தொடர்மழை காரணமாக ஆகஸ்ட் மாதம், 6-ம் தேதி இரவு 11:30 மணிக்கு நிலச்சரிவில் சிக்கியது மூணாறு ராஜமலை தேயிலைத் தோட்டம்!
பெரிய பெரிய பாறைகள் வந்து விழுந்ததில் வீடுகள் நொறுங்கின. இந்தச் சம்பவத்தில், 25 வீடுகளில் வசித்த 83 பேர் சிக்கினர்!
தொடர் மழையையும் பொருட்படுத்தாமல் இயந்திரங்களின் உதவியுடன் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்றது!
இறந்தவர்களின் உடல்களை மீட்க டிராக்டரில் செல்லும் கேரள மாநகராட்சி ஊழியர்கள்!
மீட்புப் பணியில் பேரிடர் மேலாண்மைத்துறையினருடன் இணைந்து அந்தப் பகுதியிலுள்ள தேயிலைத் தோட்டப் பணியாளர்களும் ஈடுபட்டனர்!
நிலச்சரிவு நடந்த இடத்தில் பல வீடுகள் இருந்ததற்கு சாட்சியாக , ஒரே ஒரு வீடு மட்டும் மீதமிருக்கிறது!
இந்த நிலச்சரிவில் பலியான 71 பேரில் ஒருவர் மட்டும் மருத்துவமனையில் உயிரிழந்தார். மற்றவர்கள் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர்!
தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மீட்புக் குழுவினரில் ஒருவர், என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நிற்கும் காட்சி!
20 நாள்களுக்கு மேல் நடைபெற்ற மீட்புப் பணியில், நிலச்சரிவில் மண்ணில் புதைந்த உடல்களை இயந்திரம் மூலம் குழி தோண்டித் தேடும் மீட்புப் படையினர்!
கடும் பனியிலும் மழையிலும் அருகில் இருப்பவர்கள்கூட தெரியாமலிருக்கும் நிலையிலும் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்றது!
83 தொழிலாளர்கள் வாழ்ந்த இடம், மண்ணும் பாறையுமாக தரைமட்டமாகக் கிடக்கிறது!
http://dlvr.it/RpgdJp
Thursday 31 December 2020
Home »
» 71 உயிர்களை பலிகொண்ட ராஜமலை தேயிலைத் தோட்ட நிலச்சரிவு! #Rewind2020