பொங்கல் பரிசை உயர்த்துவது ஏன் என்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், இன்று எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி பிரச்சாரத்தை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய முதல்வர், பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் வழங்குவதாக அறிவித்தார். இதனை விமர்சனம் செய்த எதிகட்சித்தலைவர் ஸ்டாலின் தேர்தல் நெருங்கும் நேரத்தில் சுய நலத்துக்காக முதல்வர் பழனிசாமி பொங்கல் பரிசு அறிவித்துள்ளாரா? என்று கேள்வி எழுப்பினார். இந்நிலையில் இந்த விமர்சனத்திற்கு தற்போது முதல்வர் எடப்பாடி பதில் அளித்துள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் இது குறித்து அவர் கூறும் போது, “ கொரோனா, புயல் என மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதால் பொங்கல் பரிசை உயர்த்தி வழங்குகிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுப்பது தவறா? மக்கள் குறிப்பறிந்து சூழலுக்கேற்ப வழங்குவதை சுயநலம் என சொல்வது நியாமில்லை. நடைமுறைப்படுத்த முடியாத கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து திமுக ஏமாற்றுகிறது.” என பேசினார்.
http://dlvr.it/Rp0VG9
Sunday 20 December 2020
Home »
» பொங்கல் பரிசுத் தொகையை அதிகரித்தது ஏன்? - முதல்வர் பழனிசாமி விளக்கம்