மும்பை: திருமணம் செய்து கொள்வேன் ஆனால் எப்பொழுது என்று தெரியாது என பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வருகிறார்கள். கோஹ்லி இந்த ஆண்டே திருமணம் செய்து கொள்ள விரும்ப அனுஷ்கா மறுத்தார்.
இந்த காரணத்தால் அவர்கள் இந்த ஆண்டின் துவக்கத்தில் பிரிந்து சில மாதங்கள் கழித்து மீண்டும் சேர்ந்தனர்.
திருமணம் :
கிரிக்கெட் வீரர்கள் இஷாந்த் சர்மா, யுவராஜ் சிங் ஆகியோர் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த ஆண்டுக்குள் திருமணம் செய்ய நினைத்த கோஹ்லிக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை.
அனுஷ்கா:
திருமணம் செய்து கொள்வேன் ஆனால் அது எப்பொழுது நடக்கும் என தெரியவில்லை. நான் இன்னும் திருமணம் பற்றி யோசிக்கவே இல்லை. ஆனால் நிச்சியம் ஒரு நாள் திருமணம் செய்து கொள்வேன் என அனுஷ்கா தெரிவித்துள்ளார்.
சினிமா:
காலம் மாறிக் கொண்டிருக்கிறது. திருமணமான பிறகும் சரி குழந்தைகள் பெற்ற பிறகும் சரி நடிகைகளுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கின்றது. இது திரையுலகில் பெண்களுக்கு அருமையான நேரம் என்கிறார் அனுஷ்கா.
நடிப்பு:
நான் திருமணத்திற்கு பிறகும் நடிக்க விரும்புகிறேன். நடிகைகளுக்கு கொஞ்ச நாள் தான் திரையுலக வாழ்க்கை என்று மக்கள் கூறுவது எனக்கு பிடிக்காது என்று அனுஷ்கா கூறியுள்ளார்.
English summary:
Bollywood actress Anushka Sharma said that marriage is on the cards but don't know when will it happen.