பெங்களூருவை சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர், 80 லட்ச ரூபாய் மதிப்பிலான நிலத்தை ஆஞ்சநேயர் கோயிலுக்கு தானமாக கொடுத்துள்ளார். பெங்களூரு கடுகோடி பகுதியை சேர்ந்தவர் 65 வயதான HMG பாஷா. சொந்தமாக தொழில் செய்து வருகிறார். அவருக்கு பெங்களூருவின் புறநகரை ஒட்டிய ஊரக பகுதியான வழக்கேற்புரா கிராமத்தில் மூன்று ஏக்கர் பரப்பளவில் சொந்தமாக நிலம் உள்ளது. அந்த நிலத்தை ஒட்டியபடி ஆஞ்சநேயர் கோயில் ஒன்றும் உள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் அந்த கோயிலை புனரமைக்கும் பணியை உள்ளூர் மக்கள் தொடங்கியுள்ளனர். அதை கவனித்த பாஷா, தனது நிலத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை கோயிலுக்கு தானமாக கொடுக்க முன் வந்துள்ளார். அதன்படி சுமார் 80 லட்ச ரூபாய் மதிப்பிலான நிலத்தை அவர் தானமாக கொடுக்க உள்ளார். “அந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோயிலை சுற்றி வலம் வர மிகவும் சிரமப்பட்டனர். அதற்கு காரணம் போதுமான இடம் இல்லாமல் சிரமப்பட்டதை கவனித்தேன். அதனால் இந்த முடிவை எடுத்துள்ளேன்” என்கிறார் அவர். இதனை அறிந்த நெட்டிசன்கள் அவரது செயலை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
http://dlvr.it/RnJBzv
Wednesday 9 December 2020
Home »
» ஆஞ்சநேயர் கோயிலுக்கு ரூ.80 லட்ச மதிப்பில் நிலம் தானம்: இஸ்லாமியருக்கு குவியும் பாராட்டு!