ஸ்ரீநகர்: காஷ்மீரில் அமைதி திரும்பியுள்ள நிலையில், காஷ்மீரின் அழகை ரசிக்க வாருங்கள் என சுற்றுலா பயணிகளுக்கு அம்மாநில முதல்வர் மெகபூபா அழைப்பு விடுத்துள்ளார். காஷ்மீரில் பிரிவினைவாதிகளின் தூண்டுதலால் அடிக்கடி வன்முறை நிகழ்ந்து வருகிறது. பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகளும் காஷ்மீருக்குள் ஊடுருவி நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஹிஸ்புல் முஜாகிதின் அமைப்பின் கமாண்டர் புர்கான்வானி கடந்த ஜூலை மாதம் ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக காஷ்மீரில் அசாதாரண சூழல் நிலவி வந்தது. வன்முறை, கடையடைப்பு, போராட்டம் போன்வற்றால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்தது.
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு பின்னர், பிரிவினையை ஊக்குவிப்போரின் கையில் போதிய பணம் இல்லாததால் அங்கு வன்முறை சம்பவங்கள் குறைந்து விட்டன. தற்போது காஷ்மீரில் அமைதியான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், அழகுமிகுந்த காஷ்மீரை ரசிக்க வாருங்கள் என உள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அம்மாநில முதல்வர் மெகபூபா அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘காஷ்மீரில் அமைதி திரும்பியுள்ளது. தற்போது இதமான காலநிலை நிலவி வருகிறது. குல்மார்க் பகுதியில் ஜனவரியில் நடைபெறும் பனித்திருவிழாவில் கலந்துகொள்ள வருமாறு ஒவ்வொருவரையும் அழைக்கிறேன். சுற்றுலா பயணிகளுக்கு காஷ்மீர் போன்று பாதுகாப்பான இடம் வேறு எங்கும் கிடையாது. குறிப்பாக, பெண்களுக்கு சிறந்த பாதுகாப்பு அளிக்கப்படும். பெண் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வரவேண்டும் என விரும்புகிறேன்’’ என்றார்.
English summary:
Srinagar: Kashmir in the wake of the return of peace, for the tourists to come and enjoy the beauty of Kashmir Chief Minister called for mehapupa.