பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம், அல்லோபதி மருத்துவத்துக்கு எதிராக ஆதாரமாற்ற தகவல்களுடன் தங்களின் ஆயுர்வேத தயாரிப்புகளுக்கு விளம்பரம் செய்தது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இதில், பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிறுவனத்தின் இயக்குநர் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தின் கடுமையான கண்டனங்களுக்குப் பிறகு நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்டனர்.பாபா ராம்தேவ்
அப்போதுகூட, `உங்களின் மன்னிப்பு வெறும் உதட்டிலிருந்து மட்டுமே வருகிறது', `நீங்கள் எதுவும் தெரியாத அப்பாவியல்ல', `எங்களுக்கு எதுவும் தெரியாது என நினைக்காதீர்கள்', `உங்களின் மன்னிப்பை ஏற்க முடியாது' என அடுத்தடுத்த விசாரணைகளின்போது உச்ச நீதிமன்றம் கூறியது. பின்னர், நாளிதழ்களில் பதஞ்சலி நிறுவனத்தின் சார்பாக பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்டு செய்தி வெளியிட்டார். இன்னொருபக்கம், `மத்திய அரசு கண்ணை மூடிக்கொண்டிருக்கிறது', `இது போன்ற விளம்பரங்களுக்கு எதிராக விளம்பர கவுன்சில் என்ன செய்தது' என அரசையும் உச்ச நீதிமன்றம் கேள்விகேட்டது.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹிமா கோஹ்லி, அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வில் பதஞ்சலி விளம்பரம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பதஞ்சலி நிறுவனம் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் பல்பீர் சிங், பதஞ்சலி விளம்பரங்கள் இன்னும் ஒளிபரப்பப்படும் டிவி சேனல்களுக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும், கேள்விக்குட்படுத்தப்பட்ட பொருள்களின் விற்பனையை நிறுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.உச்ச நீதிமன்றம்
அதைத் தொடர்ந்து, பதஞ்சலி நிறுவன தயாரிப்புகளின் இருப்பு குறித்து பிரமாணப் பாத்திரம் தாக்கல்செய்யுமாறு உத்தரவிட்ட நீதிமன்ற அமர்வு, ``பாபா ராம்தேவுக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது. அதை சரியான வழியில் பயன்படுத்துங்கள்" என்று கூறியது. அதையடுத்து சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, `பாபா ராம்தேவ் யோகாவுக்கு நிறைய செய்திருக்கிறார்' என்று கூறியபோது, ``யோகாவுக்கு அவர் என்ன செய்தாரோ அது நல்லதுதான். ஆனால், பதஞ்சலி தயாரிப்புகள் என்பது அதிலிருந்து வேறு விஷயம்" என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. பின்னர், அடுத்த விசாரணை ஜூலை 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.Patanjali: பாபா ராம்தேவின் தவறான விளம்பரம்... மத்திய அரசை சாரமாரியாகக் கேள்வி கேட்ட உச்ச நீதிமன்றம்!
http://dlvr.it/T6sZvG
Tuesday, 14 May 2024
Home »
» `உங்கள் செல்வாக்கை சரியான வழியில் பயன்படுத்துங்கள்!' - பாபா ராம்தேவுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை