டெல்லியில் நடைபெறும் டிராக்டர் பேரணியில் பங்கேற்று படுகாயமடைந்த விவசாயி ஒருவர் உயிரிழந்தார். டெல்லி ஐடிஓ பகுதியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்குபெற்ற விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். டிராக்டர் பேரணியில் பங்கேற்றவர்களை கலைக்க முயன்றபோது விவசாயிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது நடைபெற்ற போலீஸ் தடியடியில் படுகாயமடைந்த விவசாயி நவ்நீத் (45 வயது) உயிரிழந்தார். மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக சுமார் இரண்டு மாதங்களாக டெல்லியில் போராட்டம் நீடித்து வருகின்றது. மத்திய அரசுக்கும், விவசாயிகள் சங்கத்தினருக்கும் இடையே நடந்த 12 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், இன்று விவசாயிகள் மாபெரும் டிராக்டர் பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இன்று டெல்லியில் ஆயிரக்கணக்கான டிராக்டர்களில் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டு, செங்கோட்டையை முற்றுகையிட்டனர்.
http://dlvr.it/RrP4wJ
Wednesday 27 January 2021
Home »
» டெல்லி போராட்டத்தில் விவசாயி ஒருவர் உயிரிழப்பு