தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தின் 46-வது தலைமைச் செயலாளராக கே.சண்முகம் 2019-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி பதவி ஏற்றார். அவர் 60 வயதை எட்டியதால், கடந்த ஜூலை 31-ந் தேதியுடன் அவர் பணி ஓய்வு பெற்றிருக்க வேண்டும். ஆனால் அவருக்கு அக்டோபர் 31-ந் தேதி வரை 3 மாதங்களுக்கு பணிநீட்டிப்பு அளிக்கப்பட்டது. அதன்பின் இந்த ஆண்டு ஜனவரி 31-ந் தேதி வரை பதவிக் காலத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் மத்திய அரசு பணியில் இருந்த ராஜீவ் ரஞ்சன் ஐஏஎஸ் தமிழக அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். எனவே அவர் தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
http://dlvr.it/RrT1hR
Thursday 28 January 2021
Home »
» தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்?