டெலிட் ஆப்ஷனை நீக்கியுள்ள பேஸ்புக், அதற்கு பதிலாக ’Move to Trash’ என்ற ஆப்ஷனை கொண்டு வந்துள்ளது. பயனர்களுக்கு புதிது புதிதாக அடிக்கடி அப்டேட் கொண்டு வருகிறது பேஸ்புக். சில அப்டேட்கள் வரவேற்பை பெற்றாலும், சில அப்டேட்களை பயனர்களுக்கு பிடிக்காதவையாகவே உள்ளன. ஆனாலும் பயனர்களை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் பாதுகாப்பு அம்சங்களையும் கணக்கில்கொண்டு அப்டேட் கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் புதிய அப்டேட்டாக டெலிட் ஆப்ஷனை நீக்கியுள்ளது பேஸ்புக். அதற்கு பதிலாக ’Move to Trash’ என்ற ஆப்ஷனை கொண்டு வந்துள்ளது. பேஸ்புக்கில் நாம் பதிவிட்ட போஸ்டை டெலிட் செய்யும் ஆப்ஷன் இருக்கும். ஆனால் தற்போது அதில் ஒரு மாற்றத்தை கொண்டு வந்துள்ளது பேஸ்புக். டெலிட்க்கு பதிலாக 'Move to Trash' என்ற ஆப்ஷனை கொண்டு வந்துள்ளது. உங்கள் பேஸ்புக் செயலியை அப்டேட் செய்தால் இந்த புதிய அப்டேட் கிடைக்கிறது. மேலும், 'Trash'ல் கொண்டு செல்லப்படும் போஸ்டுகள் 30நாட்களுக்கு பிறகு டெலிட் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாகவே நாம் குறிப்பிட்ட போஸ்டை டெலிட் செய்ய வேண்டுமென்றால்,' Move to Trash'கொடுத்த பிறகு 'Settings' ஆப்ஷன் சென்று, 'Activity Log'ல் இருக்கும் குறிப்பிட்ட போஸ்டை டெலிட் செய்யலாம் என பேஸ்புக் தெரிவித்துள்ளது. இந்த ஆப்ஷன் கடினமான ஒன்று என பயனர்கள் தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில் தவறுதலாக டெலிட் ஆனாலும் நம் பதிவை மீட்க முடியும் என்பதால் இது பாதுகாப்பான ஒன்று எனவும் ஒருதரப்பினர் கருத்து பதிவிட்டுள்ளனர்.
http://dlvr.it/RnyvYQ
Saturday 19 December 2020
Home »
» டெலிட் ஆப்ஷனை நீக்கிய பேஸ்புக்: இனி டெலிட் செய்ய என்ன செய்யணும்?