'வணக்கம் சென்னை', 'வணக்கம் தமிழ்நாடு' என தமிழில் கூறி உரையை பிரதமர் மோடி தொடங்கினார். மேலும் பேசிய அவர்,வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும் என்ற ஒளவையார் பாடலை மேற்கோள் காட்டினார். பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று சென்னை வந்தார் பிரதமர் மோடி. பின்னர் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் அமைக்கப்பட்ட மேடையில் பிரதமர் மோடி உரையாற்றினார். அவரது உரையில் ஒளவையார் , பாரதியார் பாடல்களை மேற்கோள் காட்டினார். மேலும் பேசிய அவர், '' சென்னை மக்கள் எனக்கு சிறப்பான வரவேற்பு அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் தமிழக அரசின் வளர்ச்சிக்கு உதவும். வேளாண் உற்பத்தியில் சாதனை படைத்த தமிழக விவசாயிகளுக்கு பாராட்டுகள். நீர் ஆதாரங்களை தமிழக விவசாயிகள் சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர். கொரோனா காலத்திலும் திட்டமிட்டப்படி மெட்ரோ வேலைகள் முடிக்கப்பட்டுள்ளன. பாரதியார் பாடலான 'ஆயுதம் செய்வோம், நல்ல காகிதம் செய்வோம்' பாடலையும் பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசினார்.
http://dlvr.it/RshBbw
Sunday 14 February 2021
Home »
» ஒளவையார், பாரதியார் பாடல்கள் மேற்கோள் - சென்னையில் பிரதமர் மோடி உரை