வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு தாயாரா என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மத்திய அரசு நிறுத்தி வைக்கவில்லை என்றால் நீதிமன்றமே நிறுத்தி வைக்க நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ளது வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி விவசாயிகளின் போராட்டம் நீடித்து வரும் நிலையில் அது தொடர்பான வழக்குகளை தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு விசாரித்தது. புதிதாக கொண்டு வரப்பட்ட 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் ஆதரவாகவும் தொடரப்பட்ட வழக்குகள் மற்றும் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் உள்ளிட்டவை தொடர்பான வழக்குகளை இணைத்து விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையில் மத்திய அரசை கேள்விகளால் துளைத்தது உச்ச நீதிமன்றம். ''மத்திய அரசு நிறுத்தி வைத்தால் விவசாயிகளுடன் பேச நாங்கள் குழு அமைக்கிறோம். வேளாண் சட்டங்களை அமல்படுத்தியே தீருவோம் என மத்திய அரசு நினைப்பது ஏன் என்று தெரியவில்லை. விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை'' எனத் தெரிவித்துள்ளது. மத்திய அரசு சார்பில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து விளக்குமாறும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இது குறித்து குறிப்பிட்ட தலைமை நீதிபதி, வேளாண் சட்டங்கள் சிறந்தவை என ஒரு மனுகூட தாக்கல் செய்யப்படவில்லை, யாருடைய ரத்தத்தையும் எங்கள் கைகளில் வைத்திருக்க விரும்பவில்லை என காட்டமாக தெரிவித்துள்ளார்.
http://dlvr.it/RqLdFR
Monday 11 January 2021
Home »
» வேளாண் சட்டங்கள் - மத்திய அரசை கேள்விகளால் துளைத்த உச்ச நீதிமன்றம்