டெல்லி வன்முறையில் போராட்டக்காரர்களிடையே தனியாக சிக்கிய போலீசை விவசாயிகள் சிலர் பாதுகாத்து காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி நடைபெற்று வருகிறது. 12 மணிக்கு முன்பே விவசாயிகள் போலீசார் அமைத்த தடுப்புகளை மீறி டெல்லிக்குள் நுழைய முயன்றதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. மேலும் அனுமதிக்கப்பட்ட வழிகளை தவிர மற்ற வழிகளில் விவசாயிகள் செல்ல முயன்றதால் போலீசார் தடுத்ததாகவும் அதனால் தள்ளுமுள்ளுவில் தொடங்கிய வன்முறை பின்னர், தடியடி, கண்ணீர் குண்டு வீசி விவசாயிகளை போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்களும் போலீசார் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனிடையே அனுமதிக்கப்பட்ட வழிகளிலேயே செல்வதாகவும் வேண்டுமென்றே வன்முறை தூண்டுவிடப்படுவதாகவும் விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளன தொடர்ந்து வெடிக்கும் வன்முறையால் டெல்லியில் பதற்றம் நிலவி வருகிறது. விவசாயிகள் சிலர் போலீசார் அமைத்த தடுப்புகளை மீறி டிராக்டர் பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் டிராக்டர் பேரணியை தடுக்க போலீஸ் அதிகாரிகள் நாங்லோயில் சாலையில் அமர்ந்திருக்கிறார்கள். Delhi: Police officials sit on road in Nangloi to block the area where farmers holding tractor parade have reached pic.twitter.com/Rjiz26K4dk — ANI (@ANI) January 26, 2021 மத்திய டெல்லியில் உள்ள ஐ.டி.ஓவில் வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போராட்டக்காரர்கள் டிராக்டர்களை போலீசார் மீது மோதும் விதமாக தாறுமாறாக ஓட்டிச்சென்று அச்சுறுத்தினர். #WATCH Violence continues at ITO in central Delhi, tractors being driven by protestors deliberately try to run over police personnel pic.twitter.com/xKIrqANFP4 — ANI (@ANI) January 26, 2021 போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்ப்பாளர்கள் தேசிய தலைநகரின் ஐ.டி.ஓ பகுதியில் டி.டி.சி பேருந்தை சேதப்படுத்தினர். #WATCH Delhi: Protesting farmers vandalise a DTC bus in ITO area of the national capital. pic.twitter.com/5yUiHQ4aZm — ANI (@ANI) January 26, 2021 இத்தகைய போராட்டங்களும் வன்முறைகள் நடைபெற்றாலும் இதற்கு மத்தியில் போலீஸ் அதிகாரி ஒருவர் போராட்டக்காரகள் மத்தியில் தனியாக சிக்கிக்கொண்டார். அவரை மீட்ட விவசாயிகள் சிலர் எதிர்ப்பாளர்கள் போலீஸ் மீது தாக்குதல் நடத்தா வண்ணம் பாதுகாத்து பத்திரமாக அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது #WATCH: A Delhi Police personnel rescued by protesters as one section of protesters attempted to assault him at ITO in central Delhi. #FarmLaws pic.twitter.com/uigSLyVAGy — ANI (@ANI) January 26, 2021
http://dlvr.it/RrMqBr
Tuesday 26 January 2021
Home »
» கதிகலங்கும் டெல்லி: வன்முறைக்குள் ஒரு மனிதாபிமானம்: வைரல் வீடியோ!