சிலம்பரசன் நடித்துள்ள 'ஈஸ்வரன்' திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிச் செல்கிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது. சுசீந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படத்தை வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் மாஸ்டர் திரைப்படத்தை ஆயிரத்துக்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஈஸ்வரன் படத்துக்கு 100 திரையரங்குகள் மட்டுமே கிடைக்கும் சூழல் ஏற்படும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் கூறுகின்றனர். இதனால் ஈஸ்வரன் படத்தின் வெளியீட்டை தள்ளிவைக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில் சிலம்பரசனின் பிறந்த நாளை முன்னிட்டு ஜனவரி இறுதியில் வெளியிட முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
http://dlvr.it/RnpQj8
Thursday 17 December 2020
Home »
» 'மாஸ்டர்' படத்தால் தள்ளிப்போகும் 'ஈஸ்வரன்' ரிலீஸ்?