டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும், ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி-யுமான ஸ்வாதி மாலிவால், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில் அவரின் உதவியாளர் பிபவ் குமாரால் தாக்கப்பட்டதாக குற்றம் சாட்டியிருக்கிறார். இன்று காலை 10 மணியளவில், எம்.பி ஸ்வாதி மாலிவால் காவல்துறையை தொடர்புகொண்டு, ``முதல்வர் இல்லத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிப்பட்ட பி.ஏ-வால் தாக்கப்பட்டேன்" எனப் புகார் தெரிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, காவல்துறை டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் இல்லத்தை அடைந்தது. அப்போது, எம்.பி ஸ்வாதி மலிவால் முதல்வர் வீட்டில் இல்லை. இது தொடர்பாக காவல்துறை விசாரித்து வருகிறது.கபில் மிஸ்ரா
எம்.பி ஸ்வாதி மாலிவாலின் குற்றச்சாட்டை தொடர்ந்து, பா.ஜ.க தலைவர் கபில் மிஸ்ரா தன் எக்ஸ் பக்கத்தில்,`` எம்.பி. ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்டதற்கு ஆம் ஆத்மி கட்சி பதில் சொல்லியாக வேண்டும். கெஜ்ரிவாலின் பி.ஏ பிபவ், சுவாதி மாலிவாலை அடித்தாரா? முதல்வர் அலுவலகம் விளக்கம் அளிக்குமா? முதல்வர் வீட்டில் ராஜ்யசபா பெண் எம்.பி.யை தாக்கியதாக வெளியான செய்தி பொய்யானது என மாற இறைவன் அருள்புரிவானாக" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88டெல்லி வன்முறை: கபில் மிஸ்ரா மீதான குற்றச்சாட்டும் அரசியல் பின்னணியும்!
http://dlvr.it/T6p537
Monday, 13 May 2024
Home »
» ``கெஜ்ரிவால் வீட்டில் அவரின் பி.ஏ-வால் தாக்கப்பட்டேன்..!" - ஆம் ஆத்மி எம்.பி ஸ்வாதி மாலிவால் புகார்