ராகுல்காந்திக்கு தமிழ் தெரியாது என்பதை பயன்படுத்தி மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த மூதாட்டியின் குற்றச்சாட்டை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மேடையில் மறைத்தது, மாற்றி மொழிபெயர்த்தது விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. புதுச்சேரியில் சோலையூர் பகுதி மீனவ குடும்பங்களிடையே காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி உரையாடியபோதுதான் இந்த நிகழ்வு அரங்கேறியது. அப்போது பேசிய மூதாட்டி ஒருவர், புயல் பாதிப்புகளின் போது முதலமைச்சர் நாராயணசாமி தங்களை வந்து பார்க்கவில்லை, கண்டுகொள்ளவில்லை என பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். திகைத்துப் போன நாராயணசாமி தன் மீதான குற்றச்சாட்டை முழுவதும் மறைத்து ராகுலிடம் மொழி பெயர்த்தார். நாராயணசாமியின் பதில் தற்போது அரசியல் வட்டாரத்தில் மட்டும் அல்லாமல் சமூக வலைதளங்களிலும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.
http://dlvr.it/Rsy19x
Thursday 18 February 2021
Home »
» மூதாட்டியின் குற்றச்சாட்டை மாற்றி மொழிபெயர்த்து ராகுலிடம் கூறிய நாராயணசாமி!