வரும் 2021 புத்தாண்டை புதுச்சேரி கடற்கரை மற்றும் விடுதிகளில் மக்கள் கொண்டாட அனுமதி அளிப்பதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். தனியார் விடுதிகளில் 200 பேர் வரை புத்தாண்டு கொண்டாடலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மாநில அரசு தடை விதித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வெளியிட்டுள்ளார். தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் சில மாநிலங்களிலும் கொரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/Rp8LDY
Tuesday 22 December 2020
Home »
» “புதுச்சேரி கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட அனுமதி” - முதல்வர் நாராயணசாமி