பிரதமர் நரேந்திர மோடி, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சமீபத்தில் சிறப்பு நேர்காணல் அளித்திருக்கிறார். அதில், “தற்போது நடைபெற்றுவரும் மக்களவைத் தேர்தலில், தென் மாநிலங்களின் தேர்தல் முடிவுகளில் பா.ஜ.க மிகப்பெரிய ஆச்சர்யத்தைக் கொடுக்கப்போகிறது” என்று மோடி கூறியிருக்கிறர். மோடி
குறிப்பாக, “ஆந்திராவிலும், தெலங்கானாவிலும் மிகப்பெரிய வெற்றியை பா.ஜ.க பெறும். தெலங்கானாவில் க்ளீன் ஸ்வீப்..” என்றும் மோடி நம்பிக்கையாக கூறியிருக்கிறார்.
அதே நேர்காணலில், “இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே பா.ஜ.க செல்வாக்குடன் இருக்கிறதா?” என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, “கோவா, குஜராத், மகாராஷ்டிரா, அஸ்ஸாம், மேற்கு வங்கம், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் எல்லாம் இந்தி பேசும் மாநிலங்களா? நாடு முழுவதும் பா.ஜ.க இருக்கிறது. நாடு முழுவதும் பா.ஜ.க ‘ஹாட்ரிக்’ வெற்றியைப் பெறப்போகிறது. அமித் ஷா
இதை மோடி சொல்லவில்லை. நாட்டு மக்களே முடிவுசெய்துவிட்டார்கள். 400 இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெறும். பா.ஜ.க-வும், தேசிய ஜனநாயகக் கூட்டணியும் இதற்கு முந்தைய சாதனைகளை எல்லாம் முறியடிக்கும்” என்று மோடி பதில் சொல்லியிருக்கிறார்.
தென் மாநிலங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த மோடி, “தென் மாநிலங்களின் தேர்தல் முடிவுகளில் மிகப்பெரிய ஆச்சர்யத்தை பா.ஜக அளிக்கும். கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் வரலாற்று ரீதியிலான மாற்றங்களைக் காணப்போகிறீர்கள். பா.ஜ.க-வும், தேசிய ஜனநாயகக் கூட்டணியும் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தும். தெலங்கானாவில், ‘க்ளீன் ஸ்வீப்’ ” என்றார் மோடி.பிரதமர் மோடி
தென் மாநிலங்களில் மிகப்பெரிய வெற்றியை பா.ஜ.க பெறும் என்று சொன்ன பிரதமர் மோடி, அதற்கான அடிப்படைக் காரணங்கள் என்ன என்பதைக் குறிப்பிடவில்லை.
ஆனால், south surprise என்று பிரதமர் மோடி பயன்படுத்தியிருக்கும் சொல்லாடலைப் போல, ‘The best ever showing in southern states’ என்ற சொல்லாடை மத்திய உள்துறை அமைச்சர் பயன்படுத்தியிருக்கிறார். சொல்லாடல் வெவ்வேறாக இருந்தாலும் அர்த்தம் ஒன்றுதான். அதாவது, நடைபெறும் மக்களவைத் தேர்தலில் தென் மாநிலங்களில் பா.ஜ.க மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்பதுதான் அதன் அர்த்தம்.அமித் ஷா
கடந்த ஏப்ரல் மாதம் தனியார் தொலைக்காட்சி ஒன்று நேர்காணல் அளித்த அமித் ஷா, “தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய தென் இந்திய மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு பா.ஜ.க-வுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். இந்த மாநிலங்களில் வலுவான தேர்தல் முடிவுகளை எதிர்பார்க்கிறோம். முதன் முறையாக, பிரதமர் மோடியின் செல்வாக்கு தென் இந்தியாவில் அதிகரித்திருக்கிறது. எனவே, அவரது செல்வாக்கு வாக்குகளாகவும், சீட்டுகளாகவும் மாறும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.மக்களவைத் தேர்தல் முடிவுகளை எதிரொலிக்கிறதா பங்குச்சந்தை நிலவரம்?!
தற்போது பிரதமர் மோடி குறிப்பிட்டிருக்கும் ‘south will surprise’ என்ற சொல்லாடலை, கடந்த ஜனவரி மாதம் கர்நாடகா முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை பயன்படுத்தியிருக்கிறார். அதாவது, பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய பசவராஜ் பொம்மை, “நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது. நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராகப் பார்ப்பதற்கு ஒட்டுமொத்த நாடும் ஆசைப்படுகிறது. தென் இந்தியாவில் ஆச்சர்யம் தரக்கூடிய தேர்தல் முடிவுகள் வரப்போகின்றன. கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் அதிகபட்ச இடங்களை பா.ஜ.க கைப்பற்றும்” என்றிருக்கிறார். கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை
மேலும், “காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மோடிக்கு ஆதரவான அலை வீசுகிறது. கர்நாடகாவில் 25-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ.க வெற்றிபெறும்” என்றார் பசவராஜ் பொம்மை. தென் மாநிலங்களில் மொத்தம் 130 மக்களவைத் தொகுதிகள் இருக்கின்றன. 2019 மக்களவைத் தேர்தலில், நாடு முழுவதும் மொத்தம் 303 தொகுதிகளில் ஜெயித்த பா.ஜ.க., தென் மாநிலங்களில் வெறும் 29 தொகுதிகளிலேயே வெற்றிபெற்றது. அதிலும் கர்நாடகாவில் மட்டும் 25 தொகுதிகள் கிடைத்தது. கர்நாடகாவை தவிர்த்து 4 இடங்களில் தான் தென்னிந்தியாவில் பாஜக-வால் வெல்ல முடிந்தது.
400 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெறும் என்று பிரதமர் மோடி சொல்லும் கணக்குப்படி பார்த்தால், தென் மாநிலங்களில் 70 தொகுதிகளுக்கு மேலாவது ஜெயிக்க வேண்டும். மோடி சொல்வது சரியான கணிப்பு தானா, அல்லது தேர்தல் கால பேச்சா என்பதெல்லாம் ஜூன் 4-ல் தான் பதில் தெரியும்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
">
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88
">
https://tinyurl.com/crf99e88
/>
http://dlvr.it/T6wJgH