மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள சித்தி (Sidhi) மாவட்டத்திலிருந்து சட்னாவுக்கு (Satna) ஒரு பேருந்து இன்று காலை 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. இந்த பேருந்து பாட்னா அருகிலுள்ள பன்சாகர் (Bansagar) பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த கால்வாயில் கவிழ்ந்தது.பேருந்து விபத்து
கால்வாய் மிக ஆழமாக இருந்ததால் பேருந்து உள்ளே மூழ்கியது. விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்த மீட்புப்படையினர் மீட்புப்பணியைத் தொடங்கினர். இந்த விபத்தில், பேருந்தினுள் பயணித்த 39 நபர்களின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரி உமேஷ் ஜோகா (Umesh Joga), ``காலை 7.30 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த பேருந்தில் பயணித்த ஏழு நபர்கள் தப்பித்துக் கரை சேர்ந்துள்ளனர். இந்த பேருந்தில் 50-க்கும் அதிகமானவர்கள் பயணித்ததாகத் தெரியவந்துள்ளது. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்று கூறினார்.
#UPDATE Madhya Pradesh: A total of 35 bodies recovered till now from the site in Sidhi where a bus, carrying around 54 passengers, fell into a canal today. 7 people were rescued. A search operation is underway. pic.twitter.com/Q47fSHhgUw— ANI (@ANI) February 16, 2021
இந்த துயர சம்பவத்தை அடுத்து, மத்தியப் பிரதேசத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொள்ளவிருந்த ஒரு முக்கிய நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எஸ்.டி.ஆர்.எஃப் (SDRF) மற்றும் நீச்சல் வீரர்கள் மீட்புப்பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறீர்கள். கால்வாயின் நீரோட்டத்தைக் குறைப்பதற்கு, நீரைப் பன்சாகர் கால்வாயிலிருந்து சிஹாவால் (Sihawal) கால்வாய்க்கு மாற்றி விடப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் பேசுகையில், "இது மிகவும் துரதிர்ஷ்டவசமான விபத்து. மீட்புப்பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு தொடர்ந்து பேசி வருகிறேன். மனதுக்கு பெரும் வேதனையளிக்கிறது. சம்பவ இடத்திற்கு அமைச்சர்கள் விரைந்துள்ளனர். இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் உதவி உடனடியாக வழங்கப்படும். அனைவரும் பொறுமையாக இருக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
सीधी की दुर्भाग्यपूर्ण घटना को लेकर मैं लगातार प्रशासन से और राहतकार्य में लगे हुए लोगों से चर्चा कर रहा हूँ।
बहुत दुःखद है कि दुर्घटना में 18 लोगों की जान चली गई है। मन बहुत व्यथित है। बचावकार्य लगातार जारी है; कलेक्टर, कमिश्नर, आईजी, एसपी, एसडीआरएफ की टीम लगी हुई है। pic.twitter.com/TYPKV786Hf— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) February 16, 2021
"சித்தியில் நடந்திருப்பது ஒரு சோகமான சம்பவம். இந்த விபத்தின் மீட்புப் பணிகள் குறித்து முதல்வர், நிமிடத்திற்கு நிமிடம் கேட்டறிந்து கொண்டிருக்கிறார். முதல்வரின் அறிவுறுத்துதலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து கொண்டிருக்கிறேன். அங்குள்ள அதிகாரிகள் அளித்துள்ள தகவல்கள் படி, சுமார் 30 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது" என்று மூத்த அமைச்சர் துளசி ராம் சிலாவத் தெரிவித்துள்ளார்.
விபத்தில் உயிர் இழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் ரூபாய் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
http://dlvr.it/RsqDqt
Tuesday 16 February 2021
Home »
» ம.பி: கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்த்த பேருந்து; 39 பேர் பலி! - தொடரும் மீட்புப் பணிகள்