வாட்ஸ்அப் நிறுவனம் அதன் பயனர்களின் தரவுகளை ஃபேஸ்புக் நிறுவனத்துடன் பகிரும் விதமாக அதன் தனியுரிமை கொள்கைகளில் சில மாற்றங்களை முன்னெடுத்தது. அந்த கொள்கைகளுக்கு சம்மதம் கொடுக்காத பயனர்களின் கணக்குகள் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதியோடு முடக்கப்படும் எனவும் தகவல் வெளியாகி இருந்தது. இதையடுத்து சிக்னல், டெலிகிராம் மாதிரியான அப்ளிகேஷன்களை பயன்படுத்துமாறும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அதற்கு விளக்கம் கொடுத்து செய்தித்தாள்களில் முதற்பக்கத்தில் விளம்பரம் கொடுத்திருந்தது வாட்ஸ்அப். தொடர்ந்து தனியுரிமை கொள்கை குறித்து பயனர்களுக்கு ஸ்டேட்டஸ் மூலமாகவும் வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கம் கொடுத்து வருகிறது. ‘உங்கள் பிரைவஸிக்கு நாங்கள் பொறுப்பு’, ‘வாட்ஸ் அப்பில் எண்ட் டூ எண்ட் என்க்ரிப்ஷன் இருப்பதால் நாங்கள் உங்களது சேட்களை வாசிக்கவோ, கவனிக்கவோ முடியாது’, ‘உங்களது லொகேஷனையும் எங்களால் பார்க்க முடியாது’, ‘உங்களது போன் காண்டாக்ட் விவரங்களை ஃபேஸ்புக்குடன் வாட்ஸ் அப் பகிறாது’ என அந்த ஸ்டேட்டஸில் வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. WhatsApp is sending some official status updates: details available in the article.If you have received those status updates, where are you from? https://t.co/iCk2cB2mpu pic.twitter.com/Gzc3VNkST6 — WABetaInfo (@WABetaInfo) January 17, 2021 பயனர்கள் மற்றும் போட்டியாளர்களிடம் இருந்து கிளம்பிய அழுத்தமே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. டெஸ்லா, டெலிகிராம் மற்றும் Paytm மாதிரியான நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் நேரடியாக வாட்ஸ்அப்பை விமர்சித்திருந்தனர். சிக்னல் அப்ளிகேஷன் பிளே ஸ்டார் மற்றும் ஆப்பிள் ஐ போன் ஸ்டோரிலும் டிரெண்டிங்கில் உள்ளது வாட்ஸ் அப்பின் தன்னிலை விளக்கத்திற்கு காரணம்.
http://dlvr.it/RqmCWS
Sunday 17 January 2021
Home »
» "உங்கள் பிரைவஸிக்கு நாங்கள் பொறுப்பு"- ஸ்டேட்டஸ் மூலம் விளக்கம் கொடுத்த வாட்ஸ்அப்