கொரோனாவால் மும்பையில் இன்னும் புறநகர் ரயில் சேவை அனைவருக்கும் தொடங்கப்படவில்லை. அத்தியாவசியப் பணிகளில் இருக்கும் ஊழியர்கள், குறிப்பிட்ட நேரத்தில் பெண்கள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். புறநகர் ரயில்களை நம்பித்தான் ஆயிரக்கணக்கான ஆட்டோக்கள் மும்பையில் ஓடுகின்றன. ஒவ்வொரு ரயில் நிலையத்தில் இருந்தும் இது போன்று இயக்கப்படும் ஆட்டோ டிரைவர்கள் இப்போது போதிய வருவாய் இல்லாமல் திண்டாடி வருகின்றனர். பொதுமக்களும் இப்போது அதிக அளவில் ஆட்டோவைப் பயன்படுத்துவதை தவிர்த்து பஸ்களில் பயணம் செய்ய தொடங்கியுள்ளனர். சஷாங்க் ராவ்
இதனால் ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் வாங்கிய கடனை திரும்பச் செலுத்த முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். இந்த நிதி நெருக்கடியில் இருந்து மீள மாநில அரசு தங்களுக்கு மாதம் ரூ.10,000 நிதியுதவி செய்யவேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் . தங்களது கோரிக்கையை மாநில அரசிடம் கொடுப்பதற்காக ஆட்டோ டிரைவர்கள் ஒவ்வொரு டிரைவரிடமும் தனித்தனியாக விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து வாங்குகின்றனர். இதுவரை மாநிலம் முழுவதும் 10,000-த்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து வாங்கிவிட்டனர்.
Also Read: மும்பை: சட்டவிரோதமாக குழந்தைகள் விற்பனை! - மருத்துவர், 7 பெண்கள் உட்பட 9 பேர் கைது
மும்பை மட்டுமல்லாது மாநிலம் முழுவதும் உள்ள ஆட்டோ டிரைவர்களுக்கு மாதம் 10,000 ரூபாய் கொடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து ஆட்டோ யூனியன் தலைவர் சஷாங்க் சரத் ராவிடம் கேட்டதற்கு, ``ஆட்டோ டிரைவர்கள் நிதி நெருக்கடியில் இருந்து மீள மாதம் ரூ.10,000 கொடுக்கும்படி மாநில அரசிடம் கேட்டுக்கொண்டோம். போக்குவரத்துத் துறை அமைச்சரையும் நேரில் சந்தித்து எங்களது கோரிக்கையைத் தெரிவித்துவிட்டோம். ஆனால் இதுவரை எந்தவித பதிலும் இல்லை. நிதியுதவி மட்டுமல்லாது வேலையில்லாத இளைஞர்களின் ஆட்டோ கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், ஆட்டோவை இயக்க கொரோனா காலத்தில் பிறப்பிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க வேண்டும். மாதம் ரூ.10,000 கொடுக்கவேண்டும் என்ற எங்களது கோரிக்கையை மாநில அரசு கட்டாயம் பரிசீலிக்க வேண்டும் என்பதற்காகத்தான் எழுத்து மூலம் கொடுக்க ஆட்டோ டிரைவர்களிடம் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து வாங்குகிறோம்.மும்பை - ஆட்டோ
இதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஆட்டோ கட்டணத்தை அதிகரிப்பதாக மாநில அரசு தெரிவித்தது. ஆனால், தொழில் பாதிக்கும் என்பதால், நாங்கள் வேண்டாம் என்று தெரிவித்துவிட்டோம். இப்போது தாக்குப்பிடித்து வாழ்வதுதான் முக்கியம். ஆட்டோ கட்டணத்தை அதிகரித்தால் வருவாய் இழப்பு அதிகரித்து ஆட்டோ டிரைவர்கள் மிகவும் பாதிக்கப்படுவர்’’ என்றார்.
கொரோனா தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் மும்பையில் பெஸ்ட் நிர்வாகம் பஸ் கட்டணத்தை அதிரடியாக குறைத்தது. இதனால் அதிகமானோர் பஸ்களில் பயணம் செய்ய ஆரம்பித்துவிட்டனர். மும்பை மெட்ரோபாலிடன் பகுதியில் மட்டும் 2.50 லட்சம் ஆட்டோக்களும் மகாராஷ்டிரா முழுவதும் 9.75 லட்சம் ஆட்டோக்களும் இயக்கப்படுகின்றன. ஆனால், மும்பையில் 45 டாக்சிகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. மாநில அரசு போக்குவரத்து நெருக்கடியைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் 1996-ம் ஆண்டு புதிய ஆட்டோ பெர்மிட் கொடுப்பதை நிறுத்தியது. தேவை அதிகரித்ததால் 2017-ம் ஆண்டுதான் புதிய ஆட்டோ பெர்மிட் கொடுக்க ஆரம்பித்தது.
http://dlvr.it/RqxVCj
Wednesday 20 January 2021
Home »
» மும்பை: வருமானம் இழப்பு; வாழ்வாதாரத்தைக் காக்க மாதம் ரூ.10,000! அரசிடம் கோரும் ஆட்டோ டிரைவர்கள்