Monday, 27 March 2017
Wednesday, 8 March 2017
திருமண விழாவில் துயரம்: லாரி கவிழ்ந்து 25 பேர் காயம்
கொடைக்கானல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே திருமண விழாவிற்கு சென்ற லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கொடைக்கானல் அருகே உள்ள மூலையாறு கிராமத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக மக்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்றுள்ளது. இந்த லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் சிறுமி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் லாரியில் பயணம் செய்த 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் பண்ணைக்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
English summary:
Kodaikanal: Kodaikanal in Dindigul district, near the wedding ceremony in the truck crashed down and 25 were injured.

Thursday, 2 March 2017
'சசி எனது வீட்டு வேலையாள்': ஜெயலலிதா சொன்ன ரகசியம்: தோல் உரிக்கிறார் 'நத்தம்'
திண்டுக்கல்: ''சசிகலா எனது வீட்டு வேலையாள்... ஆட்சிக்கு ஓ.பி.எஸ்., தான் என, ஜெயலலிதா எங்களிடம் கூறினார்,'' என, அ.தி.மு.க., மாஜி அமைச்சர் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசினார்.
பன்னீர்செல்வம் அணி சார்பில் திண்டுக்கல்லில் நடந்த ஊழியர் கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஆளுங்கட்சியின் மிரட்டலுக்கு பயப்படாத எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் தொண்டர்கள் பன்னீர்செல்வம் பக்கம் உள்ளனர். 'கான்ட்ராக்ட்' கிடைக்கும், 'மில்'கள் நடத்தலாம் என, காரியம் சாதிக்க நினைப்போர், சசிகலா 'பினாமி'களிடம் உள்ளனர். எம்.எல்.ஏ., க்களை ஆடுகளைப் போல அடைத்து, தலா 3 கோடி ரூபாய், 3 கிலோ தங்கத்தை காட்டி விலை பேசி விட்டனர். அந்த எம்.எல்.ஏ.,க்கள் மக்களிடம் பதில் கூறித்தான் ஆக வேண்டும்.
சசிகலா கும்பலுக்கு கப்பம் கட்ட முடியாமல் அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் விரைவில் ஓ.பி.எஸ்., பக்கம் வருவர். ஜெ.,யின் சொத்துக்களையும், கட்சியையும் கைப்பற்ற, கடந்த சட்டசபை தேர்தலில் இருந்தே 'மாபியா கும்பல்' திட்டம் தீட்டியது. எம்.ஜி.ஆர்., கட்டிய அ.தி.மு.க., என்ற 'பூமாலை'க்கு, ஜெயலலிதா அழகு சேர்த்தார். அந்த 'பூ மாலை' இன்று குரங்குகள் கையில் சிக்கி சின்ன பின்னமாகி வருகிறது. சசிகலாவால் தான் ஜெ.,க்கு அவப்பெயர் வந்தது.
சசிகலாவை வீட்டை விட்டு வெளியேற்றிய ஜெயலலிதா எங்களிடம், ''அவர் எனது வீட்டு வேலையாள்... அவ்வளவுதான். ஆட்சிக்கு ஓ.பி.எஸ்., தான்,'' என்றார்.
மருத்துவமனையில் அவரை யாராவது பார்த்தால், அவர்களிடம் உண்மையை சொல்லி விடுவார் என்பதற்காகவே, யாரையும் சந்திக்க விடாமல் சசிகலா தடுத்தார்.அ.தி.மு.க., பொதுச் செயலரை தொண்டர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், காலையில் மன்னிப்பு கடிதம் கொடுத்து, மாலையில் துணை பொது செயலர் ஆகியுள்ளார் தினகரன்; இவர்களின் தேர்வு செல்லாது. சசிகலா படத்துடன் அமைச்சர்கள் ஓட்டுக் கேட்டு சென்றால், அவர்களின் மனைவி கூட ஓட்டு போட மாட்டார்.
'ஜெ., மருத்துவமனையில் இருந்தபோது மூன்றுவித சுவீட் கொடுத்து பேசினார்' என, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார். அவர், அரசியலில் காமெடி நடிகராக வலம் வருகிறார்; பல அமைச்சர்கள் 'மகா நடிகர்கள்'. அமைச்சர் சீனிவாசன் தேர்தலில் நின்றால், மாநகராட்சி கவுன்சிலராக கூட வரமுடியாது. இவ்வாறு அவர் பேசினார்.
14 தியேட்டர்கள் எப்படி?
முன்னாள் எம்.எல்.ஏ., குப்புசாமி பேசுகையில், ''மாபியா கும்பல் நாடு கடத்தப்பட வேண்டும். சென்னையில் சசிகலாவுக்கு 14 தியேட்டர்கள், தினகரனுக்கு சிங்கப்பூர், துபாயில் ஓட்டல்கள் எப்படி வந்தன? இந்த 'மாபியா கும்பல்' தொடர்ந்தால் தமிழகம் காணாமல் போகும்,'' என்றார்.

Sunday, 22 January 2017
இது உங்கள் கவுரவம் அல்ல... எங்கள் உரிமை : தீயென சுட்ட மதுரை மக்கள் ... மாபெரும் தோல்வியுடன் சென்னை திரும்பும் O.P.S
மதுரை: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோவில்பட்டி கிராமத்தில் நடைபெற உள்ளதாக தமிழக அரசு தன்னிச்சையாக அறிவித்த உத்தரவு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகும் நத்தம் அருகே கோவில்பட்டியில் போராட்டம் தொடர்கிறது. முன்னதாக ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் கோரும் மக்களின் கொந்தளிப்பை மீறியும் வலுக்கட்டாயமாக ஜல்லிக்கட்டு நடத்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சித்தார். ஆனால் அதற்கு அலங்காநல்லூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களின் கடும் எதிர்ப்பால் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த இயலவில்லை. மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் முதல்வரால் அலங்காநல்லூருக்கு செல்லமுடியவில்லை. அலங்காநல்லூரை சுற்றி சாலைகளில் குழிகளை தோண்டி ஊருக்குள் நுழையாமல் போக்குவரத்தை தடை செய்தனர்.
இதன் மூலம் ஜல்லிக்கட்டு நடத்த தீவிர முயற்சி காட்டிய தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு மாபெரும் தோல்வியே மிஞ்சியது. மேலும் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர். அவனியாபுரத்தில் மக்கள் எதிர்ப்பால் வருவாய் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.
இதன் பின்னரும் தனது மக்களின் உணர்வை மதிக்காமல், தங்களது கவுரவேம முக்கியம் என நினைத்து கொண்டு திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கோவில்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்த தீவிர ஏற்பாடுகள் செய்ய முயற்சிக்கப்பட்டது.
ஆனால் விவரம் அறிந்து தீயென கிளம்பிய அந்த கிராம மக்கள் வாடிவசாலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அங்கும் எதிர்ப்பு கிளம்பியதால் செய்வதறியாது திகைத்த அரசு அதிகாரிகள், முதல்வரின் உத்தரவுப்படி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்றனர். ஆனால் அங்கிருந்தவர்கள் தண்ணீர் பாக்கெட்டுகளை பீய்ச்சி அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை விரட்டியடித்தனர். இதனையடுத்து முதல்வரின் கடைசி முயற்சியும் பலிக்காததால் மாபெரும் தோல்வி முகத்துடன் சென்னை திரும்புகிறார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
English summary:
Madurai, Dindigul district of Tamil Nadu state to be held in the village of Kovilpatti near Innasipuram announced unilateral order has been canceled. Near Kovilpatti Innasipuram jallikattu was canceled after the struggle continues.

Saturday, 21 January 2017
திண்டுக்கல், தேனி, திருச்சியில் தடை மீறி ஜல்லிக்கட்டு
திண்டுக்கல்: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்ககோரி போராட்டம் நடந்தது வருகிறது. இந்த தடையை மீறி நேற்று பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலை கிராமம் பூம்பாறையில் குழந்தை வேலப்பர் கோயில் உள்ளது. பூம்பாறை மந்தையில் நேற்று ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தடையை மீறி 5 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. கிராம இளைஞர்கள் சீறிவந்த காளைகளை பிடித்து உற்சாகமடைந்தனர்.
நத்தம் கோவில்பட்டியில் கைலாசநாதர் கோயில் முன்பு, தற்காலிக வாடிவாசல் அமைக்கப்பட்டு தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தது. இதற்காக, சுமார் 20 காளைகளை ஊர்வலமாக அழைத்து வந்தனர். பின்னர் வாடிவாசல் வந்ததும் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை இளைஞர்கள் ஆர்வத்துடன் அடக்கினர். இதேபோல் நத்தம் அருகே சங்கரன்பாறையில் உள்ள பாலமுருகன் கோயில் முன்பாக வாடிவாசல் அமைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு விடப்பட்டது. இங்கு 10க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. பழநி அருகே சாமிநாதபுரத்தில் தடையை மீறி நேற்று ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. பழநி - உடுமலை சாலையில் நடந்த பந்தயத்தில் 15க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் அணிவகுத்து சென்றன. போலீசார் யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை.
தேனி: தேனி மாவட்டம், உத்தமபாளையம், க.புதுப்பட்டியில் பொதுமக்கள் தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்தினர். நேற்று காலை காளைகளை அவிழ்த்துவிட்டு கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக இளைஞர்கள் விரட்டிச் சென்றனர். தகவல் அறிந்த உத்தமபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பொதுமக்களை எச்சரித்து அனுப்பினர். திருச்சி: திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகேயுள்ள பெரிய அணைக்கரைப்பட்டியில் நேற்று, புனித தோமையார் திருவிழாவை முன்னிட்டு செபஸ்தியார் தேவாலயம் முன்பு தற்காலிக வாடிவாசல் அமைத்து தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் 40 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்க 100 மாடுபிடி வீரர்கள் திரண்டனர்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வாண்டான்விடுதி கோயில் திடலில் தடையை மீறி நேற்று மதியம் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. வாடிவாசலில் இருந்து 8 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. தகவல் அறிந்து கறம்பக்குடி மற்றும் ரகுநாதபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜல்லிக்கட்டு நடைபெறுவதை தடுத்தனர்.
சேவல் சண்டை: ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அடுத்த முள்ளாம்பரப்பில் பொதுமக்கள் சார்பில் நேற்று முன்தினம் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, நேற்றும் சேவல் சண்டைகள் நடைபெற்றது. பல இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயங்கள் நடந்ததை பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
English summary:
Dindigul: Tamilnadu battle took place in the state has a ban on Jallikattu. This took place despite the ban jallikattu different locations yesterday. Crowds gathered in protest yesterday in Bumba flock. 5 calves were untied continued defiance. Rural youth solidarity brave caught bulls.

Friday, 20 January 2017
பள்ளிகளுக்கு இன்று விடுமுறை; களத்தில் இளங்கன்றுகள்...!
மதுரை : ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து பெரும்பாலான கல்லூரிகள் விடுப்பு விட்டுள்ள நிலையில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட 7 மாவட்ட அரசு பள்ளிகளுக்கு இன்று(ஜன.,20) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வலுக்கும் போராட்டம்:
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி தமிழகத்தில் இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தமிகத்தின் பெரும்பாலான கல்லூரிகளுக்கு நேற்று முதல் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனையடுத்து கல்லூரி மாணவர்கள், ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்தக்கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்யக் கோரியும் முழு மூச்சுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர். இளைஞர்களின் போராட்டத்துக்கு பொதுமக்கள், வணிகர்கள், அரசு தனியார் ஊழியர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.
முழு அடைப்பு:
முதல்வரின் டில்லி பயணத்தில் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் முடிவு எட்டப்படாததையடுத்து போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. பெரும் இடங்களில் சாலை மறியல், ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று முழுஅடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் தமிழகம் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பள்ளிகள் விடுமுறை:
ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாக தமிழத்திலுள்ள தனியார் பள்ளிகள் இன்று விடுமுறை அறிவித்துள்ளன. இந்நிலையில் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மற்றும் திருப்பூர் ஆகிய 7 மாவட்ட அரசு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். இதனையடுத்து இன்று பள்ளி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary:
Madurai : Jallikattu in support of the position that had to leave most of the colleges in Madurai, Dindigul, Virudhunagar district public schools, including 7 today (Jan. 20) has been declared a holiday.

Saturday, 24 December 2016
சேகர் ரெட்டி கூட்டாளிகள் வீட்டில் ரெய்டு
திண்டுக்கல்: சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணல் கான்டிராக்டர் சேகர் ரெட்டி கூட்டாளிகளான ரத்னம், ராமசந்திரன் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கைது:
நாடு முழுவதும், புதிய ரூபாய் நோட்டுகளுக்காக, வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்., மையங்களில் மக்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டி வீட்டில் இருந்து, 35 கோடி ரூபாய்க்கு, புதிய ரூபாய் நோட்டுகளை, வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்; இது தொடர்பான வழக்கில் சேகர் ரெட்டி கைதானார். சேகர் ரெட்டியின் கூட்டாளிகளான ரத்தினம், பிரேம்குமார், ராமச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
வீட்டில்:
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் ஜி.டி.என்., ரோட்டில், சேகர் ரெட்டியின் கூட்டாளியான ரத்னம் என்பவரது வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல்லில் சர்வேயராக பணி செய்த ரத்தினம் தற்போது பல கோடி ரூபாய்க்கு அதிபதி. ரியல் எஸ்டேட் தொழில் துவங்கி, மணல் குவாரி ஒப்பந்ததாரராக உருவெடுத்தார்.'மணல் மாபியா' சேகர் ரெட்டியின் தொடர்பு ஏற்பட்டு, அவருக்கு பணம் மாற்றிக் கொடுத்ததாக சி.பி.ஐ., போலீசாரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
அலுவலகத்தில்:
இதேபோல், ரெட்டியின் மற்றொரு கூட்டாளியான, புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரது மணல் குவாரி அலுவலகத்திலும் சோதனை நடந்து வருகிறது. நிஜாம் காலனியில் உள்ள அவரது அலுவலகத்தில், வருமான வரி மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றன.
English summary:
Shekhar Reddy, the jailed allies sand contractor Ratnam,Ramachandran houses have been raided in the income tax authorities.

Wednesday, 14 December 2016
10ம் வகுப்பு மாணவி மாயம்: சி.பி.சி.ஐ.டி., விசாரணை
மதுரை: கடந்த, 2014ல் காணாமல் போன, 10ம் வகுப்பு மாணவி குறித்து சி.பி.சி.ஐ.டி., விசாரிக்க, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த சேர்மலை என்பவர், 2014 ஜூலையில், காணாமல் போன 10ம் வகுப்பு மாணவியை கண்டுபிடித்து தரக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி., தாக்கல் செய்த பதில் மனுவில் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரிக்க உத்தரவிட்டனர்.
English Summary:
Madurai: past, disappeared in 2014, a student of Class 10 of the CB, to investigate, the High Court ordered the Madurai branch.

Wednesday, 30 November 2016
மின்சார அமைச்சர் தங்கமணி குரலில் பேசி டிரான்ஸ்பர்... மிமிக்ரி கலைஞர் கைது
சேலம்: மேட்டூர் அனல்மின் நிலைய அதிகாரிகளிடம் மின்துறை அமைச்சர் தங்கமணி போல் மிமிக்ரி கலைஞரை பேசவைத்து 28 பேரை இடமாற்றம் செய்து அதன் மூலம் பல கோடியை குவித்துள்ளர் அதிமுக நிர்வாகிகள். இந்த சம்பவம் மின்வாரிய வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டூரில், 840 மற்றும், 600 மெகாவாட் அனல்மின் நிலையம் உள்ளது. அங்குள்ள என்ஜினியர்கள் பணியிடமாற்றத்துக்காக ஆளுங்கட்சி தொழிற்சங்க நிர்வாகிகளை சந்தித்து பேசுவார்கள்.
ஒரு மாதத்துக்கு முன், மேட்டூர் அனல்மின் நிலையத்தில் பணிபுரியும் உதவி என்ஜினியர் ஜெயக்குமாரை, நிலக்கரி கையாளும் பகுதியில் இருந்து, கொதிகலன் பிரிவுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என அதிகாரிகளிடம், மின்துறை அமைச்சர் தங்கமணி போல் ஒருவர் பேசியுள்ளார். அமைச்சரே கூறியதாக நம்பி அவரை கொதிகலன் பிரிவுக்கு, அதிகாரிகள் இடமாற்றம் செய்தனர். அங்கு நடந்த நிர்வாக குளறுபடியால், ஒரு வாரத்துக்கு முன் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
என்ஜினியர் குழப்பம்:
சஸ்பெண்டை ரத்து செய்ய கோரி, அவரது உறவினர்கள் மின்துறை அமைச்சரை சந்தித்து முறையிட்டுள்ளனர். இதைக்கேட்ட அமைச்சர், மின்வாரிய அதிகாரிகளிடம் அவர் எப்போது இடம் மாற்றம் செய்யப்பட்டார் என்பது குறித்து விசாரித்துள்ளார். அப்போது அதிகாரிகள் நீங்கள் தானே போனில் கூறினீர்கள். அதன் பேரில் இடமாற்றம் செய்ததாக கூறியுள்ளனர்.
அமைச்சர் தங்கமணி :
அதிர்ச்சியடைந்த அமைச்சர் தங்கமணி, நான், அப்படி யாருக்காகவும் கீழ் மட்ட அதிகாரிகளிடம் போனில் பேசவில்லை. இதில் ஏதோ சதி நடந்துள்ளது. எனவே முறையாக விசாரித்து தனக்கு தெரியப்படுத்தும்படி உத்தரவிட்டுள்ளார். விசாரணையில், அனல்மின்நிலைய ஆளும்கட்சி தொழிற்சங்க நிர்வாகிகள் சிலர், பொறியாளர்கள், ஊழியர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு, திண்டுக்கலைச் சேர்ந்த மிமிக்ரி கலைஞர் சவரி முத்துவை பயன்படுத்தி மின்துறை அமைச்சர் போல், போனில் அதிகாரிகளிடம் பேசி, அவர்கள் விரும்பும் இடத்துக்கு மாற்றம் செய்தது தெரியவந்துள்ளது.
28 பேர் டிரான்ஸ்பர் :
கடந்த 2 மாதத்தில் 28 பேர்களை இதேபோல் மிமிக்ரி குரலில் பேசி இடமாற்றம் செய்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. அமைச்சரின் குரலில் பேச திண்டுக்கலை சேர்ந்த மிமிக்ரியாளர் ஒருவரை பயன்படுத்தி இருப்பதும், உதவி பொறியாளர் இடமாற்றத்துக்கு மின்வாரிய அதிகாரிகளிடம் பேசியது அவர் தான் என்பதும் தெரியவந்தது.
கோடிகள் குவிப்பு :
இதையடுத்து சமீபத்தில் இடமாறுதல் கேட்டு சென்றவர்கள் யார், யார் என்ற பட்டியலை எடுத்து மின் வாரிய விஜிலென்ஸ் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மிமிக்ரி கலைஞரான சவரிமுத்துவை, நத்தம் விஸ்வநாதன் அமைச்சராக இருந்த போதே, அமைச்சர் போல் அதிகாரிகளிடம் பேசி, பலரையும் இடமாற்றம் செய்து, மின்வாரிய கடைநிலை ஊழியர்களாக உள்ள தொழிற்சங்க புள்ளிகள், கோடிகளை குவித்துள்ளதாக, மின்வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மிமிக்ரி கலைஞர் கைது:
சவரிமுத்துவை கைது செய்த போலீசார், இந்த மோசடி, மேட்டூர் அனல்மின் நிலையத்தில் மட்டும் நடந்ததா அல்லது மின்வாரியத்தின் வேறு அலுவலகங்களிலும் நடந்ததா என, ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary :
A Dindigul-based mimicry artist was arrested on Monday by Mettur police in Salem for mimicking the voice of Tamil Nadu electricity minister P Thangamani, to transfer an official from one department to another in a Thermal power unit.