ஜனவரி முதல் வாரத்தில் இருந்து மு.க.ஸ்டாலின் நேரடி தேர்தல் பரப்புரையில் ஈடுபடவுள்ளார் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் திமுகவின் ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதில் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக கூறப்பட்டது. கூட்டத்தில் பேசிய துரைமுருகன், ''கூட்டத்தின் முடிவில் ஸ்டாலின் ஒரு போர்க்குரலை அறிவிக்கவுள்ளார்'' என்று தெரிவித்தார். மேலும்,ஜனவரி முதல் வாரத்தில் இருந்து ஸ்டாலின் நேரடி தேர்தல் பரப்புரையில் ஈடுபடவுள்ளார் . 16ஆயிரம் கிராமசபைக் கூட்டங்களையும் ஸ்டாலின் நடத்த விரும்புகிறார் என பேசினார். 'அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்ற பெயரில் பரப்புரை நடைபெறும் என்றும், அதே பெயரில் கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்றும் திமுக குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்தக் கூட்டத்தின் போது 'அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்ற வீடியோவும் வெளியிடப்பட்டது.
http://dlvr.it/Rp1XKc
Sunday 20 December 2020
Home »
» நேரடி பரப்புரை.. கிராம சபை கூட்டங்கள்... பரப்புரை அறிவிப்புகளை வெளியிட்ட திமுக