சென்னை : ஜெயலலிதா அறிவித்த சலுகை காரணமாக பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக சென்னையில் தேர்வை ஆய்வு செய்தபின் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
அமைச்சர் ஆய்வு:
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நேற்று தொடங்கின. இந்த தேர்வை இரு மாநிலங்களிலும் 2 ஆயிரத்து 477 மையங்களில் 9 லட்சத்து 33 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். சென்னை எழும்பூர் மாகாண மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதன் பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
65 ஆயிரம் பேர்:...
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாநிலம் முழுவதும் இன்று தொடங்கியிருக்கிறது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன், தமிழ், சமஸ்கிருதம், பிரஞ்சு, ஜெர்மன், இந்தி உள்ளிட்ட பத்து மொழிகளில் இந்த தேர்வு நடைபெறுகிறது. கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வை 8 லட்சத்து 35 ஆயிரம் மாணவர்கள் எழுதினர், இந்த ஆண்டு 9 லட்சத்து 33 ஆயிரம் பேர் எழுதுகின்றனர், அதாவது இந்த ஆண்டு 65 ஆயிரம் பேர் கூடுதலாக தேர்வு எழுதுகின்றனர்,
மாணவர்களுக்கு சலுகை:
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு 2013-ம் ஆண்டு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகையாக முதல்வராக இருந்த ஜெயலலிதா அறிவித்தார். அதன் காரணமாக பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த ஆண்டு மட்டும் 65 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக தேர்வு எழுதுகிறார்கள் என்று தெரிவித்தார்.
ஆய்வக உதவியாளர்கள் நியமனம் குறித்து பத்து நாட்களில் முடிவு அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பின் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பதில் வருமாறு:-
சிறுபான்மை பள்ளிகளில் தமிழ்த்தேர்வு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக கூறப்படுகிறதே என்று கேட்கப்பட்டதற்கு, எல்லா பள்ளிகளிலும் தமிழாசிரியர்கள் இருக்கிறார்கள். தமிழாசிரியர்கள் இல்லாத பள்ளிகளுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தமிழாசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கான இடங்கள் மட்டுமே அதாவது 1500 காலியிடங்களே உள்ளன.
ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் நியமன உத்தரவு வரவில்லையே என்று நிரூபர்கள் கேட்தற்கு, இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. ஒன்றரை ஆண்டுகளாக விசாரணையில் இருக்கிறது. நீதிமன்றத்தீர்ப்புக்கு பிறகு முடிவெடுக்கப்படும், பத்துநாட்களில் இது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (நேற்று) கடைசி என்று அறிவிக்கப்பட்டுள்ளதற்கு, தமிழ்நாட்டு மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராக இருக்கிறார்கள் என்று அவர் பதிலளித்தார்.
English summary:
Chennai: Jayalalithaa's offer due to the number of students increases every year plus 2 exams in the selection of the Madras study K.A.Sengottaiyan perfectly minister said.