வங்கக்கடலில் உருவாகியுள்ள புரெவி புயல், தமிழகத்தின் தென் மாவட்டம் வழியாகக் கேரள மாநிலத்தைக் கடந்து செல்லும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. இதைத் தொடர்ந்து கேரள மாநிலம் புயலை எதிர்கொள்ளத் தயாராகிவருகிறது. இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், ``புரெவி புயல் இலங்கைக்கு கிழக்குப் பகுதி வழியாக தமிழ்நாட்டின் தூத்துக்குடி, திருநெல்வேலி வழியாக வரும் வெள்ளிக்கிழமை திருவனந்தபுரத்தை அடையும் எனக் கூறப்படுகிறது.
புரெவி புயல் முன்னெச்சரிக்கை குறித்து பிரதமர் நரேந்திர மோடி தொடர்புகொண்டு பேசியிருந்தார். கேரள மாநிலம் எடுத்திருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் கூறினோம். மத்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி தெற்கு வங்கக் கடலில் ஏற்பட்டிருக்கும் புயல் டிசம்பர் 4-ம் தேதி திருவனந்தபுரம் வழியாகக் கடந்து போக வாய்ப்பிருக்கிறது. பின்னர் மீண்டும் அது தென் தமிழகத்தை அடையும் என்கிறார்கள். வானிலை மையத்தின் அறிவிப்புப்படி டிசம்பர் 4-ம் தேதி காலையில் தென் தமிழகத்துக்கு வரும் புயல் மதிய நேரத்தில் கேரளத்துக்கு வர வாய்ப்பு உண்டு.பினராயி விஜயன்
திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், பத்தணம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம் ஆகிய ஏழு மாவட்டங்களில் கனமழையும், காற்றும் ஏற்படும் என்று முன்னறிவிப்பு வந்திருக்கிறது.
வரும் 3-ம் தேதி (இன்று) முதல் 5 வரை இது தொடரும் என்கிறார்கள். கேரளக் கடலில் டிசம்பர் 2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை கடல் சீற்றம் காணப்படும். ஒரு செகண்டில் 60 முதல் 108 சென்டிமீட்டர் வரை வேகத்தில் 2 முதல் 5 மீட்டர் உயரத்தில் கடல் அலை ஏற்பட வாய்ப்பிருப்பதாக இந்தியன் நேஷனல் சென்டர் ஃபார் ஓசன் இன்ஃபர்மேஷன் சர்வீஸ் முன்னறிவிப்பு கொடுத்திருக்கிறது.
திருவனந்தபுரம், கொல்லம், பத்தணம்திட்டா, ஆலப்புழா கோட்டயம், இடுக்கியின் சில பகுதிகளிலும் ஒரு மணி நேரத்தில் 60 கி.மீ-க்கு மேல் காற்று வீச வாய்ப்பு உண்டு. எர்ணாகுளம் மற்றும் இடுக்கியின் பிற பகுதிகளில் 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசவும், அதி தீவிர மழைக்கும் வாய்ப்பு உள்ளது. தாழ்வான இடத்தில் வெள்ளம் தேங்குதல், மலைப்பகுதியில் மண் இடியவும் சாத்தியக்கூறுகள் உள்ளன. மீன்பிடித் தொழிலாளர்கள் வரும் 5-ம் தேதிவரை மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம்.மழை
டிசம்பர் 3-ல் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா மாவட்டங்களில் ரெட் அலெர்ட்டும், கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி மாவட்டங்களுக்கு ஆரெஞ்ச் அலெர்ட்டும், திருச்சூர், பாலக்காடு மாவட்டங்களுக்கு யெல்லோ அலர்ட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எட்டு தேசியப் பேரிடர் மீட்ப்புக்குழுக்கள் கேரளா வந்துள்ளன. சில மாவட்டங்களில் அணைகள் திறக்கப்பட்டுள்ளன. மாவட்ட அளவில் அதிகாரிகள் ஆலோசனை நடைபெற்று முடிந்துவிட்டது. 2,849 முகாம்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இப்போது 13 முகாம்களில் 175 குடும்பங்களைச் சேர்ந்த 690 பேர் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். அவசரத் தேவைக்கு 1077 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.
பத்தனம்திட்டா மாவட்டத்தில் அதிதீவிர மழைக்கும், கடும் காற்று வீசவும் முன்னறிவிப்பு இருக்கிற்து. எனவே, புயல் கடந்து செல்லும் வரை சபரிமலை பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டிவரும். இது குறித்து தீர்மானம் எடுக்க பத்தனம்திட்டா மாவட்ட பேரிடர் குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையுடன் உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும்" என்றார்.
http://dlvr.it/RmwGDq
Thursday 3 December 2020
Home »
» புரெவி: `சபரிமலையில் கட்டுப்பாடு... உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கைகளை பாதிக்கும்!’ -பினராயி விஜயன்