![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBHOZIZCDMgdDKKFZi2kWhKMqFvfGEjrPWyEvm1Vkg7IW36j2Pv4IxSE_jDGmN9120fcMGXxR7wQ_rO0CQMVt9SrjiGTRrEPM9PZrL8jFsuHDtuh6DMCK-GRuQhUKQuk4C6AJxVhJ18p4/s320/handicraft.jpg)
மாற்றுத் திறனாளிகள் உரிமை தொடர்பான ஐநா உடன்படிக்கை யின் அடிப்படையில் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மிகவும் முக்கியமான இந்த சட்டம் மாற்றுத் திறனாளிகளுக்கு திருப்புமுனையாக அமையும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். அரசு வேலையில் மாற்றுத் திற னாளிகளுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை 3-லிருந்து 4 சதவீதமாக வும் உயர் கல்வி நிறுவனங்களில் 3-லிருந்து 5 சதவீதமாகவும் உயர்த்த இந்த சட்டம் வகை செய்கிறது. மேலும் மாற்றுத் திறனாளிகளை தாக்குதல், அவமதித்தல், உணவு வழங்க மறுத்தல் ஆகிய செயலில் ஈடுபடுவோருக்கு ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் அதிகபட்சமாக 5 ஆண்டு வரை சிறை தண்டனை வழங்கவும் இந்த சட்டம் வகை செய்கிறது.
English summary:
New Delhi - Bill recently passed law, higher education institutions from the next academic year for people with disabilities in the federal government is taking action to provide 5 per cent reservation.