புதிய கொள்கை தொடர்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக புதிய கொள்கைகளை அறிவித்திருந்தார்கள். அதன்படி தனிநபரின் தகவல்கள் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகும் எனத் தகவல்கள் வெளியாகியிருந்தன. இதையடுத்து மத்திய அரசு வாட்ஸ்அப் நிறுவனத்திடம் இதுகுறித்த தகவல்களை கேட்டுப்பெறலாம் என சொல்லப்பட்டு வந்தது. இதனிடையே பொதுநல மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு வந்தன. அதன்படி வாட்ஸ் அப்பின் புதிய பிரைவேஸி கொள்கைகளை செயல்படுத்த தடை விதிக்கக்கோரி டெல்லி கர்மான்யா சிங் செரீன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, “தனிப்பட்ட தகவல்களை மக்கள் பெரிதாக கருதுகின்றனர். அவர்களின் தகவல்களை காப்பது நமது கடமை. 4 ட்ரில்லியன் டாலர் மதிப்புள்ளதாக வாட்ஸ் அப் இருக்கலாம். தங்களுக்கு மக்களின் தகவல் பாதுகாப்பே முக்கியம்” என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், இதுகுறித்து வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
http://dlvr.it/RslQdN
Monday 15 February 2021
Home »
» மக்களின் பிரைவசியை பாதுகாப்பது நமது கடமை: வாட்ஸ்அப் வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து