விருதுநகர் அருகே பஞ்சாலை ஊழியர்களை ஏற்றி வந்த பேருந்து நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே பனையூர், திருச்சுழி சுற்றுவட்டாரப்பகுதியில் இருந்து தனியார் பஞ்சாலைக்கு மினி பேருந்து மூலமாக ஊழியர்கள் ஏற்றி செல்லப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று 22 ஊழியர்களை ஏற்றிக்கொண்டு மினி பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது பனையூர் திருச்சுழிக்கு இடையே வந்துகொண்டிருந்தபோது நிலைதடுமாறு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயமடைந்தவர்களை மீட்டு திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் உயிரிழந்தவர்கள் பூசையா, ஸ்ரீகாந்த் ஆகியோர் என்பது தெரியவந்தது.
http://dlvr.it/RpPvm7
Sunday, 27 December 2020
Home »
» விருதுநகர்: பஞ்சாலை ஊழியர்களுடன் வந்த தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து-இருவர் உயிரிழப்பு
விருதுநகர்: பஞ்சாலை ஊழியர்களுடன் வந்த தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து-இருவர் உயிரிழப்பு
Related Posts:
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!