மும்பையில் கார்ரோடு பகுதியில் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்துவர் தேஷ்ராஜ். இருவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். ஆனால் ஒருவர் திடீரென கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர், பின்னர் ஒருவாரம் கழித்து பிணமாக மீட்கப்பட்டார். மகன் இறந்த அடுத்த நாளே ஆட்டோ ஓட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் வேறு வழியில்லாமல் ஆட்டோ எடுத்துக்கொண்டு பிழைப்பை பார்க்க சென்றார். ஆனால் தேஷ்ராஜ் துரதிஷ்டம் அவரது இரண்டாவது மகனும் அடுத்த இரண்டு வருடத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதனால் தனது மருமகள் மற்றும் நான்கு குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தேஷ்ராஜுக்கு ஏற்பட்டது. காலையில் 6 மணிக்கு ஆட்டோ ஓட்ட ஆரம்பித்தால் இரவு 11 அல்லது 12 மணிவரை ஆட்டோ ஓட்டுவார். தேஷ்ராஜ்
அதில் கிடைக்கும் 10 ஆயிரத்தில் தனது பேத்திகளின் படிப்புக்கு 6 ஆயிரத்தை செலவு செய்துவிடுகிறார். எஞ்சிய 4 ஆயிரத்தை கொண்டு குடும்பத்தில் உள்ள 7 பேர் சாப்பிட வேண்டிய நெருக்கடியான சூழ்நிலை. இது குறித்து தேஷ்ராஜ் கூறுகையில், ``பெரும்பாலான நாட்களில் சாப்பிட எதுவும் இருக்காது. எனது பேத்தி 9-வது வகுப்பு படிக்கும்போது படிப்பை பாதியில் விட்டுவிடட்டுமா என்று என்னிடம் கேட்டாள். நான் தான் உனக்கு எவ்வளவு படிக்க வேண்டும் என்று விருப்பமோ அதுவரை படிக்கும்படி கூறினேன். எனது பேத்தி 12வது வகுப்பில் 80 சதவீத மதிப்பெண் எடுத்த தினத்தன்று அனைத்து பயணிகளையும் பணம் இல்லாமல் அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்து சென்று பேத்தியின் தேர்ச்சியை கொண்டாடினேன்.
எனது பேத்தி பி.எட் படிக்க டெல்லி செல்ல வேண்டும் என்று சொன்னபோது அவளது படிப்பு செலவை என்னால் ஈடுகட்ட மூடியவில்லை. ஆனால் அவளது ஆசையை நிறைவேற்ற முடிவு செய்தேன். இதற்காக என்னிடம் இருந்த ஒரே வீட்டையும் விற்பனைசெய்து, அதில் கிடைத்த பணத்தை படிப்பு செலவுக்கு கொடுத்தேன். வீட்டை விற்றுவிட்டதால் மும்பையில் வசிக்க வீடு இல்லை. எனவே எனது மனைவி, மருமகள் மற்றும் இதர பேரக்குழந்தைகளை எனது சொந்த கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்திருக்கிறேன். நான் தொடர்ந்து மும்பையில் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கிறேன். ஆட்டோவிலே சாப்பிட்டுக்கொண்டு ஆட்டோவிலே உறங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறேன். பகல் நேரத்தில் ஆட்டோ ஓட்டுகிறேன். எனது பேத்தி எனக்கு போன் செய்து படிப்பில் முதலிடத்தில் வந்து விட்டேன் என்று சொல்லும் போது எனது அனைத்து வலிகளும் காணாமல் போய்விடுகிறது. எனது பேத்தியை கட்டிப்பிடித்துக்கொண்டு என்னை பெருமைப்படுத்தி விட்டாய் என்று கூறினேன். மும்பை - ஆட்டோ
எனது குடும்பத்தில் எனது பேத்திதான் முதல் பட்டதாரி. அவள் படித்து முடிக்கும் போதும், அன்றைய தினம் அனைவரையும் ஆட்டோவில் இலவசமாக அழைத்து செல்வேன்" என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார். தேஷ்ராஜ் வாழ்க்கை பற்றிய செய்தி சமூக வலைத்தளத்தில் வெளியானது. உடனே பொதுமக்கள் அவருக்கு தாராளமாக உதவி செய்ய ஆரம்பித்துள்ளனர். தேஷ்ராஜுக்கு 276 பேர் 5.3 லட்சம் ரூபாயை ஆன்லைன் மூலம் கொடுத்துள்ளனர். தேஷ்ராஜுக்காக குஞ்சன் ராட்டி என்பவர் ஆன்லைனில் நிதி திரட்டினார். அதன் மூலம் ரூ.5.3 லட்சம் கிடைத்துள்ளது. மும்பை மக்கள் தொடர்ந்து அவருக்கு உதவி செய்து வருகின்றனர். மும்பை மக்களின் உதவியை கண்டு தேஷ்ராஜ் கண்கலங்கி நிற்கிறார். அப்பணத்தின் மூலம் தனது மற்ற பேரக்குழந்தைகளையும் படிக்க வைக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். தேஷ்ராஜ் மட்டுமல்லாது பலர் மும்பையில் ஆட்டோ மற்றும் டாக்சியில்தான் இரவு நேரத்தில் தங்களது வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர்.
http://dlvr.it/RsgRJQ
Sunday 14 February 2021
Home »
» மும்பை: ஆட்டோவிலே உணவு, தூக்கம்! -பேத்தியின் படிப்புக்காக வீட்டை விற்ற முதியவரின் கதை