டெல்லியின் சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள், “போராட்டக்குழுவுக்கும் அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் முடிவில்லாமல் தொடர்ந்தால், எல்லைகளிலேயே தங்கி போராட்டத்தின் வேகத்தை விரைவுப்படுத்துவோம்” என்று தெரிவித்துள்ளனர். மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதைத் தவிர வேறு எதையும் ஏற்க மாட்டோம் என்று விவசாயிகள் போராட்டக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர். “நாங்கள் எல்லைகளிலேயே போராட்டத்தை தொடர வேண்டுமானால், உட்கார்ந்து சாப்பிட்டுகொண்டு மட்டும் இருக்கமாட்டோம். இங்கு இருந்துகொண்டே டெல்லிக்குள் அணிதிரட்டவும், ஆர்ப்பாட்டங்களைத் திட்டமிடவும், அணிவகுப்பு நடத்தவும், ஃபேஸ்புக் -ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோம். இறுதித் திட்டமாக டெல்லியில் நுழைவதையும், வெளியேறுவதையும் முற்றிலுமாக மூடுவோம்” என்று பதிந்தாவைச் சேர்ந்த விவசாயி ரஞ்சீத் சிங் கூறினார். சண்டிகரைச் சேர்ந்த குர்தீப் சிங் பேசும்போது, “எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், உண்ணாவிரதம் போன்ற எதிர்பாராத எதிர்வினைகள் ஏற்படப்போகிறது” என தெரிவித்தார். சண்டிகரைச் சேர்ந்த ஹர்தீப் சிங் லிடர் என்ற 25 வயது விவசாயி, "அரசாங்கம் எழுத்துபூர்வமாக எந்த உறுதிமொழியும் கொடுக்கவில்லை என்பதால் அவர்களை நம்பமாட்டோம்" என்று தெரிவித்தார். பாட்டியாலாவைச் சேர்ந்த பேயந்த் சிங், ”எங்களது குடும்பங்கள் போராட்டத்திற்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது. உண்மையில், எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் திரும்பிச் சென்றால் அது கிராம மக்களுக்கு செய்யும் துரோகம்" என்றார். மற்றொரு குழுவில், "நாங்கள் எங்கள் தலைவர்களுடன் வந்துள்ளோம், எங்களைப் பொறுத்தவரை, அவர்களின் வார்த்தை இறுதியானது. அவர்கள் எங்களை வெளியேறச் சொன்னால், நாங்கள் உடனே கிளம்புவோம். அவர்கள் எங்களை தங்கச் சொன்னால், நாங்கள் இரண்டு ஆண்டுகள் கூட தங்குவோம்” என்று ஜலந்தரைச் சேர்ந்த இக்பால் சிங் கூறினார். செய்தி ஆதாரம்: தி இந்து
http://dlvr.it/Rn38Pq
Saturday 5 December 2020
Home »
» "எங்கள் போராட்டத்தை சமூக வலைதளங்களில் பலப்படுத்துவோம்!" - டெல்லி விவசாயிகள் சூளுரை