மக்கள் நீதிமைய கட்சி தலைவர் கமல்ஹாசன் டிசம்பர் 13 ஆம் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். 2021 ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கு தற்போதே தயாராகி வருகின்றனர். அதிமுக - திமுக இடையே இப்போதே வார்த்தை போர் மூண்டுகொண்டிருக்கிறது. ரஜினியும் வரும் ஜனவரி மாதம் கட்சித் தொடங்குதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் டிசம்பர் 13 ஆம் தேதி முதல் மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். முதற் கட்டமாக 'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற பெயரில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
http://dlvr.it/RnQMm5
Friday 11 December 2020
Home »
» 'சீரமைப்போம் தமிழகத்தை' - டிச.13 தேதி பிரசாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்