கோவை வந்திருந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில்துறையினரைச் சந்தித்து உரையாடினார். அப்போது கோவையின் பிரபல அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் ஜிஎஸ்டி வரியில் உள்ள சட்ட சிக்கல் குறித்து நிர்மலா சீதாராமனிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தார்.அன்னபூர்ணா சீனிவாசன்
” இனிப்புக்கும், காரத்துக்கும் வேறு வேறு ஜிஎஸ்டி உள்ளது. பன்னுக்கு வரி இல்லை. ஆனால், அதில் க்ரீம் கலந்தால் 18 சதவிகிதம் ஜிஎஸ் டி ஆகிவிடுகிறது. இதனால் கம்ப்யூட்டரே திணறுகிறது.” என்று கூறியிருந்தார்.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதற்கு விளக்கமளித்த நிர்மலா சீதாராமன், “ஹோட்டல் உரிமையாளர் தங்களின் பிரச்னையை ஜனரஞ்சகமாக பேசியிருந்தார். அதில் தவறில்லை. அவர் தன்னுடைய ஸ்டைலில் பேசியிருக்கிறார். நிர்மலா சீதாராமன்
ஒவ்வொரு உணவுக்கும், எவ்வளவு வரி நிர்ணயிக்க வேண்டும் என்பதற்கு ஜிஎஸ்டி கவுன்சில் விரிவாக ஆய்வு மேற்கொண்டுள்ளது. அவர்களின் பரிந்துரையை ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். விமர்சனங்களைப் பற்றி கவலை இல்லை. “ என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் சீனிவாசன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சந்திப்பில் நிர்மலா சீதாராமன், வானதி சீனிவாசன் மற்றும் அன்னபூர்ணா சீனிவாசன் மட்டும் உள்ளனர். கோவை ஹோட்டல் உரிமையாளர், நிர்மலா சீதாராமன் சந்திப்பு
அப்போது சீனிவாசன், ” நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் இல்லை. தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்.” என்று எழுந்து நின்று கை கூப்புவது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது.
ஆனால் அந்த வீடியோவில் ஆடியோ சரியாக கேட்கவில்லை. இதுகுறித்து பாஜக தரப்பிலோ அல்லது அன்னபூர்ணா உணவகம் தரப்பிலோ அதிகாரபூர்வாக எந்த அறிவிப்பும் கொடுக்கவில்லை. அதனால் இதன் முழு விபரம் தெரியவில்லை.அன்னபூர்ணா
இதுகுறித்து உண்மைநிலை அறிய கோவை அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாகம் மற்றும் சீனிவாசன் ஆகியோரின் கருத்துகளை அறிய முயற்சி செய்தோம். இருப்பினும் பதில் கிடைக்கவில்லை. அவர்கள் தரப்பிலிருந்து பதில் வரும் பட்சத்தில் அதையும் வெளியிடுகிறோம்.
http://dlvr.it/TD91VD
Friday 13 September 2024
Home »
» நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு; கை கூப்பி மன்னிப்பு கேட்டாரா அன்னபூர்ணா உரிமையாளர் - நடந்தது என்ன?