மக்களிடம் நம்பிக்கை ஏற்பட அரசியல்வாதிகளுக்கு முதலில் தடுப்பூசி போட வேண்டும் என பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவில் வருகின்ற 16 ஆம் தேதியில் கொரோனாத் தடுப்பூசியானது செலுத்தப்பட இருக்கிறது. முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, அதன் பின்னர் பிறருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில் நேற்று மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி, தடுப்பூசிகளுக்கு அமைச்சர்கள் முந்தக்கூடாது. தங்களுக்கான முறை வரும் போது அரசியல் வாதிகள் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி, மக்களிடம் நம்பிக்கை ஏற்பட அரசியல்வாதிகளுக்கு முதலில் தடுப்பூசி போட வேண்டும் கூறியுள்ளார் . மேலும் அமைச்சர்கள் , சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்தக் கோரி பிரதமர் மோடிக்கு கடிதமும் எழுதியுள்ளார்.
http://dlvr.it/RqQTKV
Tuesday 12 January 2021
Home »
» ''அரசியல்வாதிகளுக்கு முதலில் தடுப்பூசி போட வேண்டும்’’ - பிரதமருக்கு நாராயணசாமி கடிதம்