வாழை விவசாயிகள் விலை வீழ்ச்சி உள்ளிட்ட பல காரணங்களால் வருத்தத்தில் இருக்கும் நேரத்தில் அவர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி வந்து சேர்ந்துள்ளது. வாழை பழத்தைக் கொண்டு ஒரு புதிய உணவு வகையை உருவாக்கியுள்ளனர் கேரளத்து விஞ்ஞானிகள் குழு.
வாழை ஒரு சாதாரண பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும் அதன் மருத்துவ குணங்கள் அதிசயிக்க வைக்கின்றன. வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை உருவாக்குகிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது.வாழை பழ கிரிட்
வாழை பழமானது நமது உடலில் உள்ள ஹர்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது. வாழை பழத்தில் பொட்டாசியம் அதிகளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது. நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணை புரிகிறது. நரம்புகளை சீராக வைத்துக் கொள்கிறது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது.
வாழை பழத்தின் மூலம் பல உணவு பொருட்கள் செய்து வருகின்றனர். தற்போது, வாழை பழத்தை கொண்டு புதிய ரக உணவைத் தயாரித்துள்ளனர் கேரளாவின் பாப்பனம்கோட்டில் உள்ள தேசிய அறிவியல் தொழில்நுட்பம் கழகத்தைச் சேர்ந்த (NIIST– National Institute for Interdisciplinary Science and Technology) விஞ்ஞானிகள்.
நேந்திரன் வாழை பழங்களிலிருந்து வாழைப்பழ கிரிட் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இது ரவை மற்றும் உடைத்த கோதுமை போன்ற உணவு ரகமாகும். இந்த நேந்திரன் வாழை பழத்தை நன்கு காய வைத்து, பொடியாக்கி இதை உருவாக்கியுள்ளனர். இதை அனைத்து உணவு பொருள்களிலும் பயன்படுத்த முடியும்.
இது பார்ப்பதற்கு கோதுமை போல, ரவை போலத்தான் இருக்கும். ஆனால், அதிக சத்து கொண்டது. இதில், ஸ்டார்ச் சத்து இருக்கிறது. இவை உடலுக்கு மிகவும் சத்தான பொருள். இதை மக்கள் விரும்பி உண்ணமுடியும் என்று சொல்கிறார்கள் நிபுணர்கள்.வாழை
ஆரோக்கியமான உணவில் சிறந்த மூலப்பொருளாகக் கருதப்படும் வாழை பழம், பல வகையான உணவுகளைத் தயாரிக்கப் பயன்படும் என்று NIIST தெரிவித்துள்ளது. பொதுவாக பழுத்த, நேந்திரன் வாழை பழத்தை வழக்கமான கேரள உணவுகளான ‘ஏவல்’ மற்றும் ‘தோரன்’ போன்றவற்றிலும் பயன்படுத்துகிறார்கள். மேலும், உப்புமா தயாரிக்க பயன்படுத்தப்படலாம், அல்லது வாழை பழ பவுடரைக் கலந்து பால் அல்லது தேங்காய் பாலுடன் கஞ்சி தயாரிக்கலாம். சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவுடன் வாழை பழத்தை சேர்த்து கேக் மற்றும் ரொட்டி தயாரிப்பில் பயன்படுத்தலாம்.
இது உண்மையிலேயே வாழை விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்திதான். நேந்திரன் பழ விளைச்சலையும் இனி அவர்கள் அதிகரிக்கலாம். வாழை விலை வீழ்ச்சியடையும் நேரத்தில் இதுபோன்ற செய்திகள், விவசாயிகளுக்கு ஊக்கம் தரும் வகையில் அமைந்துள்ளன.
- ஆனந்தி ஜெயராமன்
http://dlvr.it/RqLd5l
Monday 11 January 2021
Home »
» `இது வாழை விவசாயிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம்!' - விஞ்ஞானிகளின் புதிய மதிப்புக்கூட்டல் பொருள்