மத்திய அரசின் பத்ம விருதுகளைத் திருப்பியளிக்க வாய்ப்புள்ளதாக வெளியான தகவலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா மறுப்பு தெரிவித்துள்ளார். பிரசாத் ஸ்டூடியோ விவகாரத்தில் அதிருப்தியில் இருப்பதால் இசையமைப்பாளர் இளையராஜா பத்ம விபூஷண் விருதை திருப்பி அளிக்கவுள்ளதாக தகவல்கள் பரவின. இதற்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் கொடுத்திருக்கிறார் இளையராஜா. இதுகுறித்த வீடியோ பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில், ‘பேரன்புக்குரியவர்களே! நான் சொல்லாத ஒரு கருத்தை, ஒரு தனிப்பட்ட நபருடைய கருத்தை நான் சொன்னதாக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இது முற்றிலும் தவறு என்பதை நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அப்படியொரு கருத்தை நான் வெளியிடவே இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்’’ என்று கூறியிருக்கிறார். "நான் மத்திய, மாநில அரசு விருதுகளை திருப்பி அளிக்கவில்லை. அப்படி பரவுவது என் கருத்து இல்லை" - #இசைஞானி #இளையராஜா #ilayaraja #ilayarajafansclub pic.twitter.com/3K2Yl50Ayn — Actor Kayal Devaraj (@kayaldevaraj) January 18, 2021
http://dlvr.it/RqsFqn
Tuesday 19 January 2021
Home »
» "பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்