உத்தரப்பிரதேசத்தின் பதான் (Badaun) மாவட்டத்திலுள்ள சிக்ரி (Sikri) கிராமத்தில் பெண் ஒருவர். தன் குழந்தைகளுடன் வசித்துவருகிறார். அந்தப் பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்த பக்கத்து வீட்டுக்காரர், அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார். தனது ஆசைக்கு இணங்குமாறு கட்டாயப்படுத்தியிருக்கிறார். எதிர்ப்பு தெரிவித்ததும், அந்தப் பெண்ணின் வாயில் சிறிது ஆசிட்டை ஊற்றியிருக்கிறார். அந்தப் பெண் சத்தம்போட முயன்றிருக்கிறார். உடனே அவரைக் கத்தியால் குத்திவிட்டு அண்டை வீட்டுக்காரர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.பாலியல் அத்துமீறல்
பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், காவல்துறைக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். காவல்துறையினர் முப்பது வயதான அந்தப் பெண்ணை அருகிலுள்ள மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால், மாவட்ட மருத்துவமனையிலிருந்து சிகிச்சைக்காக பரேலியிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார்.
Also Read: 105 முறை பாலியல் வன்கொடுமை... 1,050 ஆண்டுகள் தண்டனை... மலேசியாவில் அதிர்ச்சி சம்பவம்!
அவர் தன்னுடைய மூன்று குழந்தைகளுடன் சிக்ரி கிராமத்தில் வசித்துவந்திருக்கிறார். இவரின் கணவர் டெல்லியில் தங்கி பணிபுரிகிறார். இந்தக் கொடூரச் செயலைச் செய்தவர், அந்தப் பெண்ணின் பக்கத்துவீட்டுக்காரரான சதேந்திரா (Satendara) என்பது தெரியவந்திருக்கிறது. முதலில் இந்த வழக்கைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாத காவல்துறையினர், உள்ளூர் மக்களின் போராட்டத்துக்குப் பிறகே வழக்கு பதிந்து விசாரித்துவருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.பாலியல் குற்றம்
சம்பவ இடத்துக்கு விரைந்த வட்ட அலுவலர் உஜானி சஞ்சய் குமார் ரெட்டி (Ujhani Sanjay Kumar Reddy) அங்கு நடந்த விவரங்களைச் சேகரித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக சதேந்திரா மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்கு பதியப்பட்டிருக்கிறது. இது குறித்துப் பேசிய எஸ்.பி பிரவீன் சிங் சௌகான் (Pravin Singh Chauhan), ``குற்றவாளி கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அந்தப் பெண் அளித்த தகவலின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. விசாரணை நடைபெற்றுவருகிறது, குற்றவாளிமீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.
http://dlvr.it/Rrwgbf
Wednesday 3 February 2021
Home »
» உ.பி: பெண்ணிடம் அத்துமீறல்; ஆசிட்டை ஊற்றிக் கத்திக் குத்து! பக்கத்து வீட்டுக்காரரின் கொடூரச் செயல்