மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் முடிவில் ஸ்டாலின் ஒரு போர்க்குரலை அறிவிக்கவுள்ளார் என துரைமுருகன் பேசியுள்ளார் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் திமுகவின் ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதில் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அது, மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள இருக்கும் தேர்தல் பரப்புரை குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. "ஸ்டாலின்தான் வாராரு விடியல் தரப்போறாரு" என்ற பெயரில் அந்தப் பரப்புரைப் பயணம் இருக்கும் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கூட்டத்தில் பேசிய துரைமுருகன், ''கூட்டத்தின் முடிவில் ஸ்டாலின் ஒரு போர்க்குரலை அறிவிக்கவுள்ளார்'' என்று தெரிவித்தார். இதனையடுத்து ஸ்டாலினின் அறிவிப்பு என்னவென்பது குறித்து எதிர்பார்ப்பு எகிறியுள்ளது
http://dlvr.it/Rp1XGP
Sunday 20 December 2020
Home »
» ''ஒரு போர்க்குரலை அறிவிக்கவுள்ளார் ஸ்டாலின்'' - துரைமுருகன்