முதல்வர் பழனிசாமியை அவதூறாக விமர்சித்த புகாரில் திமுக எம்.பி ஆ.ராசா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை திமுக எம்.பி ஆ.ராசா அவதூறாக பேசியதாக அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் திருமாறன், செல்வக்குமார் ஆகியோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் 153, (505)(1)பி பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்பி ஆதாயம் தேடுதல், குற்றச்செயல்களில் ஈடுபட தூண்டுதல் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
http://dlvr.it/RnW03p
Saturday 12 December 2020
Home »
» முதல்வர் பழனிசாமியை விமர்சித்த புகாரில் ஆ.ராசா மீது வழக்குப்பதிவு!