பாபர் மசூதி இடிப்பு வழக்கில், உச்ச நீதிமன்றம் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியது. அதன்படி, கடந்த நான்கு ஆண்டுகளாக அயோத்தியில் ராமர் கோயில் கட்டுப்பட்டு வந்தது. இத்தகைய சூழலில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் இந்த ஆண்டு (2024) தொடங்கியதும், முழுமையாக கட்டிமுடிக்கப்படாத நிலையிலும் ராமர் கோயிலுக்கு ஜனவரி 22-ல் பிரதமர் மோடி தலைமையில் பிராண பிரதிஷ்டை நடத்தப்பட்டது. அயோத்தி ராமர் கோயில் - மோடி
அப்போதும், இந்தியாவின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவரான திரௌபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என சர்ச்சை கிளம்பியது. இன்னொருபக்கம், காங்கிரஸ் உட்பட இந்தியா கூட்டணி கட்சிகளும் ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை அழைப்பைப் புறக்கணித்து நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அன்று ராமர் கோயில் நிகழ்ச்சிக்கு சென்றால் அவமானப்படுத்தப்படுவோம் எனப் பயந்ததாக சமீபத்தில் விளக்கமளித்திருந்தார். இன்னொருபக்கம், தேர்தலுக்காகவே கட்டிமுடிக்கப்படாத கோயிலுக்கு பா.ஜ.க பிராண பிரதிஷ்டை நடத்தியது என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
அதற்கேற்றவாறே, தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்களில் அயோத்தியில் நாங்கள்தான் ராமர் கோயிலைக் கொண்டுவந்தோம் என பா.ஜ.க தலைவர்கள் பிரசாரம் செய்துவருகின்றனர். பா.ஜ.க-வைச் சேர்ந்த அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஒருபடி மேலே சென்று, `கடந்த தேர்தலில் 300 இடங்களை வென்று அயோத்தியில் ராமர் கோயிலைக் கொண்டுவந்தோம். எனவே, இந்த முறை 400 இடங்களை வென்றால் மதுராவில் மசூதி இருக்கும் கிருஷ்ணர் ஜென்மபூமியில் கோயிலும், ஞானவாபியில் மசூதி இருக்கும் இடத்தில் விஸ்வநாதர் கோயிலும் எழுப்புவோம்' என மத ரீதியாகப் பிரசாரம் செய்தார்.மோடி
இந்த நிலையில், காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்குள் புல்டோசரைக் கொண்டுவருவார்கள் என்று மோடி கூறியிருக்கிறார்.
உத்தரப்பிரதேசத்தின் பாரபங்கியில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இதனைத் தெரிவித்த மோடி, ``சமாஜ்வாதியும், காங்கிரஸும் ஆட்சிக்கு வந்தால், ராம் லல்லா மீண்டும் கூடாரத்துக்குச் செல்வார். அவர்கள் ராமர் கோயிகோயிலுக்குள் புல்டோசரைக் கொண்டுவருவார்கள். ஆனால், எங்கு புல்டோசர் கொண்டுவர வேண்டும், எங்கு கொண்டுரக் கூடாது என்பதை யோகி ஆதித்யநாத்திடம் அவர்கள் டியூஷன் எடுக்க வேண்டும்" என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88தீவிரம் காட்டும் மோடி & கோ; கூட்டணி நம்பிக்கையில் `I.N.D.I.A’ - உச்சகட்டத்தில் உ.பி அரசியல் களம்
http://dlvr.it/T71FKr
Friday 17 May 2024
Home »
» `காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் வரும்!' - மோடி பகிரங்க குற்றச்சாட்டு