ஆஸ்திரேலிய பேட்ஸ்மேனான டேவிட் வார்னர் தமிழர் கெட்டப்பில் இருக்கும் ஒரு புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான டேவிட் வார்னர் ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கும் கேப்டனாக இருக்கிறார். அவர் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பவர். இவர் ஏற்கெனவே தெலங்கு பாடலான புட்டமொம்மா மற்றும் பாகுபலி திரைப்படத்தின் காட்சியை வைத்து வீடியோவை வெளியிட்டு அசத்தினார். இந்தியாவுடனான ஒருநாள் தொடரில் காயமடைந்ததால், இப்போது நடைபெற்று வரும் டி20 தொடரில் வார்னர் விளையாடவில்லை. இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் தமிழர் கெட்டப்பில் வார்னர் இருப்பதுபோல வரையப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். டிக்டாக்கில் ஒருவர் "வணக்கம்டா மாப்ள தேனியில் இருந்து" என ஒருவர் பேசுவார். அவரைப்போல இருக்கும் புகைப்படத்தைதான் வார்னர் பகிர்ந்துள்ளார். அவரது புகைப்படத்துக்கு கமெண்ட் செய்த ரசிகர் ஒருவர் ’என்றும் இந்தியன்’ என பதிவிட்டார். அதற்கு ரிப்ளை செய்த வார்னர், ’என்னுடைய இரண்டாவது வீடு இந்தியா’ என பாசமாக பதிவிட்டுள்ளார்
http://dlvr.it/Rn4lFQ
Sunday 6 December 2020
Home »
» ’’என்னுடைய இரண்டாவது வீடு இந்தியா’’ - ’வணக்கம்டா மாப்ள’ கெட்டப்பில் பதிவிட்ட வார்னர்