கேரள அரசு சார்பில் ஓணம் பண்டிகை, மலையாளப் புத்தாண்டு, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு, கோடைக்காலம் என ஒவ்வொரு சீஸனுக்கு ஏற்றாற்போல லாட்டரிச் சீட்டுகள் விற்பனை நடத்தி, குலுக்கல் மூலம் பரிசு வழங்கப்பட்டுவருகிறது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுப் பண்டிகையை முன்னிட்டு 12 கோடி ரூபாய் முதல் பரிசுகொண்ட லாட்டரிகளை கேரள அரசு விற்பனை செய்தது. ஒரு லாட்டரிச் சீட்டு 300 ரூபாய் என்ற கணக்கில் மொத்தம் 33 லட்சம் லாட்டரிச் சீட்டுகளைக் கேரள அரசு அச்சிட்டு விற்பனை செய்தது. அத்தனை லாட்டரி சீட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. இந்த லாட்டரியில் முதல் பரிசு 12 கோடி ரூபாய், இரண்டாம் பரிசு மூன்று கோடி ரூபாய். அது ஆறு பேருக்கு தலா 50 லட்சம் ரூபாய் என அறிவிக்கப்படிருந்தது. மூன்றாம் பரிசு 60 லட்சம் ரூபாய், ஆறு பேருக்கு தலா 10 லட்சம் ரூபாய் வீதம் வழங்கப்படும் எனவும், நான்காம் பரிசான 30 லட்சம் ரூபாயை, ஆறு பேருக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் என்ற வீதத்தில் பிரித்து வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஐந்தாம் பரிசாக 108 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இது தவிர 1,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரையிலான பரிசுகளும் உண்டு.கேரள லாட்டரி
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பம்பர் லாட்டரிக் குலுக்கல் மூலம் பரிசு பெறுபவர்களைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி நேற்று (ஜன.17) நடந்தது. லாட்டரிக் குலுக்கலில் முதல் பரிசுக்கான சீட்டை திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் ஆர்யா ராஜேந்திரன் எடுத்தார். மேலும் ஆறு கோடி ரூபாய் முதல் பரிசுக்கான சம்மர் லாட்டரி சீட்டையும் ஆர்யா ராஜேந்திரன் வெளியிட்டார். முதல் பரிசான 12 கோடி ரூபாய் X G 358753 என்ற எண்கொண்ட லாட்டரிச் சீட்டுக்கு விழுந்திருக்கிறது.
Also Read: `எப்போதாவது லாட்டரி சீட்டு வாங்குவேன்!' - ரூ.12 கோடி கிறிஸ்துமஸ் பம்பர் பரிசு வென்ற கேரளப் பழங்குடி
நேற்று மதியம் குலுக்கல் முடிந்த நிலையில், நேற்று இரவு தாண்டிய பின்னரும் 12 கோடி ரூபாய் பரிசு விழுந்த லாட்டரிச் சீட்டை வாங்கியவர் யார் என்பது தெரியவரவில்லை. இந்த லாட்டரிச் சீட்டு கொல்லம் மாவட்டம், ஆரியங்காவு பகுதியிலுள்ள பரணி ஏஜென்சீஸ் என்ற லாட்டரி விற்பனை நிலையத்திலிருந்து விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. ஆரியங்காவு தமிழக எல்லைப்பகுதியில் அமைந்திருப்பதால் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாராவது இந்த லாட்டரிச் சீட்டை வாங்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.கிறிஸ்துமஸ் - புத்தாண்டு லாட்டரி
அதிலும் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்புதான் இந்த லாட்டரிச் சீட்டு விற்பனை ஆகியிருப்பதாக அந்த ஏஜென்சியில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். கேரள அரசின் கிறிஸ்துமஸ் - புத்தாண்டு பம்பர் லாட்டரிப் பரிசுச் சீட்டில் முதல் பரிசான 12 கோடி ரூபாய் பெற்ற அதிர்ஷ்டசாலி யார் என கேரளமே தேடிக்கொண்டிருக்கிறது.
http://dlvr.it/RqpyXP
Monday 18 January 2021
Home »
» `லாட்டரி எண் XG 358753; ரூ.12 கோடி பரிசு விழுந்தது யாருக்கு?’ - அதிர்ஷ்டசாலியைத் தேடும் கேரளம்!