கேரள மாநிலத்தில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது சோலார் பேனல் மோசடி நடந்தது. அதில் முக்கிய குற்றவாளியாக சரிதா நாயர் பெயர் பெரிய அளவில் பேசப்பட்டது. சரிதா நாயருக்கு அரசியல் தொடர்புகள் குறித்த தகவல்கள் வெளியாகி கேரளத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கேரளத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வர் உம்மன் சாண்டிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது இந்த சோலார் வழக்கு.
கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சோலார் வழக்கு தமிழ்நாட்டில் கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நடந்துள்ளதாக புகார் கிளம்பியது. இந்த நிலையில் ஆரம்ப காலத்தில் கொடுத்த புகாரில் ஒரு வழக்கில் வரும் 25-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. கோழிக்கோடு மாவட்டம் கஸபா காவல் நிலையத்தில் 2012-ல் வழக்குப்பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் சரிதா நாயரின் ஜாமீனை கோர்ட் ரத்தாக்கியதுடன், கைது செய்யவும் ஆணை பிறப்பித்திருப்பது அந்த வழக்கில் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது.பிஜூ ராதாகிருஷ்ணன்
சோலார் கம்பெனியின் பெயரில் கேரள மாநிலம் கோழிக்கோடைச் சேர்ந்த அப்துல் மஜித் என்பவரிடம் 42.7 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக 2012-ல் பதிவான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அந்த சமயத்தில் அப்துல் மஜித்தின் வீடு கம்பெனி ஆகிய இடங்களில் சோலார் பேனல் பொருத்துவதாக பிஜூ ராதாகிருஷ்ணன், சரிதா நாயர் ஆகியோர் தங்கள் பெயரை ஆர்.பி நாயர் மற்று லெட்சுமி நாயர் என மாற்றி கூறி இந்த மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
கோழிக்கோடு நீதிமன்றத்தில் நடக்கும் இந்த வழக்கில் முதல் குற்றவாளியான பிஜூ ராதாகிருஷ்ணனும், இரண்டாவது குற்றவாளியான சரிதா நாயரும் கோர்ட்டில் ஆஜராகவில்லை. கீமோ தெரபி சிகிச்சை காரணமாக சரிதா நாயர் கோர்ட்டில் ஆஜராக முடியவில்லை என அவரது வழக்கறிஞர் கோர்ட்டில் தெரிவித்தார். பிஜூ ராதாகிருஷ்ணனுக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை முடிந்து ஓய்வில் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் சரிதா நாயர் கீமோ தெரபி எடுப்பதற்கான தெளிவான ஆவணங்கள் இல்லை என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.சரிதா நாயர்
இதையடுத்து சரிதா நாயர் மற்றும் பிஜூ ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. இந்த வழக்கில் சரிதா நாயரும், பிஜூ ராதாகிருஷ்ணனும் தாமாக முன்வந்து கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும், அப்படி ஆஜராகாமல் இருந்தால் கைது செய்து ஆஜராக்க வேண்டும் எனவும் கோர்ட் தீர்ப்பளித்தது.
மேலும் வரும் 25-ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என கோர்ட் அறிவித்துள்ளது. ஆள்மாறாட்டம், போலி ஆவரணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் குற்றம் நிரூபிக்கப்படும் நிலையில் ஒரு பிரிவில் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெற வாய்ப்பு உள்ளதாக சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
http://dlvr.it/RsXqzq
Friday 12 February 2021
Home »
» கேரளா: சரிதா நாயரின் ஜாமீன் ரத்து; பிடிவாரன்ட்! -சோலார் மோசடி வழக்கில் மீண்டும் பரபரப்பு