உத்தரப்பிரதேச மாநிலம் கன்னோஜில், சமாஜ்வாடி கட்சி (SP) தலைவர் அகிலேஷ் யாதவை ஆதரித்து இந்திய கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் உரையாற்றிய ராகுல் காந்தி,``நானும், அகிலேஷ் யாதவும், இந்திய கூட்டணியும் கடந்த இரண்டு ஆண்டுகளில் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்திருக்கிறோம். எனவே நீங்கள் எழுதி வைத்துக்கொள்ளுங்கள், இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மோடி நாட்டின் பிரதமராக முடியாது.பிரசாரத்தின் போது ராகுல் காந்தி
கன்னோஜ் மக்களவைத் தொகுதியில் அகிலேஷ் யாதவின் வெற்றியை உறுதி செய்ய காங்கிரஸ், சமாஜ்வாடி மற்றும் இந்தியா கூட்டணியின் பிற கட்சிகளின் தொண்டர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க மிகப்பெரிய இழப்புக்களைச் சந்திக்கும். ஏனெனில் மக்கள் ஒரு மாற்றத்திற்கு முடிவு செய்து தங்கள் மனதை உருவாக்கியுள்ளனர்.
பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான உரைகளை நிகழ்த்தியிருக்கிறார். அப்போதெல்லாம் அதானி, அம்பானி குறித்துப் பேசவில்லை. நம்மில் யாராவது பயப்படும்போது, அவரவரின் நம்பிக்கையின்படி, அவரைக் காப்பாற்றக்கூடிய நபரின் பெயரைக் கூறுவோம். அப்படிதான் மோடி தனது இரண்டு நண்பர்களின் பெயர்களை எடுத்துக் கொண்டார்.ராகுல் - மோடி, Adani, Ambani
அவரை மீட்க வருமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். மோடி தலைமையிலான அரசு 22 தனிநபர்களின் ரூ.16 லட்சம் கோடி கடன்களைத் தள்ளுபடி செய்திருக்கிறது. அவர் 22 கோடீஸ்வரர்களை உருவாக்கினால், நாங்கள் கோடிக்கணக்கான லட்சபதிகளை உருவாக்குவோம் எனக் காங்கிரஸும் இந்தியக் கூட்டணியும் முடிவு செய்திருக்கிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88``வெள்ளை சட்டை மட்டும் அணிவது ஏன்..?" - ராகுல் காந்தி விளக்கம்
http://dlvr.it/T6hjGF
Friday 10 May 2024
Home »
» ``எழுதி வைத்துக்கொள்ளுங்கள்; இந்த தேர்தலுக்குப் பிறகு மோடியால் பிரதமராக முடியாது!" - ராகுல் காந்தி