ஐதராபாத் : நவம்பர் மாதம் முதல் தமிழகத்திற்கு திறக்கப்பட்டு வந்த கிருஷ்ணா நதி நீர் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டு வந்த கிருஷ்ணா நதி நீர் நவம்பர் 7 ம் தேதி நிறுத்தப்பட்டது. இதனையடுத்து தமிழக அரசு கேட்டுக் கொண்டதன்படி நவம்பர் 9 ம் தேதி முதல் 2 வது முறையாக தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று (டிசம்பர் 15) காலை முதல் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டு வந்த கிருஷ்ணா நதிநீர் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.
English summary:
Hyderabad: In November, the state opened the Krishna river water suddenly turned off.
Karnataka,Andhra Pradesh Krishna river water from the dam to Tamil Nadu had been opened and terminated on November 7.





