சென்னையில் புதிய ஸ்டூடியோவில் தனது முதல் பாடலை இசையமைப்பாளர் இளையராஜா ஒலிப்பதிவு செய்கிறார். பல ஆண்டுகளாக பிரசாத் ஸ்டூடியோவில் இசையமைத்து வந்த இளையராஜா சமீபத்தில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார் இளையராஜா. இதையடுத்து நீதிமன்றத்தில் சமரசம் ஏற்பட்டு ஸ்டூடியோவில் இருந்த இளையராஜாவுக்கு சொந்தமான உடைமைகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்தநிலையில், சென்னையில் புதிய ஸ்டூடியோவில் தனது முதல் பாடலை இசையமைப்பாளர் இளையராஜா ஒலிப்பதிவு செய்கிறார். கோடம்பாக்கத்தில் உள்ள பழைய எம்.எம்.தியேட்டரில் இளையராஜாவின் புதிய ஸ்டூடியோ இன்று திறக்கப்படுகிறது. இந்த ஸ்டூடியோவில் முதல் முறையாக வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்துக்கான பாடல் பதிவை இளையராஜா இன்று தொடங்குகிறார். இந்த படத்தில் சூரி ஜோடியாக ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஶ்ரீ நடிக்கிறார். வெற்றிமாறன் படத்துக்கு முதல் தடவையாக இளையராஜா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/RrvZvc
Wednesday 3 February 2021
Home »
» புதிய ஸ்டூடியோவில் வெற்றிமாறன் படத்திற்கு பாடல் ஒலிப்பதிவு செய்யும் இளையராஜா