தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மேற்படிப்புக்காக வெளிநாடு சென்றிருக்கிறார். இதையடுத்து ஹெச்.ராஜா தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்ட அறிவிப்பில், "தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இங்கிலாந்தில் 3 மாதங்களுக்கு நடைபெறும் கல்வி பயிற்சியில் கலந்து கொள்கிறார். எனவே, பா.ஜ.க தேசியத்தலைவர் ஜெ.பி.நட்டா வழிகாட்டுதல்படி, மாநில தலைவர் இல்லாதபட்சத்தில் கட்சியின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க, தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படுகிறது.தமிழிசை, அண்ணாமலை
இதில், மாநில துணை தலைவர்கள் எம்.சக்கரவர்த்தி, பி.கனகசபாபதி, பொது செயலாளர்கள் எம்.முருகானந்தம், பேராசிரியர் ராமசீனிவாசன், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் இடம் பெறுவர். இந்த ஒருங்கிணைப்புக் குழு, மாநில மைய குழுவுடன் கலந்துரையாடி, கட்சி நடவடிக்கைகள் குறித்து எந்த முடிவையும் எடுக்கும். ஒருங்கிணைப்புக் குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் ஒன்று அல்லது இரண்டு மண்டலங்களின் செயல்பாடுகளைக் கவனிப்பார்கள். இது மாநிலத் தலைவர் மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரால் முடிவு செய்யப்படும்" என கூறப்பட்டுள்ளது.
இந்த சூழலில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "அண்ணாமலையை எப்படி அனுப்புவது என பா.ஜ.க தலைமை தவித்துக்கொண்டு இருந்திருக்கும் போல. அவர் லண்டன் சென்ற பிறகு தமிழ்நாடு சற்று அமைதியாக இருப்பது போல தெரிகிறது. தற்போது ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள ஹெச்.ராஜா நீண்ட நெடிய அரசியல் அனுபவம் வாய்ந்தவர். அரசியல் பண்பாடு, நாகரீகத்தை முழுமையாக உள்வாங்கியவர். இதன்மூலம் பா.ஜ.க தொண்டர்களுக்கு சுதந்திரம் கிடைத்திருக்கும் என்று சொல்கிறார்கள்" என தெரிவித்துள்ளார்.ஆர்.பி.உதயகுமார்
இதையடுத்து அண்ணாமலை வெளிநாடு சென்றது பா.ஜ.க தொண்டர்களை ஹாப்பியக்கியிருக்கிறதா என்கிற கேள்வியுடன் கமலாலய சீனியர்கள் சிலரிடம் பேசினோம், "அண்ணாமலை மேல்படிப்புக்காக லண்டன் சென்றிருக்கிறார். முன்னதாக இந்த காலக்கட்டத்தில் பொறுப்பு தலைவரை அமைக்க டெல்லி ஆலோசனை செய்தது. அந்த பதவியைப் பிடிக்கத் தமிழிசை உள்ளிட்ட சீனியர்கள் தீவிரமாக முயன்றார்கள். இதில், அண்ணாமலைக்கு துளியும் விருப்பம் இல்லை. பல்வேறு முட்டுக்கட்டைகளை போட்டுவந்தார். இந்தச்சூழலில்தான் பா.ஜ.க-வின் உறுப்பினர் சேர்க்கை குறுக்கிட்டது. கூடவே ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட், ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தல் வரவுள்ளது.`தலைவர்களுக்கு மரியாதை': அண்ணாமலை vs தமிழிசை... மீண்டும் மோதலா?!
இதற்கான பணிகளில் அகில இந்தியத் தலைமை தீவிரம் காட்டியது. இதனால் பொறுப்பு தலைவரை நியமிப்பதில் டெல்லி ஆர்வம் காட்டவில்லை. இதில் அண்ணாமலை தரப்பு மகிழ்ச்சி. மற்ற சீனியர் தலைவர்கள் கடும் அப்செட். இந்த சூழலில்தான் மீண்டும் தமிழிசை vs அண்ணாமலை எனும் நிலை ஏற்பட்டது. கடந்த 25-ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை, "மேடையில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வேண்டும் எனச் சொல்லக்கூடிய தலைவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். 2019 தேர்தலில் தோற்கப்போகும் மோடிக்காக நான் ஏன் வாரணாசிக்கு வர வேண்டும் என்றார். அன்றிலிருந்து மானமுள்ள அண்ணாமலை கூட்டணிக் கட்சித் தலைவராக எடப்பாடியைப் பார்த்தது இல்லை" என தாக்கி பேசியிருந்தார். அதே கூட்டத்தில்தான் எடப்பாடியைத் தற்குறி எனக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.மோடி, அமித்ஷா
இதையடுத்து அ.தி.மு.க தலைவர்கள் பலரும் தமிழிசையைத் தொடர்பு கொண்டு தங்களது வருத்தத்தைச் சொல்லினார்கள். ஏற்கெனவே கூட்டணி அமையாதது, பொறுப்பு தலைவர் பதவி கிடைக்காதது என பெரும் ஆதங்கத்தில் இருந்த தமிழிசைக்கு இது மேலும் அதிருப்தியை கொடுத்தது. இதையடுத்துதான், "பொது மேடையில் பேசுவதில் அவரவர்களுக்கென ஒரு பாணி இருக்கும். அண்ணாமலை பேசியது அவரது பாணி. ஆனால், என்னைப் பொறுத்தவரைத் தலைவர்களுக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அதைக் கொடுக்க வேண்டும். அ.தி.மு.க-வுடன் பா.ஜ.க இனி எப்போதும் கூட்டணி கிடையாது என அண்ணாமலை கூறியிருக்கிறார். கூட்டணி குறித்து மேடையில் மட்டுமே முடிவு செய்வது என்பது எனது அரசியல் அனுபவத்தில் சரியா என்பது என் கேள்வி?" எனக் பேசியிருந்தார்.
இதற்கு அண்ணாமலை, "உட்கட்சியாக இருந்தாலும் சரி, வெளிக்கட்சியாக இருந்தாலும் சரி. எனது பாணி மாறாது. கை, கால் பிடித்து பதவிக்கு வந்தேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இன்று பேசக்கூடிய தலைவர்கள் அன்று எங்குப் போனார்கள்" என மீண்டும் தமிழிசையை விமர்சனம் செய்திருந்தார். பிறகு சமூக வலைத்தளங்களில் அண்ணாமலையின் ஆதரவு ஐடி-விங் நிர்வாகிகள் என கூறப்படும் சிலர், 'கட்சியிலிருந்து ஓய்வு பெற்றுவிடுங்கள். அ.தி.மு.க-வுக்கு செல்லுங்கள். அண்ணாமலைக்கு அறிவுரை சொல்லக்கூடாது" என்றெல்லாம் தமிழிசையைக் கடுமையாக மீண்டும் விமர்சனம் செய்யத் தொடங்கினார்கள்.கமலாலயம்
இதில் அப்செட்டான தமிழிசை டெல்லிக்கு மீண்டும் புகார் அளித்தார். கூடவே சீனியர் தலைவர்கள் பலரும் அண்ணாமலை மீது மீண்டும் புகார் தெரிவித்தார்கள். இதையடுத்து கட்சியில் நீடிக்கும் குழப்பம், புதிய நிர்வாகிகள் சேர்க்கை போன்ற விஷயங்கள் இருப்பதால் ஒருங்கிணைப்பு குழுவை அமைக்கும் முடிவுக்கு டெல்லி வந்தது. அதன் அடிப்படையில்தான் ஹெச்.ராசா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் நிர்வாகிகளை தேர்வு செய்ததில் அண்ணாமலைதான் முக்கிய பங்கு வகித்திருக்கிறது. அந்த குழுவில் இருப்பவர்களே ஒருவர் மீது ஒருவர் அதிருப்தி கொண்டவர்கள். இந்த விஷயம் டெல்லிக்கு தெரியும்.
எனவேதான் மைய குழுவுடன் கலந்துரையாடி கட்சி நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க வேண்டும் என 'செக்' வைத்திருக்கிறது, டெல்லி. என்னதான் பொதுவெளியில் ஹெச்.ராசா பேட்டி கொடுத்தாலும், முக்கிய முடிவுகளை அவரால் தனியாக எடுக்க முடியாது. அண்ணாமலையின் டீம் என்பதால் மையக்குழுவில் நிர்வாகிகள் முட்டுக்கட்டை போடுவார்கள். அதேநேரத்தில் இந்த குழுவில் பெண்கள், தலித்துக்கள் இல்லை என்கிற சர்ச்சையும் வெடித்திருக்கிறது. மேலும் தமிழிசை, வானதி, நயினார் போன்றவர்கள் பொறுப்பு தலைவர் பதவி கிடைக்கவில்லை என்பதில் அப்செட்டாக இருக்கிறார்கள். ஆகவே இந்த ஒருங்கிணைப்பு குழுவில் இருக்கும் தலைவர்களின் ஆதரவாளர்கள் மட்டுமே ஹாப்பியாக இருக்கிறார்கள். மற்றவர்கள் அப்செட்டாகவே இருக்கிறார்கள்" என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88`தலைவர்களுக்கு மரியாதை': அண்ணாமலை vs தமிழிசை... மீண்டும் மோதலா?!
http://dlvr.it/TCjJfn
Monday 2 September 2024
Home »
» `அண்ணாமலை லண்டன் பயணம்... ஹெச்.ராஜா அண்ட் டீம் நியமனம்' - தமிழக பாஜக ஹேப்பியா?!