கான நீட்டிக்கப்பட்ட அவகாசம் இன்று நள்ளிரவுடன் முடியும் நிலையில் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் இல்லாமல் வாகனங்கள் சென்றால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட இரு மடங்கு செலுத்த வேண்டியிருக்கும் எனவும் சாலைப்போக்குவரத்து அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் செல்லும் கார், வேன், லாரி, பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் சுங்கச் சாவடிகளில் மின்னணு முறையில் பணம் செலுத்துவதற்கான ஃபாஸ்டேக் முறையை கடந்த 2016ம் ஆண்டே மத்திய அரசு கொண்டு அறிமுகப்படுத்தியது. பின்னர் இதை கட்டாயமாக்குவதற்கான அவகாசம் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது. சுங்கச்சாவடியை வாகனங்கள் கடக்கும்போதே, ரேடியோ அலைவரிசை தொழில்நுட்பத்தின் அடிப்படையில், தானியங்கி முறையில் சுங்கக்கட்டணம் தானாக கழித்துக்கொள்ளப்படும் என்பது இதன் சிறப்பம்சம். இதனால் சுங்கச்சாவடிகளில் நெடுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை தவிர்க்கப்படும்.
http://dlvr.it/RskJgn
Share:

Sunday 14 February 2021

ஒளவையார், பாரதியார் பாடல்கள் மேற்கோள் - சென்னையில் பிரதமர் மோடி உரை

'வணக்கம் சென்னை', 'வணக்கம் தமிழ்நாடு' என தமிழில் கூறி உரையை பிரதமர் மோடி தொடங்கினார். மேலும் பேசிய அவர்,வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும் என்ற ஒளவையார் பாடலை மேற்கோள் காட்டினார். பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று சென்னை வந்தார் பிரதமர் மோடி. பின்னர் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் அமைக்கப்பட்ட மேடையில் பிரதமர் மோடி உரையாற்றினார். அவரது உரையில் ஒளவையார் , பாரதியார் பாடல்களை மேற்கோள் காட்டினார். மேலும் பேசிய அவர், '' சென்னை மக்கள் எனக்கு சிறப்பான வரவேற்பு அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் தமிழக அரசின் வளர்ச்சிக்கு உதவும். வேளாண் உற்பத்தியில் சாதனை படைத்த தமிழக விவசாயிகளுக்கு பாராட்டுகள். நீர் ஆதாரங்களை தமிழக விவசாயிகள் சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர்.  கொரோனா காலத்திலும் திட்டமிட்டப்படி மெட்ரோ வேலைகள் முடிக்கப்பட்டுள்ளன. பாரதியார் பாடலான 'ஆயுதம் செய்வோம், நல்ல காகிதம் செய்வோம்' பாடலையும் பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசினார்.
http://dlvr.it/RshBbw
Share:

“ஜெயலலிதா எதிர்த்த உதய் மின் திட்டத்தை எடப்பாடி பழனிசாமி அரசு ஆதரிக்கிறது“ - கனிமொழி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த திமுக எம்பி கனிமொழி பேட்டியளித்தார்.  அப்போது அவர் பேசும்போது, "குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதியில் நெசவுத்தொழில் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு, போன்ற பல்வேறு பிரச்னை காரணமாக நலிவடைந்துள்ளது. கொரோனா காலத்திற்கு பிறகு நெசவு தொழிலை மேம்படுத்த தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாயநீர் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்காத நிலையில் அமைச்சர் தங்கமணி தனது உறவினருக்கு புதிதாக சாய சலவை அமைப்பதற்கு அனுமதி வழங்கி உள்ளார். சாயசலவை கழிவுநீர் நேரடியாக ஆற்றில் கலந்து சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருவதற்கு தீர்வு ஏற்படவில்லை. உலக சந்தையில் பெட்ரோல் டீசல் விலை குறைந்து வரும் நிலையில் மத்திய அரசு உயர்த்தி கொண்டே போகிறது. இதனால் சுற்றுலா, லாரி தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழக நீட் தேர்வு குறித்து நீதிமன்றத்தில் கண்துடைப்பாக மட்டுமே வழக்காடியது அதிமுக. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வதற்காக தளபதி ஸ்டாலின் முழு மூச்சாக செயல்படுவார். எந்த நேரத்தில் தேர்தல் அறிவிப்பு வந்தாலும் திமுக தயார். தேர்தலை சந்திக்க 6 மாதத்திற்கு முன்பிருந்தே திமுக தயாராக உள்ளது. உதய் மின் திட்டத்தில் கையொப்பம்மிட்ட தமிழக அரசு விவசாயம், நெசவாளர்களுக்கு வழங்கிய இலவச மின்சாரத்தை கேள்விக்குறியாக மாற்றியது அதிமுக தான். ஜெயலலிதா உதய் மின் திட்டத்தை எதிர்த்து வந்த நிலையில், எடப்பாடி அரசு உதய் மின் திட்டத்தை ஆதரித்து விட்டு தற்போது இலவச மின்சாரம் கொடுப்போம் என்பதை மக்கள் நம்பமாட்டார்கள் திமுகவின் எதிரி எப்போதும் அதிமுக மட்டும் தான் என்று கூறினார்.
http://dlvr.it/RsgRKy
Share:

மும்பை: ஆட்டோவிலே உணவு, தூக்கம்! -பேத்தியின் படிப்புக்காக வீட்டை விற்ற முதியவரின் கதை

மும்பையில் கார்ரோடு பகுதியில் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்துவர் தேஷ்ராஜ். இருவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். ஆனால் ஒருவர் திடீரென கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர், பின்னர் ஒருவாரம் கழித்து பிணமாக மீட்கப்பட்டார். மகன் இறந்த அடுத்த நாளே ஆட்டோ ஓட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் வேறு வழியில்லாமல் ஆட்டோ எடுத்துக்கொண்டு பிழைப்பை பார்க்க சென்றார். ஆனால் தேஷ்ராஜ் துரதிஷ்டம் அவரது இரண்டாவது மகனும் அடுத்த இரண்டு வருடத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதனால் தனது மருமகள் மற்றும் நான்கு குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தேஷ்ராஜுக்கு ஏற்பட்டது. காலையில் 6 மணிக்கு ஆட்டோ ஓட்ட ஆரம்பித்தால் இரவு 11 அல்லது 12 மணிவரை ஆட்டோ ஓட்டுவார். தேஷ்ராஜ் அதில் கிடைக்கும் 10 ஆயிரத்தில் தனது பேத்திகளின் படிப்புக்கு 6 ஆயிரத்தை செலவு செய்துவிடுகிறார். எஞ்சிய 4 ஆயிரத்தை கொண்டு குடும்பத்தில் உள்ள 7 பேர் சாப்பிட வேண்டிய நெருக்கடியான சூழ்நிலை. இது குறித்து தேஷ்ராஜ் கூறுகையில், ``பெரும்பாலான நாட்களில் சாப்பிட எதுவும் இருக்காது. எனது பேத்தி 9-வது வகுப்பு படிக்கும்போது படிப்பை பாதியில் விட்டுவிடட்டுமா என்று என்னிடம் கேட்டாள். நான் தான் உனக்கு எவ்வளவு படிக்க வேண்டும் என்று விருப்பமோ அதுவரை படிக்கும்படி கூறினேன். எனது பேத்தி 12வது வகுப்பில் 80 சதவீத மதிப்பெண் எடுத்த தினத்தன்று அனைத்து பயணிகளையும் பணம் இல்லாமல் அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்து சென்று பேத்தியின் தேர்ச்சியை கொண்டாடினேன். எனது பேத்தி பி.எட் படிக்க டெல்லி செல்ல வேண்டும் என்று சொன்னபோது அவளது படிப்பு செலவை என்னால் ஈடுகட்ட மூடியவில்லை. ஆனால் அவளது ஆசையை நிறைவேற்ற முடிவு செய்தேன். இதற்காக என்னிடம் இருந்த ஒரே வீட்டையும் விற்பனைசெய்து, அதில் கிடைத்த பணத்தை படிப்பு செலவுக்கு கொடுத்தேன். வீட்டை விற்றுவிட்டதால் மும்பையில் வசிக்க வீடு இல்லை. எனவே எனது மனைவி, மருமகள் மற்றும் இதர பேரக்குழந்தைகளை எனது சொந்த கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்திருக்கிறேன். நான் தொடர்ந்து மும்பையில் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கிறேன். ஆட்டோவிலே சாப்பிட்டுக்கொண்டு ஆட்டோவிலே உறங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறேன். பகல் நேரத்தில் ஆட்டோ ஓட்டுகிறேன். எனது பேத்தி எனக்கு போன் செய்து படிப்பில் முதலிடத்தில் வந்து விட்டேன் என்று சொல்லும் போது எனது அனைத்து வலிகளும் காணாமல் போய்விடுகிறது. எனது பேத்தியை கட்டிப்பிடித்துக்கொண்டு என்னை பெருமைப்படுத்தி விட்டாய் என்று கூறினேன். மும்பை - ஆட்டோ எனது குடும்பத்தில் எனது பேத்திதான் முதல் பட்டதாரி. அவள் படித்து முடிக்கும் போதும், அன்றைய தினம் அனைவரையும் ஆட்டோவில் இலவசமாக அழைத்து செல்வேன்" என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார். தேஷ்ராஜ் வாழ்க்கை பற்றிய செய்தி சமூக வலைத்தளத்தில் வெளியானது. உடனே பொதுமக்கள் அவருக்கு தாராளமாக உதவி செய்ய ஆரம்பித்துள்ளனர். தேஷ்ராஜுக்கு 276 பேர் 5.3 லட்சம் ரூபாயை ஆன்லைன் மூலம் கொடுத்துள்ளனர். தேஷ்ராஜுக்காக குஞ்சன் ராட்டி என்பவர் ஆன்லைனில் நிதி திரட்டினார். அதன் மூலம் ரூ.5.3 லட்சம் கிடைத்துள்ளது. மும்பை மக்கள் தொடர்ந்து அவருக்கு உதவி செய்து வருகின்றனர். மும்பை மக்களின் உதவியை கண்டு தேஷ்ராஜ் கண்கலங்கி நிற்கிறார். அப்பணத்தின் மூலம் தனது மற்ற பேரக்குழந்தைகளையும் படிக்க வைக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். தேஷ்ராஜ் மட்டுமல்லாது பலர் மும்பையில் ஆட்டோ மற்றும் டாக்சியில்தான் இரவு நேரத்தில் தங்களது வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர்.
http://dlvr.it/RsgRJQ
Share:

Saturday 13 February 2021

டெஸ்ட்டில் 11 ஆவது முறையாக விராட் கோலி 'டக் அவுட்'!

சென்னையில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் டக் அவுட்டானார். இதனையடுத்து சர்வதேச டெஸ்ட் போட்டியில் 11 ஆவது முறையாக கோலி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று 2ஆவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா தோல்வியடைந்த நிலையில் மிகவும் எதிர்பார்ப்புடன் 2ஆவது போட்டி நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்ந்தெடுத்தார். இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் டக் அவுட்டானார். ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி அரை சதம் கடந்து விளையாடி வருகிறார். இந்நிலையில் புஜாரா அவுட்டான பின்பு களமிறங்கிய கோலி பெரிய அளவில் ரன்களை குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மொயின் அலி பந்துவீச்சில் போல்டாகி ரன் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுவரை சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 11 ஆவது முறையாக கோலி டக் அவுட்டானார். அதுவும் முதல்முறையாக ஒரு சுழற்பந்துவீச்சாளரிடம் கோலி டக் அவுட்டானார். இதுவரை கோலியை வெஸ் இண்டீஸின் ரவி ராம்பால், பென் ஹில்பென்ஹாஸ், லியாம் பிளங்கட், ஜேம்ஸ் ஆண்டர்சன், மிட்சல் ஸ்டார்க், சுரங்கா லக்மல், ஸ்டூவர்ட் பிராட், பாட் கம்மின்ஸ், கேமார் ரோச், அபே ஜாவேத் ஆகிய வேகப்பந்துவீச்சாளர்கள் டக் அவுட்டாக்கியுள்ளனர்.
http://dlvr.it/RsdMYt
Share:

நேஷனல் ஹாட் பிட்ஸ்

என் ஹெச் பிட்ஸ்
http://dlvr.it/RscZ0K
Share:

`சம்பளம் இல்லை... சிறுநீரகத்தை விற்கப்போகிறேன்!’ - கர்நாடக போக்குவரத்து ஊழியரின் அதிர்ச்சிப் பதிவு

கர்நாடக மாநிலத்திலுள்ள ராய்ச்சூர் (Raichur) மாவட்டம், குஷ்டகி (Kushtagi) நகரைச் சேர்ந்தவர் ஹனுமந்த் (38) (Hanumanth Kalegar). இவர் தன் பெற்றோர், மனைவி, மூன்று குழந்தைகளுடன் வசித்துவருகிறார். கங்காவதியிலுள்ள கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் பணியாற்றிவருகிறார். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் போக்குவரத்து சேவையை நிறுத்தியது கர்நாடக மாநில அரசு.NEKRTC பெரும் நிதி நெருக்கடி காரணமாக, போக்குவரத்து ஊழியர்களுக்குச் சரிவரச் சம்பளம் வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. கர்நாடகாவில் இதற்கான போராட்டங்களும் நடைபெற்றன. மீண்டும் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டபோதிலும், குறைந்த அளவு சம்பளம்தான் வழங்கப்படுவதாக ஊழியர்கள் குற்றம்சாட்டிவருகிறார்கள். போக்குவரத்து ஊழியரான ஹனுமந்த், ஊரடங்கு காலத்தில் சம்பளம் கிடைக்காததால், கடன் வாங்கி குடும்பத்தை நடத்தியிருக்கிறார். தற்போது போக்குவரத்து சேவைகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. அனுமந்த் மாதச் சம்பளமாக 16,000 ரூபாய் பெற்றுவந்த நிலையில் தற்போது, 4,000 ரூபாய்தான் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அதிலும், கடந்த இரண்டு மாதங்களாக அந்தச் சம்பளமும் வழங்கப்படவில்லை என்று தனது சிறுநீரகத்தை விற்பனை செய்யப்போவதாக அவர் தனது முகநூலில் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில், ``போக்குவரத்து ஊழியரான என்னால், மளிகை பொருள்கள்கூட வாங்க முடியாமல் சிரமப்படுகிறேன். என் வயதான அம்மாவுக்கு மருந்துப் பொருள்கள் வாங்க பணம் தேவைப்படுகிறது. என் மூன்று குழந்தைகளை வளர்க்க வேண்டியிருக்கிறது. இதற்கு மேல் கடன் வாங்க முடியாது. அதனால், எனது சிறுநீரகத்தை நான் விற்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை’’ என்று அந்தப் பதிவில் தெரிவித்திருந்தார். இவரின் இந்தப் பதிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.போக்குவரத்துக் கழக ஊழியர் இந்தப் பதிவு அதிக அளவில் கவனம் பெற்றதோடு, அவருக்குப் பலரும் தங்களின் உதவிக்கரங்களை நீட்டிவருகிறார்கள். ``அனுமந்த் பணிக்குச் சரியாக வராததே அவருக்குச் சம்பளம் குறைவாக வந்ததற்கான காரணம். அனுமந்த் சரியாக பணிக்கு வரும்படி பலமுறை அவரின் குடும்பத்தாரிடம் கூறியிருக்கிறேன்" என்று போக்குவரத்துத்துறை அதிகாரி பி.டி.ஐ-க்கு அளித்திருந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
http://dlvr.it/RscYwm
Share:

Friday 12 February 2021

உய்குர் முஸ்லீம்; காஷ்மீர் விவகாரம்: பிபிசி, தொடர்ந்து சீன-இந்திய அரசின் எதிர்ப்பை சந்திப்பது ஏன்?

கொரோனா வைரஸ் தொற்று சீனாவிலிருந்து பரவியதாக உலக நாடுகள் அனைத்தும் குற்றம் சாட்டிய நிலையில், கொரோனா வைரஸ் பரவலைச் சீனா கையாண்ட விதம் குறித்தும், சீன அதிபர் ஜின்பிங் குறித்தும் ஆட்சேபனைக்குரிய விதத்தில் செய்தி வெளியிட்டதாகக் கூறி பிபிசி வேர்ல்டு நியூஸ் (BBC WORLD NEWS) எனப்படும் பிபிசி'யின் தொலைக்காட்சி ஒளிபரப்புக்குச் சீனா தடை விதித்துள்ளது. சீனாவின் தொலைத்தொடர்பு மற்றும் ஒளிபரப்பு ஆணையமான என்.ஆர்.டி.ஏ (NRTA - National Radio and Television Administration) பிபிசி வேர்ல்டு நியூஸ்'க்கு தடை விதித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது, அதில், பிபிசி வேர்ல்டு நியூஸ் சேனலில் ஒளிபரப்பு செய்த சீனா தொடர்பான செய்திகள் உண்மைக்குப் புறம்பாக, உகந்த முறையில் இல்லை என்றும் செய்திகள் அனைத்தும் விதிமுறைகளைத் தீவிரமாக மீறப்பட்டுள்ளது என்றும், இத்தகைய செயல் சீனாவின் தேசிய எண்ணங்களைக் காயப்படுத்தியதுடன், தேசிய ஒற்றுமையை குறை மதிப்பிற்குத் தள்ளியுள்ளது. எனவே, சீனாவில் ஒளிபரப்பு செய்யும் வெளிநாட்டு சேனல்களின் தேவையை பிபிசி இழந்துவிட்டது. இனி ஒரு வருடத்திற்கு அதன் விண்ணப்பத்தையும் சீனா ஏற்காது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 4-ம் தேதியன்று பிரிட்டன் தொலைத்தொடர்பு மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சீனாவின் அரசு தொலைக்காட்சியான CGTN-ன் உரிமத்தை ரத்து செய்தனர். இந்த சேனலுக்கான உரிமத்தை ஸ்டார் சீனா மீடியா லிமிடட் (Star China Media Ltd) நிறுவனம் முறையற்ற வகையில் பெற்றதாகக் கூறப்பட்டது. அச்செயலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனா இந்த நடவடிக்கையை எடுத்ததாகச் சொல்லப்படுகிறது. பிபிசி மீதான குற்றச்சாட்டுகள்: சீனா பிபிசி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது. சீனா அரசுக்குச் சொந்தமான CGTN இணையதளத்தில் “BBC World News is Ousted! Why?” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வந்துள்ளது. அதில் சீனாவின் ஷின்ஜியாங் பகுதி குறித்து தவறான கட்டுரைகளை வெளியிட்டதாகவும், அதுமட்டுமல்லாமல் கொரோனா வைரஸ் பரவலில் சீனாவைத் தவறாக பிபிசி சித்தரித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனா விவகாரங்களை எப்போதும் ஒருபக்கச் சார்புடன் பிபிசி அணுகி உள்ளதாகவும் அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தவறான செய்திகளைப் பரப்பியதற்காகச் சீனா வெளியுறவுத் துறை பிபிசியை மன்னிப்பு கேட்கக் கோரியது. ஆனால், பிபிசி மறுத்துவிட்டது. நாங்கள் எந்தப் பக்கச் சார்பும் இல்லாமல் நடுநிலையுடன் செய்திகளை வழங்குவதாக பிபிசி கூறி இருக்கிறது. இதனை மேற்கோள் காட்டி, “பிபிசி பிரித்தானிய மனோபாவத்துடன், அதாவது ஏகாதிபத்திய மனோபாவத்துடன் இயங்குகிறது. அதற்கு சீனாவின் கலாசார மதிப்பீடுகள், விழுமியங்கள் குறித்து எந்த புரிதலும் இல்லை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. உய்குர் முஸ்லீம் பிரச்னையும்,பிபிசியும்...! சீனாவின் ஷின்ஜியாங் பகுதியில் உள்ள உய்குர் முஸ்லிம்களை அந்நாடு நடத்தும் விதம் குறித்து சர்வதேச அளவில் பல கண்டனங்கள் எழுந்துவந்த நிலையில் தற்போது உய்குர் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து பிபிசி ஒளிபரப்பிய செய்தி ஒன்றால் அந்த ஊடகம் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு பிபிசி குறிப்பிட்ட அந்த செய்தி விதிகளை மீறியுள்ளதாகச் சீனா தெரிவித்துள்ளது. மேலும் சீனாவின் தேசிய நலனையும், ஒற்றுமையையும் அது குலைப்பதாகவும் உள்ளது எனவும் சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டு ஊடகங்களுக்கான நடைமுறைகளில் பிபிசி பொருந்தவில்லை என்றும், அடுத்த ஒரு வருடத்திற்கும் அதற்கான அனுமதி ரத்து செய்யப்படுவதாகவும் சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிபிசியும் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளது. ``பிபிசி, ஒரு நம்பகத்தன்மை வாய்ந்து சர்வதேச செய்தி ஊடகம். சீன அதிகாரிகளின் இந்த முடிவு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. உலகமுழுவதும் பிபிசி தரும் செய்திகள், எந்த சார்பும் அற்று, எதற்கும் அஞ்சாமல் பிரசுரிக்கப்படும் செய்திகள்” எனத் தெரிவித்துள்ளது. சீனாவில் நடைபெறும் இந்த உய்குர் முஸ்லிம்கள் பிரச்னை என்பது நீண்டகாலமாக நடந்து கொண்டிருக்கும் ஒன்று. சீனா தனது நிலப்பரப்பிலிருந்து இந்த உய்குர் இன மக்களை ஒழித்துக் கட்ட வேண்டும் எனப் பல மோசமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது எனச் சர்வதேச அளவில் தொடர் கண்டனங்கள் எழுந்த நிலையில் உள்ளன. ஆனால் சீனா இதைப் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை என்று கூறி வருகிறது.முதலில் இந்த உய்குர் முஸ்லிம்கள் யார் என்று பார்ப்போம்! சீனாவின் ஷின்ஜியாங் உய்குர் தன்னிலை பிராந்தியத்தில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான உய்குர் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கென்று தனி மொழி உள்ளது. இவர்களின் கலாசாரம் மற்றும் இன ரீதியான பழக்கங்கள் மத்திய ஆசிய நாடுகளை ஒத்ததாக இருக்கும். சீனா, கிரீஸ், பெர்சியா மற்றும் அரேபியாவின் சாரம்சங்களைக் கொண்ட இவர்களின் உணவு பழக்கம் ஒரு சுவைமிக்கது என்கிறார்கல். மொத்தத்தில் இவர்களின் கலாசாரம் மற்றும் பழக்கவழக்கங்கள் என்பது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வசீகரமான ஒன்றாக உள்ளது. ஷின்ஜியாங் பகுதியில் பாதியளவில் இந்த உய்குர் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். கடந்த சில வருடங்களுக்காகச் சீனாவின் பெரும்பான்மை இனமான ஹான் இனத்து மக்கள் ஷின்ஜியாங்கிற்கு இடம் பெயர்ந்து செல்வதால், உய்குர் முஸ்லிம்கள் தங்களின் கலாசாரமும், வாழ்வாதாரமும், அச்சுறுத்தலுக்கு உள்ளாகுவதாக உணர்கின்றனர். இனத்தை அழிக்கும் முயற்சியில் சீனா? சீனா இந்த உய்குர் முஸ்லிம் இனத்தை அழிப்பதற்கான பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த மக்களைத் தீவிரமாகக் கண்காணிப்பது, சித்ரவதை செய்வது, காரணமின்றி முகாம்களில் அடைப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் சீனா உய்குர் முஸ்லிம் மக்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. உய்குர் இன மக்கள் நெடுங்காலமாகச் சீனாவிடமிருந்து விடுதலை கோருகின்றனர். ஆனால் சீனா இதைப் பல ஆண்டுகளாக மறுக்கிறது. திபெத்தை போல ஷின்ஜியாங்கும் ஒரு தன்னாட்சி பெற்ற பிராந்தியம். ஆனால் நடைமுறையில் அது நிகழ்வதில்லை. சீன அரசுதான் ஷின்ஜியானை கட்டுப்படுத்தி வருகிறது. இது அதிகமாகப் பருத்தி விளையக்கூடிய ஒரு இடம். மேலும் எண்ணெய் வளம் மிகுந்த ஒரு பகுதியாகவும் உள்ளது. உய்குர் முஸ்லிம்கள் தங்களின் பகுதியை விடுதலை பெற்ற பகுதியாக அறிவித்திருந்தனர். ஆனால் 1949-ம் ஆண்டு மாவோ தலைமையில் சீனாவில் ஏற்பட்ட புதிய கம்யூனிஸ்ட் அரசு அதன் கட்டுப்பாட்டை முழுவதுமாக தனக்குள் கொண்டுவந்தது. சீன முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள் சீன முகாம்களில் உய்குர் முஸ்லிம் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுத்தவதாகவும், உய்குர் பெண்களுக்குக் கட்டாயமாகக் குழந்தை பெறும் தன்மையை நீக்கும் நடைமுறைகளை மேற்கொள்வதாகவும் சில தினங்களுக்கு முன் பிபிசி செய்தி ஒன்றை வெளியிட்டது. கம்யூனிச கோட்பாடுகளுடன் மத நம்பிக்கை ஒத்துப் போகாத காரணத்தால் மத நம்பிக்கைகளை அழித்தொழிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சீன அரசின் உதவியோடு சீனாவின் பெரும்பான்மை இனமான ஹான் குழுவினர் 1950களில் உய்குர் மக்கள் வாழும் பகுதிகளுக்குக் குடிபெயரத் தொடங்கினர். ஹான் மக்கள் அவர்களுக்கென கட்டமைப்புகளையும், வர்த்தகங்களையும் உருவாக்கினர். தற்போது அங்கு 40 சதவீத அளவில் ஹான் மக்கள் உள்ளனர். படிப்படியாக தங்கள் இடங்களை ஹான் இனத்தவர்கள் ஆக்கிரமிப்பதைக் கண்டு உய்குர் மக்கள் அஞ்சுகின்றனர். மேலும் அவர்களை அழித்தொழிக்கும் முயற்சியாகவே இதைப் பார்க்கின்றனர். Also Read: பிபிசி வேர்ல்டு நியூஸ் சேனலுக்கு தடை விதித்த சீனா! - என்ன காரணம்? ஒரு கட்டத்தில் ஷின்ஜியங்கில் ஹான் இனத்தவருக்கு எதிரான நிலைப்பாடுகள் அதிகரித்தன. இதனால் அவ்வப்போது ஷின் ஜியாங்கில் வன்முறைகளும் நிகழ்ந்துள்ளன. 2009ஆம் ஆண்டு நடைபெற்ற மோதலில் 200 பேர் கொல்லப்பட்டனர். ஆனால் இதற்கு உய்குர் முஸ்லிம்கள்தான் காரணம் எனச் சீனா தெரிவித்தது. அப்போதிலிருந்து சீனா உய்குர் முஸ்லிம்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உய்குர் முஸ்லிம்களைச் சீனா அதீநவின தொழில்நுட்பம் கொண்டு கண்காணித்து வருகிறது. சீனா லட்சக்கணக்கான உய்குர் முஸ்லிம்களை முகாம்களில் அடைத்து வைத்துள்ளதாக ஐநா தெரிவித்தபோது, தீவிரவாதத்தைத் தடுக்கும் நடவடிக்கை அது எனச் சீனா கூறியது. மேலும் உய்குர் முஸ்லிம் மக்களுக்குத் திறன்களை வளர்த்துக் கொள்ளும் பயிற்சிகளை வழங்கும் பயிற்சி மையம் அது எனச் சீனா கூறுகிறது. ஆனால் இந்த சிறைகளில் உய்குர் முஸ்லிம்களை மூளைச் சலவை செய்து வருகிறது சீனா என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. முஸ்லிம் மக்கள் வெள்ளிக்கிழமை போன்ற நாட்களில் பன்றிக்கறியை உண்ண வேண்டும் என்ற விதிமுறைகள் அந்த சிறைகளில் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக சில ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் `மூன்று தீய சக்திகள்; எனச் சீனாவால் குறிப்பிடப்படும் பிரிவினைவாதம், பயங்கரவாதம், மதரீதியான தீவிரவாதம் ஆகியவற்றை அழிக்கும் நடவடிக்கை என உய்குர் முஸ்லிம்கள் மீது அவிழ்த்துவிடும் கொடுமைகளுக்குச் சீனா பெயர் சூட்டியுள்ளது. அங்கு உய்குர் பெண்கள் ஹிஜாப் அணியக்கூடாது, ஆண்கள் தாடி வளர்க்கக் கூடாது, நோன்பு இருக்கக்கூடாது போன்ற கட்டுப்பாடுகளையும் சீனா விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து பல்வேறு மனித உரிமை அமைப்புகள் அங்கு உய்குர் முஸ்லிம் மக்கள் பல்வேறு விதமான கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்றும், அவர்கள் மதம் சார்ந்த நம்பிக்கைகள் அங்கு அழித்தொழிக்கப்படுகிறது என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர். சீனா உய்குர் முஸ்லிம்களை எந்த காரணமுமின்றி முகாம்களில் வைத்து சித்ரவதை செய்வதாக பல்வேறு கண்டனங்கள் எழுந்த நிலையில் அமெரிக்கா போன்ற நாடுகள், சீனா உய்குர் முஸ்லிம்களைக் கட்டாயமாக வேலை வாங்குவதால் ஷின்ஜியாங் பிராந்தியத்திலிருந்து வரக்கூடிய பருத்தி மற்றும் தக்காளிக்குத் தடை விதித்திருந்தது. அதேபோல பிரிட்டனும், சீனா உய்குர் முஸ்லிம்களைக் கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதாலும், மனிதத் தன்மை அற்று நடந்து கொள்வதாலும், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில சரக்குகளுக்குத் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பிபிசி கூறுவது என்ன? இந்த விவகாரம் தொடர்பாக , "சீன அரசுத்துறையின் நடவடிக்கை தொடர்பான முடிவு எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. சர்வதேச அளவில் உலக செய்திகளை வெளிப்படையாகவும் பக்க சார்பற்று அச்சமின்றியும் வெளியிடுவதில் உலகின் நம்பகமான சர்வதேச ஊடக ஒளிபரப்பாளராக பிபிசி உள்ளது," என்று தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. இந்திய விவகாரங்களில் பிபிசி: இந்திய விவகாரங்கள் குறித்து செய்தி வெளியிட்டது தொடர்பாகவும் பிபிசி எதிர்ப்புகளைச் சந்தித்துள்ளது. காஷ்மீர் பிரிக்கப்பட்டபோதும், சிஏஏ விவகாரங்களிலும் பிபிசி ஒருதலைபட்சமாக நடந்து கொண்டதாகக் கூறப்பட்டது. இதன் காரணமாக பிபிசி நிகழ்ச்சி ஒன்றுக்காக விடுக்கப்பட்ட அழைப்பை பிரசார் பாரதியின் தலைவர் நிராகரித்து இருந்தார். குறிப்பாகக் காஷ்மீர் விவகாரத்தில் பிபிசி செய்திகளைத் திரித்து வழங்குவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. அந்த சமயத்தில் பிபிசி ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், “காஷ்மீர் விவகாரத்தில் பிபிசி துல்லியமாகவும், பாரபட்சமின்றியும் செய்தி வழங்குகிறது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. Also Read: `உய்குர் மக்களை அழிக்க சீனா திட்டம்; இனப்படுகொலை!’- மைக் பாம்பியோ விமர்சனம்
http://dlvr.it/RsYwg1
Share:

Daily Tamil News. Powered by Blogger.

Contributors

Search This Blog

Labels

tamil nadu (1374) India (1281) chennai (1031) New delhi (664) world (360) jayalalitha (203) politicians (196) Jallilkattu (190) Tamilnadu (130) Black money (125) World news (115) narendra modi (108) dmk (97) O paneer selvam (90) indian politcis (85) sasikala (75) ALADMK (74) BJP (74) struggle (69) bank (68) government (64) jallikattu (64) supreme court (63) cm (61) washing ton (59) india politics (57) mumbai (57) tamil nadu politics (55) lucknow (53) US (52) bangalore (51) climate (51) madurai (51) Reserve bank of india (49) Tamilnadu politics (48) shashikala (48) vardha.cyclone (46) MK stalin (45) srilanka (45) election (42) modi (41) minister edappadi palanisamy (39) Railway (37) income tax (37) congress (36) panneer selvam (36) world terrorism (36) Accident (34) central government (34) rahul gandhi (34) tamil nadu cinema (34) fisherman (33) pakistan (33) ADMK (32) federal government (32) jammu kashmir (32) Alanganallur (31) kerala (31) apollo hospital (30) marina beach (30) tami nadu (30) MLA (29) court (29) ATM (28) uttar pradesh (28) Tamilnadu Police (27) stalin (27) OPSVsSasikala (26) UP (26) karunaanithi (26) cyclone (25) OPS Vs Sasikala (24) governor (24) india sports (24) Sasikala vs OPS (23) andra pradesh (23) deepa jayakumar (23) heavy rain (23) tirunelveli (23) election commission of india (22) pm (22) sports (22) weDoJallikattu (22) cricket (21) kolkata (21) money seized (21) thirukural (21) vidyasagar rao (21) china (20) pranab mugarjee (20) lok sabha (19) world sports (19) Coimbatore (18) OPS (18) america (18) donald (18) parliment (18) venkaiah naidu (18) UP chief minister Akhilesh (17) ban (17) cbi (17) death (17) india army (17) karnataka (17) ram mohan rao (17) vaiko (17) AIADMK (16) ISIS (16) SasikalaVsOPS (16) india cinema (16) pongal festival (16) rain (16) rajya sabha (16) students (16) Delhi (15) Hyderabad (15) R.K.nagar (15) Tamil Nadu Assembly (15) agriculture (15) airport (15) donald trump (15) islambad (15) jeyalalitha (15) nada cyclone (15) salem (15) state assembly election (15) tamilnadu cinema (15) alanganallur Jallikattu (14) arrest (14) earthquake (14) india-pakistan (14) london (14) poes garden (14) pon radha krishnan (14) puducherry (14) samajwadi party (14) tamil nadu election (14) tamil nadu police (14) thiruvananthapuram (14) world politics (14) State government (13) madras high court (13) punjub (13) republic day (13) sasikala puhpa (13) school (13) ISupportOPS (12) New CM (12) SupportJallikattu (12) arun-jaitley (12) attack (12) india terrorism (12) old banknotes (12) old notes (12) patna (12) srinagar (12) Assembly election (11) RBI (11) bank notes (11) bay of bengal (11) chandigarh (11) emergency law (11) indian army (11) notes (11) parliament (11) president (11) pudukottai (11) ramadoss (11) tamilnadu politics (11) trump (11) CM edappadi palanisamy (10) Rajiniganth (10) UN (10) farmer (10) japan (10) maharashtra (10) meterorological center (10) metrological centre (10) minister sushma swaraj (10) new banknotes (10) vardha (10) Army (9) colombo (9) crop farmer (9) dinakaran (9) dindigual (9) electricity (9) kanimozhi (9) north Korean (9) russia (9) tirupathi (9) MDMK (8) bank new notes (8) barack obma (8) cho ramaswamy (8) cinima (8) cuddalore (8) federal budget (8) finance minster arun jaitley (8) hospital (8) kamal hassan (8) kancheepuram (8) mayawathi (8) mp (8) nagapattinum (8) new york (8) petrol (8) rameshwaram (8) sexual harassment (8) shekhar reddy (8) strike (8) subramaniya samy (8) tamilnadu chief secretary (8) tiruvannamalai (8) twitter (8) vijay mallya (8) MarinaProtest (7) Tirunavukkarasar (7) america politics (7) australia (7) budget (7) dhanapal (7) gujarat (7) high court (7) hydro-carbon plan (7) indian national flag (7) indian police (7) injured (7) kejriwal (7) killed (7) marina jallikattu (7) minister (7) political parties (7) social networking (7) tamil (7) tamil nadu people (7) tamilisai (7) thambidurai (7) thanjavur (7) tiruvarur (7) varanasi (7) GST (6) Girija Vaidyanathan (6) ISRO satellite (6) Krishnagiri (6) Peta (6) Rajnath Singh (6) SBI (6) aadhaar card (6) aardhar card (6) bangladesh (6) bank account (6) banknotes (6) beijing (6) bhopal (6) bihar (6) chandrababu naidu (6) christmas (6) cricket sports (6) dubai (6) ennore (6) erode (6) facebook (6) gandhinagar (6) india cricket (6) jail (6) kauvery hospital (6) kuvattur (6) madhya pradesh (6) madusudanan (6) pandiyarajan (6) prime minister (6) soldiers (6) sonia gandhi (6) student (6) sucide (6) syria (6) theni (6) tuticorin (6) voting (6) withdrawal (6) Afghanistan (5) BJP.finance minister arun jaitley (5) Vijayawada (5) airlines (5) american politics (5) andaman and nicobar islands (5) arvind kejriwal (5) avalanche (5) border security force (5) cho (5) depositing bank (5) digital transaction (5) elangovan (5) former justice markandey katju (5) france (5) goa (5) gunfight (5) india-england (5) indonesia (5) iraq (5) kanyakumari (5) mahatma gandhi (5) metro railway (5) mexico (5) money laundering (5) murder (5) national Green Tribunal (5) neduvasal (5) newyork (5) palanisamy (5) petrol bunk (5) plus 2 (5) prison (5) ration card (5) sarath kumar (5) tamilsai soundarajan (5) terrorist (5) thiruvalluvar (5) tiruchirapalli (5) trichy (5) union minister finance arun jaitley (5) uttarakhand (5) vellore (5) vidhyasagar rao (5) villupuram (5) visa (5) whatapp (5) BSP (4) MPs (4) Madurai high court (4) Paris (4) advani BJP (4) agrahara jail (4) aircraft (4) amazon (4) amit shah (4) amritsar (4) balasore (4) barley (4) beta (4) bi-election (4) colleges (4) dam (4) doctors (4) farmer suicide (4) fog (4) former justice markandeya katju (4) germany (4) gunfire (4) human rights (4) india news (4) indian bank (4) indian cricket (4) israeli (4) jaipur (4) jan dhan bank (4) judgement (4) kanpur (4) kashmir (4) kasparov cycle (4) madurai tamil nadu (4) mahendra dhoni (4) mamata banerjee (4) mamtha banerjee (4) march 8th (4) mobile smart phone (4) mulayam singh yadav (4) new general secretary (4) new year (4) new zealand (4) open tennis (4) orissa (4) pakistan politics (4) panaji (4) sabarimala (4) satellite (4) security (4) sezied (4) tennis (4) terrisom (4) thiruvullar (4) train accident (4) tv channels (4) union home minister (4) union minister rajnath singh (4) vendhar movies (4) vijaykanth (4) virat kohli (4) withdrawn (4) .world (3) 10 (3) 10th and 12 th (3) 2000 notes (3) ALDMK (3) CBSE (3) DSP (3) Gk.vasan (3) H-1B (3) India budget 2017-2018 (3) LiveUpdates (3) MGR (3) S.R.Balasubramain (3) Seoul (3) Tokyo (3) WeSupportOPS (3) agra (3) ahmedabad (3) ankara (3) army chief (3) assembly committee (3) assert (3) bahujan samaj (3) berlin (3) bipin rawat (3) birthday party (3) boat accident (3) brazil (3) cabinet committee (3) california (3) cauvery (3) chennia (3) chicago (3) chidambaram (3) chief Velupillai Prabhakaran's (3) cinema (3) cm chandrababu naidu india (3) collector (3) congres (3) deepak (3) dengue fever (3) depty CM (3) economic (3) england (3) federal minister (3) fight (3) flag hoist (3) former chief minister jayalalithaa (3) gas (3) gayatri Prajapati. (3) general meeting (3) government hospital (3) granite (3) indians (3) interest (3) jamaluddin (3) japanese prime minister shinzo (3) jobs (3) judge (3) kadalur (3) karachi (3) karthikeya sivasenapathy (3) kavery (3) kerala politics (3) kodaikanal (3) last evening (3) latest news (3) madhan (3) maneka gandhi (3) manmohan singh (3) melbourne (3) melur (3) military (3) muslim (3) nagercoil (3) namakkal (3) nashik (3) navjot singh sidhu (3) nirmala sitharaman (3) nitish kumar (3) noida (3) olymbic (3) pakistan army (3) paneerselvam (3) police (3) pollachi (3) pon radhakrishna (3) ponniyan (3) pyongyang (3) radhakrishna (3) raghava lawrence (3) rama rao (3) ramanadhapuram (3) release (3) rocket (3) sahitya academy (3) san francisco (3) sengottaiyan (3) silent struggle (3) south Korean (3) speaker (3) special buses (3) state governor (3) suresh prabu (3) tamil nadu government (3) telangana (3) terrorist attack (3) thirumavalavan (3) tirupur (3) tiruvallur (3) tnpsc (3) tsunami (3) union ministry (3) us government (3) vadivasal (3) vijay (3) won (3) yogi (3) yuvraj singh (3) 26 week period (2) Ariyalur (2) BCCI (2) British (2) CIA (2) IAS (2) India-Bangladesh (2) Iphone (2) Kabul (2) M.P.pandiyanrajan (2) M.R.Vijaya Baskar (2) MGR memeorial (2) NIA (2) Qatar (2) Rk (2) State bank (2) Taliban terrorist (2) Tamil Nadu legislative Assembly (2) US president donald trump (2) abu bakr baghdadi (2) act (2) against (2) air india (2) ajith kumar (2) allahabad (2) ambur (2) anbumani ramadoss (2) animal welfare board (2) anna hazare (2) assam (2) aswin (2) austrian (2) avaniyapuram (2) award (2) awards (2) baba ramdev (2) badminton (2) baghbad (2) balachandran (2) banglore (2) bashar al-assad (2) bhairava (2) blast (2) bollywood (2) bus accident (2) canara bank (2) chief minister narayanaswamy (2) chinnama (2) ciricena (2) coin (2) coke (2) commissioner (2) corruption (2) credit card (2) cuba (2) cylinder (2) dehradun (2) deputy governor (2) deputy speaker thambidurai (2) dharamshala (2) dharmapuri (2) died (2) double leaf symbol (2) doubt (2) driving license (2) duraimurukan (2) election campaign (2) european (2) examination (2) fake doctors (2) fake website (2) federal minister manohar parrikar (2) female employee (2) formars loan (2) former cricketer (2) former minister (2) gambia (2) geneva (2) gold (2) google app (2) gun battle (2) guwahati (2) heart attack (2) heavy security (2) heavy snow (2) hike (2) hiphop adhi (2) hiphop gen (2) hirakhand express (2) hosur (2) hunger strike (2) ias officers (2) incident (2) india budget (2) indian sports (2) international women's day (2) istanbul (2) italy (2) jakarta (2) jayakumar (2) jio (2) kachchatheevu (2) kantaleru (2) karunas (2) kenya (2) kerala cinema (2) kingfisher owner (2) kohima (2) kohli (2) kollywood (2) kudankulam (2) luncknow (2) madurai tamilnadu (2) mahabratam (2) maitreyan (2) malasiya (2) manila (2) manju virattu (2) march (2) meeting (2) mellur (2) memorial (2) missile (2) missing (2) mist (2) monsoon rains (2) mullaimani (2) munisamy (2) mysore court (2) naam thamizhar leader seemam (2) nadukkuppam (2) nagarajan (2) nagpur (2) natraj (2) nattional anthem (2) nawaz sharif (2) neet exam (2) new chief justice (2) new notes (2) new rules (2) new year calendar (2) nigeria (2) nonviolent (2) nsg (2) nuclear weapons (2) obma (2) online money transfer (2) pahraic (2) passport (2) people (2) people suffer (2) pepsi (2) permpalur (2) petrol punk (2) philippines (2) pinarryi vijayan (2) polling (2) pondicherry (2) president election (2) private company (2) pune (2) rahul (2) raipur (2) rajiv gandhi (2) rama chandran (2) ramakrishnan (2) ratan tata (2) ravi shankar prasad (2) rekla race (2) resignation (2) robert vadra (2) rupee (2) russian (2) russian president putin (2) sasikala upset (2) saudhi prince (2) sea shore (2) seized (2) shiva sena (2) shock (2) siddaramaiah (2) simbu (2) sivagangi (2) social website (2) solar (2) solider (2) south africa (2) south china (2) south korea (2) spy agency (2) srilanka navy (2) state election commission (2) suicide (2) supporter (2) surat (2) surya (2) syrain.government (2) syrian (2) tamil language (2) tamil nadu school education department (2) tamil nadu government examination (2) tamil nadu sports (2) tamilnaducongresscommittee (2) tamukkam (2) thalibans (2) thane (2) thief (2) traffic (2) transport (2) travelling (2) triplicane (2) turkey (2) uk (2) unemployment (2) urjit patel (2) us presidential election (2) veeraghav (2) virender sehwag (2) virudhu nagar (2) water problem (2) west bengal (2) white house (2) wifi (2) world AIDS awareness day (2) world election (2) 10 lakhs (1) 12 satellites (1) 127 (1) 14 years girl (1) 150 hours 50 results (1) 200 railway station (1) 24 indian lauguages (1) 35 thousand (1) 4.6 richter (1) 5 dead (1) 500 (1) 5G (1) 62 candidates (1) 84 projects (1) A.K.Saseendran (1) A.R Nagar (1) AIMS doctors (1) ALLMS (1) AR rahman (1) ARA (1) Al - Qaeda leader (1) Anurag Thakur (1) Ashoka (1) Asia top 10 beach (1) Babri Masjid (1) Ban PetaJallilkattu (1) British government (1) C.V.shanmugam (1) CM akhilesh yadav (1) Cairo (1) Coimbatore corporation (1) Coimbatore industry association (1) DRC (1) Damascus (1) Dayanidhi maran (1) Ddmk (1) E-wallet (1) EU law (1) Egypt (1) Ernakulam (1) FM (1) Former Secretary General ban Ki moon (1) GAAR (1) GH (1) GSP (1) GSSV (1) GTF (1) Gate (1) George Michael (1) Haridwar (1) Himachal Pradesh (1) ICF (1) ICU (1) IFS (1) IGP (1) INS virat ship (1) IOA (1) IPL (1) IPS (1) IRCTC (1) Identity card (1) India budget 2017 (1) Indian Embassy warning (1) Indus os (1) JIPMER (1) K.A.sengottaiyan (1) LK advani (1) Lahore (1) Lalu prasad (1) Los Angeles (1) Lss nagar (1) MBBS Entrance (1) MNS (1) Maharajganj (1) McDonald (1) Megaserials (1) Muzaffarnagar (1) NGO (1) NGT (1) NITI AAYOG (1) Nakappattinam (1) Obama wife (1) P.H.pandiyan (1) P.S.P Jawan Tej Bahadur (1) PM benjamin netanyahu (1) PM justin (1) PMs office (1) Panipat (1) R.K (1) R.j balaji (1) R.k singh (1) RSS (1) RSS office (1) Richmond (1) S.K.kaul (1) S.P.B (1) S.V.shekher (1) SIS (1) Saudi (1) Singampunari (1) Sunderlal patwa (1) TNSPC (1) TNSTC (1) Thamirabarani (1) Tindivanam (1) Tondiarpet (1) UAE (1) UK government (1) UN to hawaii (1) UP chief minister yogi (1) UP. (1) US Michelle Obama (1) US citizen (1) US congress (1) Ukraine (1) Union Agriculture Minister Radha Mohan (1) V.M.C sivakumar (1) VOC (1) VRS website (1) VS Acharaya (1) Vannadasan (1) abbas mohamed (1) abdul basit (1) abhay chautala (1) abhishek singhvi (1) abu dhabi (1) aceh (1) actor dhanush (1) actor vishal (1) advani (1) advice (1) affect growth (1) after-143-years-tamil-nadu-will-reel-worst-water-scarcity-redalert (1) agartala (1) agni 5 (1) agni-4 (1) agriculture technology (1) ahmed (1) air force (1) air force station (1) air pollution (1) air traffic (1) airforce commander (1) akarttala (1) aleppo (1) alganganallur (1) almora (1) amalanatan (1) amaran (1) amarinder (1) ambassador (1) american (1) american intelligence agency (1) american tennis player (1) amethi (1) amitabh kant (1) ammonia (1) amravati (1) amrut (1) anandhraj (1) anbumani (1) anciyo (1) andhiyur (1) anemia (1) animal welfare activists (1) anna library (1) announcement (1) anoyta (1) anpuselvan (1) anti-national slogans (1) anti-terrorism (1) antonio (1) antriv kolov (1) anushka (1) anwar (1) anxiety (1) apoorva verma (1) apple (1) archives (1) arest (1) army honor (1) arnab goswami (1) arni (1) arrived (1) artiai (1) artifical intelligence (1) arun kumar (1) arunachal pradesh (1) ashoka chakra (1) ashokamittrian (1) ashwin (1) asian cup (1) asian-pacific (1) assembly budget (1) assembly contituency (1) assembly secretary (1) assistant commissioner (1) associate general secretary (1) astrologer (1) athikadavu avinashi project (1) athur (1) atinam (1) attach (1) attur (1) auckland (1) australia-india (1) australian (1) awarness (1) axix bank (1) ayodhya babri masjid (1) azhagiri (1) azmi (1) babri-3 (1) baby (1) baby death (1) bach (1) back money (1) bacteria (1) bairava (1) balkans (1) bamoko (1) ban Ki moon (1) banaskantha (1) bangaldesh (1) bangalore-chennai (1) bank fraud (1) bank of india post (1) banking service (1) bankloans (1) banned (1) baran (1) barcelona (1) barnala (1) beam of app (1) beating (1) beggar (1) beirut (1) benami (1) benjamin netanyahu (1) bharat mata temple (1) bharat ratna (1) bhavana (1) bhogi (1) bhubaneswar (1) bhutton's son (1) bike (1) black mail (1) blessed baby (1) blocked (1) boat symbol (1) bogey festival (1) bolivia (1) bombing (1) boris johnson (1) borra kolin (1) brain tumor (1) bsnl (1) budget session (1) budget2017 (1) bulls (1) bunyan (1) burj khalifa (1) burn fire (1) burned house (1) buses (1) business (1) cable (1) canada (1) canceled (1) canda (1) cannabis (1) cantipur (1) cartoon (1) cash (1) castro (1) cattur (1) cavery (1) celebration (1) central bank governor (1) central board of direct taxes (1) central buget (1) chain protect (1) chairman pratab reddy (1) change.org (1) channel programme (1) chargesheet (1) chariman cyrus mistry (1) cheenai (1) chemmai (1) chengalpattu (1) chenna (1) chennai court (1) chennai flood (1) chennai marathan (1) chennai.tamil nadu (1) chenni (1) chief minister (1) chief rakil sharif (1) chittoor (1) christchurch (1) church (1) cinema election (1) civil servants (1) class X (1) cleaning (1) cliamte (1) cm of india (1) coast guard HC (1) cocaine (1) cockroach (1) collect (1) collectors (1) college campus (1) commitment room (1) committe (1) congressled national democratic alliance (1) constittutional Law (1) cool drink (1) council secretary jamaluddin (1) crashed (1) criminal action (1) criminal court (1) cristian (1) cristiano ronaldo (1) crying (1) cryogenic engine (1) cuban (1) current shutdown (1) cuttack (1) cyclone thanjavur (1) dangal (1) darshan (1) daughter (1) davidson (1) dawood ibrahim (1) dead body (1) death certificate (1) debit card (1) debit money bank (1) debosit (1) debts (1) defense ministry (1) dehradan (1) delhi high court (1) delhi metro rail (1) delhi police (1) delhi university (1) delta (1) demolition (1) deposit (1) depression (1) deputy cm sukhbir singh badal (1) destroy (1) devakottai (1) devil guinea (1) dhaka (1) diesel (1) digital money transfer (1) dinanath bhargava (1) discipline (1) divorce (1) dmk leader stalin (1) dmk-mla (1) document missing (1) dog (1) domestic technology (1) donation (1) double leaf off (1) dr.besant road (1) dress (1) drinking achohol (1) driver (1) dropped (1) drought relief (1) drugs (1) duraisamy (1) early life (1) earth (1) eastern european (1) editorial (1) education minister sengottaiyan (1) election date (1) election government (1) electronic transaction (1) elepant (1) elepants (1) email (1) employee (1) enforcement (1) engineer (1) engineering entrance examination 2018 (1) ennore port (1) environment pollution (1) etah (1) ettayapuram (1) exam start (1) examination result (1) extreme stress (1) fake note (1) fake political (1) fallen (1) farmer association (1) farmers (1) fasting (1) federal environment minister Anil Madhav Dave (1) federal environment minister Anil kumar Dave (1) federal interior ministry (1) federal revenue secretary (1) federal sakthikanth das (1) female priest (1) festival prize award (1) final balance (1) financial sector (1) fire accident (1) fire fight (1) fireworks factory (1) flight (1) floods (1) florida (1) food menu (1) food ration (1) food waste (1) foodstuff (1) football (1) foreign car (1) foreign secretary (1) foreigners (1) forest fire (1) former federal minister mathan singh (1) former CM (1) former chairman (1) former chief commander (1) former nationl security adviser (1) former president akbar rafasanjani (1) former president pervez musharraf (1) free cycle (1) free gas (1) freedom day (1) freedom struggle (1) french brie (1) friend geeta (1) gangtok (1) gazette (1) general manager (1) george HW Bush (1) geroge (1) ghaziabad (1) global economic growth (1) gokula indira (1) gold seized (1) good luck rajendran (1) google (1) greetings (1) guinea (1) guinness (1) gujranwala (1) gulf (1) gun (1) gurushathira award (1) gurvayar (1) hacked (1) hamid ansari (1) handicapped (1) hanoi (1) hanumantha rao (1) harbor (1) harsimrat Kaur Badal (1) hasmuk atiya (1) head masters (1) headquaters (1) health (1) health mental (1) health tips (1) heart disease (1) heavy damage (1) heavy hot (1) heavy police (1) heavy raid (1) hekarai jekatis (1) held (1) helicopter (1) helping (1) hema malini (1) higher education institution (1) hijacked (1) hillary (1) hilter's phone (1) hindhirai (1) hockey (1) hoilday (1) hollywood meryl streep (1) honolulu (1) hosting (1) hot news (1) housing (1) houston (1) husband (1) hydrocarbon project (1) hyperloop (1) iPad (1) illayaraja (1) illness (1) income (1) increase (1) inda (1) india accide (1) india economy (1) india management insititutes (1) india people (1) india. (1) india.dam opened (1) indian attack (1) indian exports (1) indian external affairs (1) indian fisherman (1) indian judiciary (1) indian navy (1) indian ocean (1) indian panic (1) indian plane (1) indian postal department (1) indian premier league (1) indian rocket (1) indian singer (1) indian space research organisation (1) indian tourism industry (1) indira nooyi (1) indore (1) indus river (1) infection (1) innasipuram (1) inner sheet (1) instruction (1) insulin (1) internal problem (1) international terrorist (1) irrigation expert (1) isi (1) islamists (1) itanagar (1) jallianwala bagh (1) jamaica (1) jared kouchner (1) jarvis (1) jayendra bend (1) jeevan nedujaliyan (1) jerusalem (1) jharkhand (1) jio news (1) job (1) joe biden (1) johannesburg (1) john Kirby (1) john glen (1) juvenile reformatory (1) k.P.Munisamy (1) kaccat island (1) kadular (1) kalahasthi (1) kalappattu (1) kalmadi (1) kalraj mishra (1) kalyani (1) kamal orders (1) kamal writer (1) kampala (1) kanasa (1) kandahar (1) kantheri (1) kapil dev (1) karaikudi (1) karrur (1) karthigai (1) karthik chidambram (1) karuppupanam (1) kasimedu (1) kastli (1) katchativu.tamil nadu (1) kathmandu (1) katju (1) kattaras (1) kedar jadhav (1) kehar jakatis singh (1) kelakatti (1) khadi (1) kholi (1) killing cattle (1) killing cow (1) kim yang-us (1) kindi (1) kiran bedi (1) kiran bhatt (1) kiran kumar (1) kishore pajivala (1) kochi (1) kolkata high court karna (1) korea (1) kottaikadu (1) kottayam (1) kovai (1) kovilpatti (1) koyampet (1) krisha water (1) kudimaramath (1) kumbakonam (1) kurian (1) kuwait city (1) kyrgzstan army (1) labor department report (1) lakshmi rama krishnan (1) laser (1) lashkar terrorist (1) launch (1) lawyer (1) leading news agency (1) leaked (1) legislative elevtion (1) letter (1) libya (1) libyato malta (1) lifetime achievment (1) limca book of adventure (1) link (1) literature award (1) live update (1) local airlines (1) lokesh india (1) london ISIS (1) london doctor (1) london. (1) low (1) m.g.r (1) madhavan patrick (1) madras court (1) madura (1) makara jyothi (1) makaraju sakshi (1) male employees (1) mali (1) mammooty (1) mamtha (1) manipur (1) manov (1) mantri jwala (1) maoist (1) maran brother (1) marathan (1) march 16 (1) march 9 (1) mariappan (1) marina (1) marithripala (1) mark zuckerbergs (1) markandey katju (1) markandeya kadgu (1) marry (1) maternity leave (1) mathura (1) may 15 (1) mayavadhi (1) mayawati (1) media (1) medical (1) medical entrance examination (1) meerut (1) meerut bjp (1) meet (1) mega app (1) mehabooba (1) mekapupa (1) men and women (1) mice (1) miitary (1) military aircraft (1) military helicopter (1) military hospital (1) milk agents (1) milla trading system (1) ministry of health (1) ministryof finance (1) minsiter (1) mirzappur (1) missile launcher (1) missile test (1) mod (1) mohali (1) mohammad ali tirani (1) mohammad kaif (1) mohamud ali durrai (1) mohan bhagwat (1) mokaticu (1) mollywood (1) money lender (1) money transaction (1) money trapped (1) money trapping (1) moon (1) mosal (1) moscow (1) mosow (1) mosquitoes (1) ms dhoni (1) mudumali (1) mukesh Ambani (1) muktcar (1) mumbai cinema (1) municipal corporation (1) munusamy (1) murali vijay.cricket (1) mushroom drugs (1) myanmar (1) mylapre (1) mysore (1) nagaland (1) nagar (1) nagare (1) nagercoil to chennai (1) najipjan (1) nallakannu (1) namanathapuram (1) nanjil sampath (1) napier bridge (1) narcotics (1) natarajan (1) national anthem (1) national conference (1) national crime records bureau (1) national day (1) national family welfare in india (1) national forest (1) national human rights commission (1) national khadi village industries commission (1) national physics laboratory (1) national satellite (1) national symbol (1) national unity and community reconcilation day (1) nationalist congress (1) nationwide driver licence renewal (1) navaneetha krishnan (1) naveen jindal (1) navsari (1) naxal (1) ndia (1) nehru (1) nellai (1) nellai university (1) nepal india (1) neptune statue (1) nesapakkam (1) new app (1) new bill (1) new city (1) new coins (1) new delhi rahul gandhi (1) new release (1) new report (1) new secretary (1) nigera (1) niligiris district (1) nirmala (1) nirmala periyasamy (1) nitin patel (1) nobel prize (1) nomination (1) norway (1) notice (1) nugampakkam (1) obama (1) odisa (1) offical (1) office (1) ola (1) old pipes (1) om puri (1) om puri kalamanar (1) online reservation (1) ooty (1) open cermony (1) opening (1) oscar ward (1) oslo (1) ottawa (1) pacific ocean (1) pakistan based terrorist (1) palakkad (1) palamedu (1) palani (1) pan card (1) panchayat leader (1) pandas (1) pandiyan (1) panjul (1) parkash singh (1) parrikaar (1) passes away (1) patanjali (1) patayun (1) pathankot (1) pavutista medvedev (1) paytm wallet (1) pellat (1) pemetara (1) pen or boat or grapes (1) pension (1) peon freedom fighter (1) perambalur (1) periyasamy (1) peshawar (1) petta (1) photos (1) pilgrims (1) pina niyeto (1) pirankoyis hollande (1) piratyankara (1) piryankiyan (1) pitivarant (1) plane (1) planes collision (1) planned budget (1) poet (1) police shot (1) police station (1) poll (1) ponniah anandarajah (1) portugal (1) pound (1) pouring kerala (1) pradhan (1) prakash javadekar (1) praveen nair (1) pregnant (1) prema kantu (1) prescription (1) prime minister manmohan singh (1) prime minister sheikh hasina (1) princess leah (1) private (1) private banks (1) priyanka chopra (1) priyanka gandhi (1) problem issue (1) producer association (1) promotion (1) property (1) public leave (1) puerto rico (1) pujas (1) punishment (1) punjub india (1) puthin (1) puzzle (1) queensland (1) radha rajan (1) radhakrishnan (1) radhanagar (1) radio (1) rae bareli (1) rahul amethi (1) rahul dravid (1) raid (1) railway minister (1) railway strike (1) raised (1) raj (1) rajaji hall (1) rajapaksa (1) rajasthan (1) rajbhavan (1) rajendra balaji minister (1) rajesh lakkani (1) rajeshkumar (1) rajeshwaram (1) raju (1) ram mohan roy (1) rama sigh (1) ramajayam (1) ramasamy (1) ramathapuram (1) ramki-nirosa (1) ranchi (1) ranjini (1) rao (1) raped teacher (1) ration shops (1) ratnam (1) real estate (1) red fort (1) refused (1) repayment (1) report (1) rescue (1) research project (1) retired judge (1) retired officer (1) retirement (1) rice dealer (1) rice price (1) richard verma (1) rijiju kiran (1) rio de janeiro (1) rishikesh (1) riyadh (1) road accident (1) road destroy (1) rohan bopanna (1) rohtak (1) romania (1) rome (1) rubber stamp (1) russian ambassaor (1) s.balachandran (1) sabha (1) sachin tendulkar (1) sahara chief subrata roy (1) sahara group (1) saipulla (1) sajahanpur (1) sakthi kantha das (1) salt (1) sami (1) samsung (1) sandalwood (1) sandstone (1) sania (1) santiago (1) sao paulo (1) sarabjit's dalbir kaur (1) saravan (1) saroja devi (1) sasikala pushpa (1) satta sabai (1) saudi arabia (1) saudi-led (1) saving account (1) schemes (1) school chennai (1) school student (1) school vechile (1) scientists (1) sea birds (1) search engine (1) second captial (1) secretary general (1) secretary higher education (1) secrete messages (1) serena (1) serena willams (1) servant sandals (1) servay (1) service tax (1) sexual exploitation (1) shanghai (1) shankarsubu (1) sharad pawar (1) sharada sit funds (1) sharapova (1) shashi tharoor (1) sheikh hasina (1) sheila dikshit (1) sheila dixit (1) shekanur (1) shellby (1) sheryas Iyer (1) shimla (1) ship accident (1) ship collision (1) shiva temple (1) shivaji (1) shot (1) siberia (1) sikkim (1) sindh (1) sindhu (1) singapore (1) singer (1) sitaram yechurv rokkamar (1) slary (1) smoke inhalation (1) snake catching (1) social (1) social activist (1) social media (1) solar laboratory (1) somalia (1) son (1) south america (1) south american (1) south monsoon (1) southern railway (1) space (1) special court (1) speed (1) spider venom (1) sridhar (1) srilanka jallikattu (1) srilanka president ciricena (1) srilanka world (1) sriperamputhur (1) sripriya (1) stalin. (1) state cabinet (1) state chief secretary (1) state election (1) state former cm (1) state high court (1) state responsibility (1) statue trafficking (1) stress damage (1) struggler (1) student murder (1) success (1) sugar (1) sugarcane (1) summer (1) sun (1) superbug (1) surgical strike (1) suriya (1) surjeet singh barnala (1) surjit singh (1) sushil chandra (1) suthaharan (1) swine flu (1) swiss bank (1) sydney (1) syed ali shah geelani (1) syed modi (1) symbol (1) tahsildar (1) taj mahal (1) taka (1) tambaram railway station (1) tamil nadu chief electoral officer (1) tamil nadu cinema association (1) tamil nadu film industry (1) tamil nadu.lap-top (1) tamil national alliance (1) tamilnadu congess party (1) tamilnadu terrorism (1) tamils (1) tamilsai (1) tao (1) tata groups (1) tatri (1) tavos (1) teenage girl (1) telengana (1) telugana (1) telugu ganga project (1) temple (1) ten rupee coin (1) terrorist masood azhar council (1) thaipusam (1) thambaram air force (1) thamiraparani (1) thenmalli (1) third place (1) thiruchengode (1) thirukonamalai (1) thirupattur (1) thiruthani (1) thousand (1) thrown bank notes (1) thursday (1) ticket (1) tienpiesci (1) tillerson (1) time list (1) timeline (1) tirnamool congress (1) tirpur (1) tisa (1) tncongress (1) toilets (1) tokoyo (1) toll (1) top richest person (1) toronto (1) town hall (1) traffic jam (1) traffic road tamil nadu (1) train (1) train blast (1) train bomb (1) train fares (1) train journey (1) train service (1) travancore (1) treatment india (1) trichy siva (1) tripura (1) trisha (1) truck crashed (1) trump nephew (1) tta (1) ttr (1) ttv dinakaran (1) tughlaq (1) turkey ambassador (1) turn bull (1) tweeted (1) twenty20 (1) two indians (1) tyagi (1) udham singh (1) uma bharti (1) union budget (1) union environment (1) union government (1) union law ministry (1) union minister finance arun jalitey (1) union minister krishna (1) union minister nirmala sitharaman (1) union minister shankar prasad (1) union ministerof state (1) union secretary anil paijal (1) united nations survey (1) united natons security council (1) united states (1) unmarried women (1) unnikrishnan (1) upsc (1) us force (1) us intelligence (1) usa (1) uthayakumar (1) vaadivasal (1) vaali (1) vadapalani junction (1) vairamuthu (1) vajpayee (1) vapse (1) varta (1) vasan (1) vasistha jori (1) vechile parking (1) veeramani (1) veeranam (1) vegetable (1) vehicle registration (1) vellaiyan (1) vellakovil samynadhan (1) venus williams (1) vice bills (1) vice president (1) vice president ansari (1) vice president mike pence (1) victims (1) vijay rupani CM (1) vijay tv (1) vijayadarani (1) vijayakanth (1) vijaymallya (1) vikram (1) vilas paswan (1) vipin rawat (1) virendar (1) virginia (1) virus (1) vishal (1) viskhapatnam (1) vivek (1) viveks (1)