மும்பையின் மேற்குப் பகுதியிலுள்ள ஜோகேஷ்வரி என்ற இடத்தில் வசிப்பவர் விஜய் காம்பே. இவர் தனது அண்ணியின் சகோதரியை இரண்டு ஆண்டுகளாகக் காதலித்துவந்தார்.
Also Read: சென்னை: திருமண நிச்சயத்தால் ஆத்திரம்; காதலி, அவரின் தாய்க்கு தீவைத்த காதலன்! - 3 பேர் பலி
தனது காதலியை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக விஜய், அந்தப் பெண்ணின் பெற்றோரிடம் தெரிவித்தார். ஆனால், அவர்கள் தங்களது மகளைத் திருமணம் செய்து கொடுக்க முடியாது என்று தெரிவித்துவிட்டனர். விஜய், மது அருந்தும் பழக்கம் உள்ளவர் என்பதால், அவருடைய காதலியும் திருமணம் செய்ய முடியாது என்று கூறியதாகத் தெரிகிறது. இதனால் விஜய் கடும் கோபத்தில் இருந்தார்.
அதோடு, தொடர்ந்து தனது காதலிக்கு பல்வேறு வழிகளில் தொல்லை கொடுத்துவந்திருக்கிறார். இதனால், மனரீதியாக அவருடைய காதலி கடுமையாக பாதிக்கப்பட்டார். இதையடுத்து விஜய்யின் காதலி கடந்த வாரம் தற்கொலை செய்துகொள்ள முயன்றார். இதனால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். கடந்த சில நாள்களுக்கு முன்புதான் வீடு திரும்பினார். அவரது உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக விஜய், தனது காதலி வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அப்போது தன்னுடன் பெட்ரோலை ஒரு பாட்டிலில் எடுத்துச் சென்றார். வீட்டில் காதலி மட்டும் தனிமையில் இருந்திருக்கிறார். காதலியைச் சந்தித்து பேசியபோதும், `உன்னைத் திருமணம் செய்ய முடியாது’ என்று விஜய்யிடம் அந்தப் பெண் திட்டவட்டமாக தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. தீவைத்துக் கொலை
இதனால் ஆத்திரமடைந்த விஜய், தான் எடுத்து வந்த பெட்ரோலை காதலி மீது ஊற்றி தீவைத்திருக்கிறார். அதோடு காதலி வீட்டைவிட்டு வெளியில் வந்துவிடக் கூடாது என்று வாசலில் விஜய் நின்றுகொண்டார். இதனால் காதலியால் உதவி கேட்டு வெளியில் செல்ல முடியவில்லை. உடனே, தனது காதலனையும் சேர்த்து அழைத்துச் செல்லலாம் என்று கருதி ஓடி வந்து வாசலில் நின்று கொண்டிருந்த காதலனை இறுக்க கட்டிப்பிடித்துக்கொண்டார். விஜய், தனது காதலியின் பிடியிலிருந்து வெளியில் வர எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. இதனால் காதலியுடன் சேர்ந்து வீட்டுக்கு வெளியே அலறியபடி வந்திருக்கிறார். இதைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள், இரண்டு பேரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். விஜய் சிகிச்சை பலனனின்றி உயிரிழந்துவிட்டார். அவரது காதலி 80 சதவிகித காயங்களுடன் தொடர்ந்து உயிருக்குப் போராடிவருகிறார்.
http://dlvr.it/RsG98S
Monday 8 February 2021
Home »
» திருமணத்துக்கு மறுத்த காதலிக்கு தீவைப்பு; காதலனைக் கட்டிப்பிடித்த காதலி!- மும்பை இளைஞர் பலி